World Hypertension Day 2024: உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? உடனே டவுனாக இந்த மூலிகையை எடுத்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
World Hypertension Day 2024: உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? உடனே டவுனாக இந்த மூலிகையை எடுத்துக்கோங்க

உயர் இரத்த அழுத்தம் காரணமாக பல்வேறு கடுமையான உடல்நல அபாயங்கள் ஏற்படலாம். இதற்கு உணவில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதன் படி, உணவில் சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்ப்பது இரத்த அழுத்த அளவைக் குறைப்பதில் இயற்கையான ஆதரவை வழங்குகிறது. உணவில் இந்த மூலிகைகளைச் சேர்த்துக் கொள்வது சுவையை அதிகரிப்பதுடன் உயர் இரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சாப்பிடும் போது 32 முறை உணவை மென்று சாப்பிடணுமாம்! ஏன் தெரியுமா?

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மூலிகைகள்

ஹைப்பர்டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சில ஆரோக்கியமான மூலிகைகள் மற்றும் மசாலா பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பூர்த்தி செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக போராடலாம்.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் மற்றும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள நிறைந்துள்ள பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க பங்களிக்கிறது.

துளசி

துளசியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இது யூஜெனோலின் வளமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே புதிய துளசியை உணவில் சேர்ப்பது அல்லது தேநீரில் துளசியை உட்செலுத்துவது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்காக உதவுகிறது.

இலவங்கப்பட்டை

உடலில் இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் இலவங்கப்பட்டை உதவுகிறது. இதன் மூலம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசாலாவை உணவில் மிதமான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பயனுள்ள விளைவுகளைப் பெறலாம்.

இஞ்சி

இஞ்சி அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுப்பொருளாகும். இதில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்த நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tulsi Leaves Benefits: வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

பூண்டு

உணவுப்பொருளான பூண்டு உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மூலிகையாகக் கருதப்படுகிறது. பூண்டில் வாசோடைலேட்டரி விளைவுகளுக்கு பெயர் பெற்ற அலிசின் என்ற கலவை நிறைந்துள்ளது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் தமனி சுவர்களில் அழுத்தத்தைக் குறைக்கிறது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி அழற்சி எதிர்ப்பு கலவைகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும். இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது.

ஏலக்காய்

உணவில் நறுமண பொருளாக சேர்க்கப்படும் மூலிகையானது ஏலக்காய் ஆகும். இது இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் கலவைகளைக் கொண்டுள்ளது. பல்வேறு பானங்கள் அல்லது உணவுகளில் ஏலக்காயைச் சேர்த்துக் கொள்வது அதன் சாத்தியமான நன்மைகளைப் பெறுவதற்கு சுவையான வழியாகும்.

செம்பருத்தி

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மூலிகைகளில் செம்பருத்தியும் ஒன்று. செம்பருத்தி தேநீரை அருந்துவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களைத் தளர்த்த உதவுகிறது.

இவை அனைத்தும் உயர் இரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைப்பதற்கான சிறந்த மூலிகைகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Dried Herbs Vs Fresh Herbs: உலர்ந்த மூலிகை Vs புதிய மூலிகை - எது உடலுக்கு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

சாப்பிடும் போது 32 முறை உணவை மென்று சாப்பிடணுமாம்! ஏன் தெரியுமா?

Disclaimer