$
Coconut Powder Uses For Skin: நம் முகத்தின் தோலானது மிகவும் மென்மையானதாகும். சூரிய ஒளி, மண், தூசி, மழை மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை நம் முகச் சருமமே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் முகத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. இதனால் பலரும் முகத் தோலை அழகாகவும், சுத்தமாகவும் மற்றும் பளபளப்பாகவும் காட்டுவதற்கு பல வகையான கிரீம்கள், ஃபேஸ் பேக்குகள், பவுடர்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சந்தையில் கிடைக்கும் பொருள்கள் முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பைத் தரும் எனக் கூறிவிட முடியாது.
இதனைக் கருத்தில் கொண்டு பலரும் இயற்கையான வைத்தியங்களை நாடி வருகின்றனர். இந்த இயற்கை முறைகளைக் கையாள்வது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான முறையாக அமைகிறது. அவ்வாறே தோல் பராமரிப்பு முறையில் உதவும் பல்வேறு இயற்கையான பொருள்களில் தேங்காயும் ஒன்று. அதன் படி, சரும பராமரிப்பில், நாம் தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால், தேங்காய் தண்ணீர் என பலவிதங்களில் பயன்படுத்திப் பார்த்திருப்போம். ஆனால், தேங்காய்த் தூள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. ஆம் தேங்காய் பவுடரும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சரும பராமரிப்பில் தேங்காய் பவுடர் தரும் நன்மைகள் மற்றும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Wrinkles Reducing Tips: முகச்சுருக்கம் சீக்கிரம் மறைய தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்
சருமத்தில் தேங்காய் தூள் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
சருமத்தொற்றுக்களிலிருந்து நிவாரணம்
இன்று பலரும் பல்வேறு காரணங்களால் முகப்பரு போன்ற தோல் நோய்த்தொற்றுகளைச் சந்திக்கின்றனர். இதற்கு சிறந்த தீர்வாக தேங்காய் பொடியைப் பயன்படுத்தலாம். தேங்காய் பவுடரில் லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை போதுமான அளவு உள்ளது. இவை தோல் நோய்த்தொற்றுக்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

ஈரப்பதத்தை வழங்குவதற்கு
தேங்காய் பொடியானது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கும் இயற்கையான எண்ணெய்களைக் கொண்டுள்ளது. இந்த தேங்காய் பொடியை சருமத்தில் தடவுவதன் மூலம் வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்திலிருந்து நிவாரணம் பெற முடியும். இது சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
இறந்த சருமத்தை அகற்றுவதற்கு
சருமத்தில் தேங்காய்ப் பொடியை ஸ்க்ரப் அல்லது ஃபேஸ்பேக்காக பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை மெதுவாக வெளியேற்றுகிறது. இவ்வாறு இறந்த சரும செல்களை அகற்றும் போது சருமம் பளபளப்பானதாக மாறலாம்.
சுருக்கங்களை நீக்குவதற்கு
தேங்காய் பவுடரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை மறைக்கவும் உதவுகிறது. அதன் படி முன்கூட்டிய சுருக்கங்கள் உள்ளவர்கள், தேங்காய் பொடியைப் பயன்படுத்துவதன் மூலம் இளமையான தோற்றத்தைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Skin: முகம் கண்ணாடி போல ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க
சருமத்திற்குத் தேங்காய் பொடியை எவ்வாறு பயன்படுத்துவது?
தேங்காய்ப் பொடியை சருமத்தில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அதில் சிலவற்றைக் காண்போம்.
சரும மாய்ஸ்சரைசர்
தேங்காய் பவுடரை ஜோஜோபா அல்லது பாதாம் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் சேர்த்து ஈரப்பதமூட்டும் கிரீம் தயார் செய்யலாம். இதில் தேங்காய் தூள் எண்ணெயுடன் முழுமையாக கலந்த பிறகு காற்று புகாத கொள்கலனில் சேமிக்க வேண்டும். பின், இந்தக் கலவையை சருமத்திற்கு மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம்.

தேங்காய் பவுடர் ஃபேஸ்பேக்
இந்த ஃபேஸ்பேக் தயார் செய்வதற்கு பாத்திரம் ஒன்றில் 2 ஸ்பூன் அளவு தேங்காய் தூள் மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டரைச் சேர்க்க வேண்டும். இதை சமமாகவும், மெதுவாகவும் முகத்தில் தடவலாம். இவ்வாறு தேங்காய் பொடியை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ்மாஸ்க் பயன்படுத்துவது சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
பாடி ஸ்க்ரப்
தேங்காய் பவுடரை, தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் தயார் செய்ய வேண்டும். இந்த தேங்காய் பவுடர் ஸ்க்ரப் ஆனது சருமத்தை உரிக்கிறது. மேலும் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. எனவே வழக்கமான ஸ்க்ரப்பிற்குப் பதிலாக, தேங்காய்த் தூளில் செய்யப்பட்ட பாடி ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தைப் பொலிவாக்குகிறது.
இவ்வாறு தேங்காய் பவுடரைப் பல்வேறு வழிகளில் சருமத்தில் பயன்படுத்துவது சருமத்தைப் பொலிவாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Camphor Coconut Oil Benefits: சருமத்தை பளபளப்பாக தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்துகோங்க
Image Source: Freepik