What is the best morning drink for low blood pressure: அன்றாட வாழ்வில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் உயர் இரத்த அழுத்தத்தைப் புறக்கணித்து விட்டாலோ அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டாலோ, அது வரும் நாள்களில் சிறுநீரகங்கள், இரத்த நாளங்கள் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தலாம். மேலும் இது உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அன்றாட உணவில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியமாகும். அதன் படி, அன்றாட உணவில் சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அவ்வாறு சில பானங்களை தங்களது வழக்கத்தில் சேர்ப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருத்துவரிடம் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளைப் பெற வேண்டும். இதில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பானங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க வாழைப்பழம் உதவுமா? வேறு என்னென்ன உணவுகள் உதவும் தெரியுமா?
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பானங்கள்
தக்காளி சாறு
தக்காளியில் லைகோபீன் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த இரண்டு கூறுகளும் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் தக்காளியில் பொட்டாசியம் உள்ளது. இவை சோடியத்தின் தீய விளைவுகளை குறைக்கிறது. மேலும் உடலின் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மன அழுத்தத்தால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையைக் கட்டுப்படுத்த, தினமும் காலையில் ஒரு கிளாஸ் தக்காளி சாறு அருந்தலாம். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவுகிறது.
மாதுளை சாறு
மாதுளையில் உள்ள பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாதுளையில் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆத்ரோஜெனிக் ஏஜெண்டுகள் உள்ளன. மாதுளை சாறு அருந்துவது தமனிகளை சுத்தம் செய்வதற்கும், இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, மாதுளை சாற்றில் நல்ல அளவிலான பாலிஃபீனாலிக் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.
செம்பருத்தி பூ டீ
செம்பருத்தி பூக்களை கொதிக்கவைத்து தேநீர் போல அருந்துவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். செம்பருத்தி பூக்களில் சிறிய அளவிலான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இதர தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்நிலையில் தினந்தோறும் காலையில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த செம்பருத்தி தேநீர் அருந்துவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Badam Pisin Benefits: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லதா? அதன் நன்மை தீமைகள் இங்கே!
பீட்ரூட் சாறு
அன்றாட உணவில் பீட்ரூட் சாற்றை சேர்ப்பது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் ஒரு இயற்கையான வழியாகும். உணவில் பீட்ரூட்டைச் சேர்ப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தருவதாகக் கூறப்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள அதிகளவிலான உணவு நைட்ரேட் (NO3), உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு சூப்பர்ஃபுட் ஆக கருதப்படுகிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். உணவில் கொழுப்பு நீக்கப்பட்டபால் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என ஆய்வுகளில் கூறப்படுகிறது. மேலும் பாலில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஒரு சிறந்த காரணமாக அமைகிறது. குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் எளிய வழியாகும்.
இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க நீங்க சாப்பிட வேண்டிய சம்மர் ஃபுட்ஸ் இதோ
Image Source: Freepik