உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க தினமும் நைட் தூங்கும் முன் இத மட்டும் செய்யுங்க

Follow This Bedtime Routine To Control High Blood Pressure: அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சில ஆரோக்கியமான பழக்கங்களைக் கையாள்வது அவசியமாகும். இதில் உயர் இரத்தக் கட்டுக்குள் வைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய சில இரவு நேர பழக்கங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க தினமும் நைட் தூங்கும் முன் இத மட்டும் செய்யுங்க

Bed time routine that help you blood pressure management: இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் பொதுவானதாக இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம் ஆகும். எனவே உடலில் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பது ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. ஏனெனில், காலப்போக்கில் உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம்.

எனவே இந்த அபாயங்களைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது அவசியமாகும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறை போன்றவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. எனினும், இரத்த அழுத்தத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் பல காரணிகள் உள்ளது. காலை வழக்கத்தைப் போல, சில இரவு நேர பழக்கங்களைக் கையாள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds for blood pressure: எகிறும் இரத்த அழுத்த அளவை குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய விதைகள் என்னென்ன தெரியுமா?

இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும் இரவு நேர பழக்கங்கள்

சில இரவு நேர பழக்கங்களைக் கையாள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அதிக சோடியம் உள்ள சிற்றுண்டிகளைத் தவிர்ப்பது

இரவு நேரத்தில் அல்லது நள்ளிரவு நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடுவது பெரும்பாலும் மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதிலும் பெரும்பாலும், உடனே சாப்பிடக்கூடிய சிற்றுண்டி வகைகளில் சோடியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவ்வாறு அதிகளவு சோடியம் நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்வது, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதற்குப் பதிலாக, புதிய பழங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் இன்னும் சில குறைந்த சோடியம் நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தரமான தூக்கத்தைப் பெறுவது

தூக்கமின்மை உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனஆய்வுகளில் கூறப்படுகிறது. அதாவது தூங்கும் போது இரத்த அழுத்தம் பொதுவாகக் குறைகிறது. எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் கையாள்வதற்கு சீரான மற்றும் நிலையான தூக்க அட்டவணையை முயற்சிக்க வேண்டும். இது உடலில் உள் கடிகாரத்தை சீராக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தளர்வு நுட்பங்கள்

படுக்கைக்கு முன்னதாக, தியானம், ஆழ்ந்த சுவாசம், நினைவாற்றல் அல்லது மென்மையான யோகா போன்ற செயல்பாடுகளை இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தளர்வை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடலில்ூயர் இரத்த அழுத்தத்தைக் கையாளலாம். இது நன்றாக தூங்குவதற்கும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Herbs for blood pressure: எகிறும் உயர் இரத்த அழுத்த அளவை டக்குனு குறைக்க உதவும் மூலிகைகள், மசாலாப் பொருள்கள் இதோ

வசதியான தூக்க சூழலை உருவாக்குவது

நல்ல ஆரோக்கியமான இரவு தூக்கத்தைப் பெறுவதற்கு வசதியான தூக்க சூழலை உருவாக்குவது அவசியமாகும். குளிர்ச்சியான, இருண்ட மற்றும் அமைதியான சூழல் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவுகளில் ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த காலநிலையில் கவனச்சிதறல்கள் மற்றும் நீல ஒளி வெளிப்பாட்டிலிருந்து தள்ளி இருப்பது அவசியமாகும். இந்த சிறிய மாற்றங்களின் மூலம் தரமான தூக்கத்தை ஊக்குவிக்கலாம். இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

மதுவைக் கட்டுப்படுத்துவது

சிலர் நாள் முடிவில் நல்ல ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக மது அருந்துதலை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். எனினும், இது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம். எனவே, உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருப்பவர்கள் மது அருந்துவதைக் குறைப்பது மிகவும் முக்கியமாகும். மது அருந்துவது அந்த நேரத்தில் நிம்மதியாக உணர்வதைத் தந்தாலும், காலப்போக்கில் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதை கடினமாக்கலாம். ஏனெனில் சிறிய அளவு கூட மருந்துகளில் தலையிடலாம் அல்லது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தப்படாவிட்டால் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்!

Image Source: Freepik

Read Next

Drink Water Before Bed: படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்குமா?

Disclaimer