$
How Many Times Should You Chew Food: நாம் உண்ணும் உணவை சரியாக எடுத்துக் கொள்கிறோமா என்பது பற்றி நீங்கள் யோசித்ததுண்டா? நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதா என்பதை சிந்திப்பவர்கள் சிலரே. அதே சமயம், உணவை சரியாக உண்ணுகிறோமோ என்பது குறித்து யாரும் சிந்தித்ததில்லை. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதா என்பதைச் சிந்திக்கும் அதே வேளையில், உணவை நன்றாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, உணவை எத்தனை முறை மென்று சாப்பிடலாம் என்பது குறித்து காணலாம்.
உணவை மெல்லும் முறை
ஆயுர்வேதத்தின் படி, “வாயில் எவ்வளவு நேரம் உணவை வைத்து மென்று உண்கிறோமோ அதை வைத்தே செரிமான செயல்முறை இருக்கும். மெல்லத் தெரியாவிடில் ஒவ்வொரு வாய்க்கும் குறைந்தது 24 முறையாவது மென்று சாப்பிட வேண்டும்” எனக் கூறப்படுகிறது.
குறைந்தது 30 முதல் 40% அளவிலான உணவை 32 முறை மென்று சாப்பிட்டால் மட்டுமே உண்ட உணவு செரிமானம் அடையும். உணவு செரிமான அமைப்புக்கு பாதியிலேயே செயலாக்கப்பட்டு, உணவிலிருந்து அதிகபட்ச ஆற்றலைப் பெற முடியும். இதில் உணவில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை உடலால் நன்கு உறிஞ்சப்படுகிறது. ஏனெனில், உமிழ்நீரில் உள்ள செரிமான நொதிகள் உணவை உடைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tulsi Leaves Benefits: வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?
உணவை எத்தனை முறை மென்று சாப்பிடலாம்?
ஆரம்பத்தில் உணவை 32 முறை வரை மென்று சாப்பிடுவது கடினமாக இருக்கலாம். ஆனால், மெதுவாக சாப்பிட ஆரம்பித்த உடன், அது ஒரு தசை நினைவகமாக மாறுகிறது. இந்த அற்புதமான அணுகுமுறையானது உணவிலிருந்து அதிகப்படியான ஊட்டச்சத்து மதிப்பைப் பிரித்தெடுக்க உதவுவதுடன், செரிமான செயல்முறையை சீராக்குகிறது.

உணவை 32 முறை மென்று சாப்பிடுவதன் நன்மைகள்
ஆயுர்வேதத்தின் படி, உணவு உண்ணும் போது 32 முறை மென்று சாப்பிடுவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
சிறிய துகள்களாக உடைத்தல்
நாம் உணவை மெல்லும்போது, பற்கள் அதை சிறிய துகள்களாக உடைக்கிறது. இதை வாயில் உள்ள உமிழ்நீரில், மெல்லும் போது கார்போஹைட்ரேட்டுகளை உடைக்கத் தொடங்கும் என்சைம்கள் நிறைந்துள்ளது. எனவே உணவை முழுமையாக மெல்லும் போது உணவுத் துகள்கள் உடலால் எளிதில் செரிமானம் அடைகிறது. மேலும் உறிஞ்சப்படும் அளவுக்கு சிறியதாக இருப்பதையும் உறுதி செய்கிறது.
ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துதல்
உணவை 32 முறை அல்லது அதற்கு மேல் மென்று சாப்பிடும் போது உணவிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களை வெளியிடப்படுகிறது. மேலும் இதில் உணவுத் துகள்களும் சிறியதாகி விடுவதால், உணவில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிவதற்கு ஏதுவாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ghee With Warm Water: வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
எடை இழப்புக்கு
ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதுடன், உணவை நன்கு மென்று சாப்பிடுவதும் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. மேலும் மெதுவாக உண்பதும், உணவை நன்றாக மென்று சாப்பிடுவதும் எடையிழப்புக்கு முக்கியமானதாகும். இதில் மூளைக்கு அதிக நேரம் கிடைப்பதால், அதிகப்படியான உணவைத் தடுக்க உதவுகிறது. உணவை மெதுவாக, மற்றும் அதிகளவு மென்று சாப்பிடுவது எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு
உணவை நன்கு மென்று சாப்பிடுவது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. இவ்வாறு உணவை மென்று உண்பது வயிறு மற்றும் குடல் உணவை எளிதாக செயலாக்க உதவுகிறது. இது தவிர, வாயு, உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் இந்த அணுகுமுறை உதவுகிறது.
அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க
மெதுவாக மற்றும் உணவை நன்றாக மென்று உண்பது நாம் போதுமான அளவு உணவு எடுத்துக் கொண்டோம் என்பதை எடுத்துரைக்கிறது. இதனைப் பதிவு செய்ய மூளைக்கு அதிக நேரம் கிடைக்கிறது. இதன் மூலம் அதிகளவு உணவு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியும்.
உணர்வுடன் உண்ணுதல்
இந்த முறையில் உணவு உண்பது மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. அதே சமயம், உணவை 32 முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை மென்று சாப்பிடுவது கவனத்துடன் சாப்பிடுவதை ஊக்குவிக்கிறது. இது உணவை அதிகம் ரசித்து உண்ணவும், பசி மற்றும் முழுமையை அறியவும் உதவுகிறது.
உணவை மெல்லும் போது மெதுவாகவும், அதிகமாக மென்று உண்பதும் உடலுக்கு இந்த சிறப்பான நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dried Herbs Vs Fresh Herbs: உலர்ந்த மூலிகை Vs புதிய மூலிகை - எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Image Source: Freepik