உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க நீங்க சாப்பிட வேண்டிய சம்மர் ஃபுட்ஸ் இதோ

World hypertension day 2025: உயர் இரத்த அழுத்தம் இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனினும், இதை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. அதன்படி, இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு சில உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும்.
  • SHARE
  • FOLLOW
உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க நீங்க சாப்பிட வேண்டிய சம்மர் ஃபுட்ஸ் இதோ

Summer foods for hypertension: பொதுவாக உயர் இரத்த அழுத்தம் என்பது இன்று பலரும் சந்திக்ககூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால், இது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே தான் உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக உலக உயர் இரத்த அழுத்த தினம் (World hypertension day) ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் உயர் இரத்த அழுத்தத்திற்கான அபாயங்கள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் பயனுள்ள மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுவதற்காக கொண்டாடப்படுகிறது.

எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள், வழக்கமான கண்காணிப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் உதவியுடன் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்தவோ முடியும். அதிலும் குறிப்பாக, கோடைக்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு சில பருவகால உணவுகள் உதவுகின்றன. இவை இரத்த அழுத்த மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இதில் நீரேற்றம், பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதுடன், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உணவில் சேர்க்கக்கூடிய கோடைகால உணவுகளைக் காணலாம்.

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் கோடைக்கால உணவுகள்

வெள்ளரிக்காய்

குளிர்ந்த மற்றும் மொறுமொறுப்பான வெள்ளரிகள் அதிகளவிலான நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது கோடையில் புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக பொட்டாசியம் உள்ளது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், சிறுநீர் வழியாக அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றவும் ஏதுவாக அமைகிறது. இவை இரண்டுமே ஆரோக்கியமான அழுத்த அளவைப் பராமரிக்க இன்றியமையாதவை ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: High Blood Pressure: மக்களே உஷார்! நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துமாம்!

தர்பூசணி

கோடைகாலத்தில் விரும்பி சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று தர்பூசணி. இது 90% க்கும் அதிகமான தண்ணீரைக் கொண்டதாகும். எனவே இது நம்பமுடியாத அளவிற்கு நீரேற்றத்தை அளிக்கிறது. இதில் உள்ள எல்-சிட்ரூலின் என்ற அமினோ அமிலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் தமனி செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் உடல் சோடியத்தின் விளைவுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.

தக்காளி

கோடைக்கால ஜூசியான தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. லைகோபீன் ஆனது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் தொடர்பான ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இவை பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை வழங்குகிறது. வெப்பமான கோடைக்காலத்தில் தக்காளியை சாலடுகள், சூப்கள் போன்ற வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். இது இதயத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது.

இலை கீரைகள்

கோடைக்காலத்தில் பொதுவாக இலைக்கீரைகள் அதிகளவிலான நைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கும். மேலும், இவை உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறி, இரத்த நாளங்களை விரிவுபடுத்தி அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய முக்கிய தாதுக்களான மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

பீட்ரூட்

இது நைட்ரேட்டுகளின் ஒரு சக்தி வாய்ந்த களஞ்சியமாகும். இதனால், பீட்ரூட்டை உட்கொண்ட சில மணி நேரங்களுக்குள் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், பீட்ரூட் சாறு குடிப்பது அல்லது கோடைகால சாலட்களில் சமைத்த பீட்ரூட்டைச் சேர்ப்பது போன்றவை குளிர்ச்சியைத் தருவதுடன், இதய அமைப்பையும் ஆதரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க தினமும் நைட் தூங்கும் முன் இத மட்டும் செய்யுங்க

தேங்காய் தண்ணீர்

இயற்கையாகவே இனிப்பு சுவை மிக்க இந்த கோடைக்கால பானம் சர்க்கரை பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். இதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை திரவ சமநிலையை சீராக்க உதவுகின்றன. மேலும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக, கோடைக்காலத்தில் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

மாம்பழங்கள்

இது இனிப்பு சுவையுடன் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு சிறந்த கோடைகால உணவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

பெர்ரி

பெர்ரி பழங்களில் ஃபிளாவனாய்டுகள், குறிப்பாக அந்தோசயினின்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த நாளங்களின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி சிறந்த சுழற்சியை ஊக்குவிக்கிறது. இதன் வழக்கமான நுகர்வு உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

கோடைகால உணவில் இந்த குளிர்ச்சியூட்டும் மற்றும் இதயத்திற்கு ஆதரவான உணவுகளைச் சேர்ப்பது, உடலுக்கு நீரேற்றத்தைத் தருவதுடன், சுறுசுறுப்பாக இருக்க வைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் கணிசமாக உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை மட்டுமல்ல இரத்த அழுத்தத்தையும் கன்ட்ரோலில் வைக்க வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

Image Source: Freepik

Read Next

Fish For Heart Health: கண்ட கண்ட மீன் வாங்காம இந்த மீன் வாங்கி சாப்பிடுங்க! இதயம் ஹெல்த்தா இருக்கும்!

Disclaimer