This common spice may support healthy blood pressure levels: அன்றாட உணவில் பலதரப்பட்ட மூலிகைகளைச் சேர்ப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் ஆனது இனிப்பு மற்றும் நறுமண சுவைக்கு பெயர் பெற்றதாகும். இது சமையல் பயன்பாடுகளைக் காட்டிலும், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் அமைகிறது. குறிப்பாக லேசான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏலக்காய் உதவியாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. ஏலக்காயில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் திறன் போன்றவை காணப்படுகின்றன.
இதன் மூலம் இது இதய ஆரோக்கியத்திற்கான இயற்கையான துணைப் பொருளாக அமைகிறது. எலெட்டாரியா ஏலக்காய் தாவரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படக்கூடிய ஏலக்காய் ஆனது இந்திய, மத்திய கிழக்கு மற்றும் ஸ்காண்டிநேவிய உணவு வகைகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏலக்காயின் சாத்தியமான சுகாதார நன்மைகளையும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க வாழைப்பழம் உதவுமா? வேறு என்னென்ன உணவுகள் உதவும் தெரியுமா?
இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஏலக்காய் தரும் நன்மைகள்
இரத்த நாள செயல்பாடு மற்றும் சுழற்சியை ஆதரிக்க
ஏலக்காயில் உள்ள இயற்கை சேர்மங்கள் இரத்த நாளங்களை தளர்த்தவும், சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து கால்சியம் சேனல் தடுப்பான்களைப் போலவே செயல்படுகிறது.
ஏலக்காய் உட்கொள்ளல் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது. இது தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.
இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தியாக
பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக, உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துடன் தொடர்புடையதாகும். ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் மற்றும் ஆரோக்கியமான இரத்த நாளங்களை ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும் ஏலக்காய் CRP, IL-6 மற்றும் TNF-ஆல்பா போன்ற வீக்கத்தின் குறிப்பான்களைக் குறைக்கக்கூடும் என ஆய்வுகளில் காட்டப்படுகிறது. இது பெரும்பாலும் இதய நோய் அல்லது வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அதிகமாக காணப்படலாம்.
லேசான டையூரிடிக் ஆக
ஏலக்காயில் டையூரிடிக் விளைவு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது இது உடலில் இருந்து கூடுதல் உப்பு மற்றும் தண்ணீரை அகற்ற உதவுகிறது. இது இதயத்தை பம்ப் செய்ய வேண்டிய திரவத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உங்க இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளை தவறாம சாப்பிடுங்க
இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க
ஏலக்காய் உட்கொள்வது சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. ஆய்வு ஒன்றில், 12 வாரங்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய் பொடியை எடுத்துக் கொண்ட முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஆய்வின் முடிவில் இரத்த அழுத்தம் சாதாரண நிலைக்குக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். இது லேசான உயர் இரத்த அழுத்தத்திற்கு ஏலக்காய் ஒரு பயனுள்ள இயற்கை தீர்வாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைப்பது நன்மை பயக்கும்.
ஏலக்காயின் மற்ற ஆரோக்கிய நன்மைகள்
- ஏலக்காய் உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
- இது இயற்கையாகவே சுவாசத்தை புத்துணர்ச்சியூட்ட உதவுகிறது
- இவை உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
- உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராட ஏலக்காய் நன்மை பயக்கும்
- இரத்த சர்க்கரை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த ஏலக்காய் உதவுகிறது.
- ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் கலவையானது, இரத்த அழுத்தத்தைத் தாண்டிய நன்மைகளைக் கொண்டதாக அமைகிறது. இது சக்திவாய்ந்த இதய ஆரோக்கியத்திற்கான தேர்வாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Low BP உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா? எப்போது.. எப்படி சாப்பிடணும்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version