Matcha benefits for skin: உங்க ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்கணுமா? இந்த ஒரு டீ குடிங்க போதும்

What does drinking matcha do for your skin: மட்சா டீ எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பானமாகும். இது சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சரும ஆரோக்கியத்தில் மட்சா டீ என்ன வகையான நன்மைகளைத் தருகிறது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
Matcha benefits for skin: உங்க ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்கணுமா? இந்த ஒரு டீ குடிங்க போதும்

Matcha tea benefits for skin whitening: சரும ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை பலரும் பலவிதமான முயற்சிகளைக் கையாள்கின்றனர். மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை காரணமாகவே சருமத்தில் எரிச்சல், வறட்சியான சருமம் மற்றும் இன்னும் பிற சரும பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். இந்நிலையில் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு இரசாயனங்கள் நிறைந்த சரும பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், சருமத்தைப் பராமரிக்க இயற்கையான தேர்வுகளைக் கையாள்வது நல்லது.

அவ்வாறு சருமத்தைப் பொலிவாக்கவும், பளபளப்பாகவும் வைத்திருக்க மட்சா டீ மிகுந்த நன்மை பயக்கும். மட்சா என்பது முழு பச்சை இலைகளிலிருந்தும் தயாரிக்கப்படும் ஒரு நன்றாக அரைக்கப்பட்ட தூள் ஆகும். இது இலைகளை சூடான நீரில் ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது. மட்சா டீ பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஜப்பானின் பிரபலமான பானமாகும். இது தற்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் பானமாகும். இதில் குறைபாடற்ற சருமத்தைப் பெற மட்சா டீ உட்கொள்வதற்கான காரணங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Powder Benefits: சருமம் மென்மையா, பளிச்சினு இருக்க தேங்காய் பவுடரை இப்படி பயன்படுத்துங்க!

சரும ஆரோக்கியத்திற்கு மட்சா டீ தரும் நன்மைகள்

நீரேற்றத்தைத் தர

மட்சா கிரீன் டீ அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை உடனடியாக அளித்து, வறட்சியைத் தடுக்கிறது. இதன் மூலம் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கலாம். மேலும், இது இயற்கையான ஈரப்பதமூட்டும் பொருளாக செயல்பட்டு பளபளப்பான நிறத்தைத் தருகிறது. மட்சா சருமப் பராமரிப்பு வழக்கத்திற்கு ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது. அதன் படி, மட்சா டீயை ஒரு நாளைக்கு இரு முறை உட்கொள்வது உகந்த முடிவுகளைத் தரும்.

வீக்கத்தைக் குறைப்பதற்கு

மட்சாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. அதன் படி, மட்சாவை உட்கொள்வது சருமத்தில் தோன்றும் முகப்பருக்களைக் குறைக்கவும், சரும எரிச்சலைத் தணிக்கவும் உதவுகிறது. மேலும் இது சரும உணர்திறனையும் மேம்படுத்துகிறது. இந்த ஆரோக்கியமான பானத்தை அருந்துவதன் மூலம் வீக்கத்தைத் தணிக்கலாம். மேலும் இது வீக்கம், சிவத்தல் மற்றும் பருக்களின் தோற்றத்தைக் குறைக்கிறது. கூடுதலாக, தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தைத் தருகிறது.

நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த

மட்சாவில் வைட்டமின் சி, ஈ போன்ற பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான தாதுக்கள் நிறைந்துள்ளது. கொலாஜன் என்பது சருமத்தின் உறுதியையும் நெகிழ்ச்சித்தன்மையையும் பராமரிக்க உதவும் புரதமாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சருமத்தின் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் சருமத்திற்கு மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Matcha tea benefits: தினமும் மட்சா டீ குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த

மட்சா ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் அதாவது முக்கியமாக கேட்டசின்கள் நிறைந்த பானமாகும். இந்த பானத்தை அருந்துவது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஆதாரமாக அமைகிறது. ஏனெனில், இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய மூலக்கூறுகளாகும். இந்நிலையில் மட்சா டீ அருந்துவது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது மற்றும் சரும செல்களை முன்கூட்டிய வயதாவதிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் முகத்தை உறுதியாகவும், இளமையாகவும் வைக்க உதவுகிறது.

நச்சுக்களை நீக்குவதற்கு

மட்சா கிரீன் டீயில் குளோரோபில் நிறைந்துள்ளது. இது ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்பட்டு, சருமத்தை மேம்படுத்துகிறது. மேலும் சருமத்தில் காணப்படும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களை உடனடியாக நீக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. அதிலும் சரும பராமரிப்பு வழக்கத்தில் மட்சாவை எடுத்துக் கொள்வது குடலை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தில் அடைபட்ட துகள்கள் அகற்றுவதை ஊக்குவிக்கவும், வெடிப்புகளைக் குறைக்கவும், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

இவ்வாறு சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் மட்சா டீ முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Skin care Tips: கிரீன் டீ பவுடரின் அற்புதமான நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Gulkand for skin: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்திற்கு குல்கந்து தரும் நன்மைகள் இதோ!

Disclaimer