Bedtime rituals for diabetes: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய காரணிகளாகும். உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படுவது பொதுவானதாகும். ஆனால், அன்றாட வாழ்வில் செய்யும் சில பழக்கங்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் எடை அதிகரிப்பை மேலும் மோசமாக்கலாம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பல நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதைக் கட்டுக்குள் வைக்கத் தவறினால் சிறுநீரக பாதிப்பு, இருதய நோய்கள் உள்ளிட்ட கடுமையான உடல்நல சிக்கல்கள் ஏற்படலாம். பல்வேறு காரணிகள் இரத்த குளுக்கோஸ் அளவைப் பாதிக்கலாம். இதில் படுக்கை நேர வழக்கமும் ஒன்றாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் செய்யும் செயல்கள் மற்றும் சாப்பிடக்கூடிய உணவுகள் போன்றவை நீரிழிவு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே சரியான உணவுமுறையைப் பின்பற்றுவது மிக முக்கியமாகும். எனவே சரியான உணவை உட்கொள்வதும், சரியான முறையைப் பின்பற்றுவதும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Protein foods for diabetes: உங்களுக்கு சுகர் அதிகம் இருக்கா? இதோ நீங்க சாப்பிட வேண்டிய புரோட்டின் ஃபுட்ஸ்
நீரிழிவு நோய் கட்டுப்பாடு
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் சில படுக்கை நேர உதவிக்குறிப்புகளைக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். அவ்வாறு, இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளுக்கு உதவும் சில இரவு நேர பழக்கங்களைக் காணலாம்.
இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இரவு நேர பழக்கங்கள்
ஊறவைத்த பாதாம்
இரவில் ஏதாவது சாப்பிட விரும்பினால், ஏழுஊறவைத்த பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, ஊறவைத்த பாதாம்களில் உள்ள டிரிப்டோபான் மற்றும் மெக்னீசியம் போன்றவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன், இரவு நேர பசியையும் சமாளிக்க உதவுகிறது. மேலும் பாதாம் பருப்பை சாப்பிடுவது சர்க்கரை பசியை குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஊறவைத்த வெந்தயம்
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை சீராக்க ஊறவைத்த வெந்தயக் கஞ்சியை எடுத்துக் கொள்ளலாம். இந்த விதைகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது சிறந்த இரத்தச் சர்க்கரை குறைவு பண்புகளைக் கொண்டுள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார். இரவு தூங்கும் முன்பாக, ஊறவைத்த வெந்தயக் கஞ்சியை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு தூங்குமாறு நிபுணர் பரிந்துரைக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: Matcha tea for diabetes: சர்க்கரை நோயாளிகள் மட்சா டீ குடிப்பது நல்லதா? இத தெரிஞ்சிட்டு குடிங்க
கெமோமில் தேநீர்
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கப் கெமோமில் டீயை அருந்தலாம். இந்த டீயில் அழற்சி எதிர்ப்பு, அஸ்ட்ரிஜென்ட் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது.
வஜ்ராசனம் செய்வது
தூங்குவதற்கு முன் சரியான உணவுகளை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல், வஜ்ராசனத்தை செய்வது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என ஊட்டச்சத்து நிபுணர் வலியுறுத்துகிறார். தினமும் 15 நிமிடங்கள் வஜ்ராசனம் செய்வது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுவதாக நிபுணர் கூறியுள்ளார். கூடுதலாக, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இரவு தூங்கும் முன்பாக நீரிழிவு நோயாளிகள் இது போன்ற ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதே சமயம் அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான நடவடிக்கைகளைக் கையாள்வதும் அவசியமாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Diabetes avoid fruits: உங்களுக்கு சுகர் லெவல் அதிகமா இருக்கா? அப்ப நீங்க மறந்தும் இந்த பழங்களை சாப்பிடாதீங்க
Image Source: Freepik