Is matcha tea good for diabetics: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், மூலிகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும், குறிப்பாக காலையில் நாம் அருந்தக்கூடிய தேநீர் பானங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக இருக்கவும் விரும்புவோர்க்கு கிரீன் டீ மிகவும் பிடித்த பானமாக அமைகிறது. அதன் படி, மட்சா டீ என்ற ஒரு வகை பவுடரானது பச்சை தேயிலையும் அதன் ஒத்த ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பிரபலமடைந்துள்ளது.
இதில் ஒன்றாக நீரிழிவு மேலாண்மை இருக்கும். இந்த பானம் தயார் செய்வதற்கு சூடான அல்லது குளிர்ந்த நீரில் பச்சைப் பொடியைக் கலக்கலாம். இந்த பானத்தை அருந்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நீரிழிவு நோயானது இரத்த சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் நாள்பட்ட நிலையைக் குறிக்கிறது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதாக அறியப்படும் கேட்டசின்கள் உள்ளது. இதில் நீரிழிவு நோய்க்கு மட்சா டீ குடிப்பது நல்லதா? என்பதை யோசித்ததுண்டா?
இந்த பதிவும் உதவலாம்: Tea For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இந்த டீயை குடியுங்க!
நீரிழிவு நோய்க்கு மட்சா டீ தரும் நன்மைகள்
ஹெல்த்சைட் தளத்தில் குறிப்பிட்ட படி, மட்சா தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் நீரிழிவு மேலாண்மைக்கு மட்சா தேநீர் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த
நீரிழிவு மேலாண்மையில் மட்சா டீ பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இது இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இந்த வகை மட்சா டீயில் உள்ள பாலிபினால்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
கேட்டசின்கள் நிறைந்த
மட்சா டீயில் வலுவான ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டைக் கொண்ட கேட்டசின்களின் முக்கிய ஆதாரமாக அமைகிறது. ஆராய்ச்சியின் படி, கேட்டசின் வகையில் காணப்படக்கூடிய சில செயலில் உள்ள சேர்மங்கள் எபிகாடெசின் ஆகும். இது இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துதல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை உருவாக்குவதன் மூலம் கேட்டசின்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடையை நிர்வகிக்க
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் எடையைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மட்சா டீ ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மட்சா டீ அருந்துவது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு கட்டுப்பாட்டை ஆதரிக்கிறது. எனவே அதிக எடை கொண்டவராக இருந்தால், எடையைக் குறைக்கவும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் மட்சா டீ சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும் இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை எளிதாக்குகிறது. மட்சா டீ அருந்துவது கொழுப்பை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் எடை நிர்வாகத்தை ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ginger For Diabetes: இஞ்சியை இப்படி எடுத்துக்கிட்டா சர்க்கரை அளவு டக்குனு குறையுமாம்!
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கு
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புகளில் ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படக்கூடியதாகும். இந்த ஏற்றத்தாழ்வானது செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். ஆனால், கிரீன் டீயின் தூள் வடிவமான மட்சா டீ ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பது நீரிழிவு நோய் முன்னேற்றத்திலும், அது தொடர்புடைய சிக்கல்களிலும் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. மேலும் இது இதய நோய், கண் பாதிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற நீரிழிவு தொடர்பான சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது. மட்சா டீ அருந்துவது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க வழிவகுக்கிறது.
நீரிழிவு நோய்க்கு மட்சா டீ தயாரிப்பது எப்படி?
தேவையானவை
- ஆர்கானிக் மட்சா பவுடர் - 1/2 தேக்கரண்டி
- வெந்நீர் - 1 கப்
செய்முறை
- முதலில் மட்சா பொடியை ஒரு கோப்பையில் சலிக்க வேண்டும்.
- இந்த பொடியுடன் சுமார் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- இதை நன்றாகக் கிளறி, கட்டிகள் எதுவும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
- இது நன்றாக பேஸ்ட் ஆன பிறகு, மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து தொடர்ந்து கலக்க வேண்டும். இதை ஒரு கிரீமி அமைப்பைப் போன்று உருவாக்கி மட்சா டீயைத் தயார் செய்யலாம்.
நீரிழிவு மேலாண்மைக்கான இந்த மட்சா டீ அருந்துவது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளைத் தருகிறது. மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, இதில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலமும் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைப்பதன் மூலமும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. எனினும், நீரிழிவு நோயாளிகள் புதிய உணவுகள், பானங்களை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக நிபுணர் அல்லது மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Matcha tea benefits: தினமும் மட்சா டீ குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
Image Source: Freepik