Coconut Oil And Turmeric For Wrinkles: உணவுப் பொருளாக விளங்கும் மஞ்சள் பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. மேலும் மஞ்சள் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான உணவுப்பழக்கம், தூக்க முறை, மற்றும் இன்னும் சில காரணங்களால் இளம் வயதிலேயே முகச்சுருக்கங்கள் காணப்பட்டு முதுமை அறிகுறிகளைப் பெறுகின்றனர்.
இந்த முகச்சுருக்கங்களை எளிதில் நீக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். அந்த வகையில் எளிதாக அமைவது தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சளை பயன்படுத்துவதாகும். இவை இரண்டுமே பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இது முகச்சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!
முகச்சுருக்கங்களை நீக்கும் வீட்டு வைத்தியம்
முகச்சுருக்கங்களைக் குறைக்க பலரும் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், இது எந்த குறிப்பிடத்தக்க விளைவையும் ஏற்படுத்துவதில்லை. இது தவிர, முகச் சுருக்கங்களை மறைக்க போடோக்ஸ் சிகிச்சை அல்லது காஸ்மெடிக் அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது செலவு மிகுந்தது.
எனவே, அதிக செலவு செய்யாமல், எளிதான முறையில் சுருக்கங்களை நீக்க முயற்சிக்கலாம். இப்போது முகச்சுருக்கங்களைக் குறைப்பதுடன் முகத்தை பளபளப்பாக வைக்க உதவும் தேங்காய் எண்ணெய், மஞ்சள் கலவை குறித்து காணலாம்.
முகச்சுருக்கங்கள் நீங்க மஞ்சள் பயன்படுத்துவது எப்படி?
பொதுவாக மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. இது முகத்திற்கு பளபளப்பைத் தருகிறது. மேலும் மஞ்சளைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த, முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் குறையும்.
இந்த பதிவும் உதவலாம்: Cracked Heels Remedies: குதிகால் வெடிப்பைக் குணப்படுத்த சிறந்த வீட்டு வைத்திய முறைகள்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ளலாம்.
- இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் நன்கு தடவ வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து, இது காய்ந்த பின்னர், முகத்தை சுத்தமான நீரில் கழுவலாம்.

இரவு முழுவதும்
முகத்தில் சுருக்கங்களைப் போக்க ஓர் இரவு முழுவதும் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை அப்படியே விட்டு விடலாம். பின் காலையில் இளநீரில் முகத்தைக் கழுவினால், சில நாள்களில் சுருக்கங்கள் குறைவதை உணரலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை இறுக வைக்கிறது. மேலும், மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை முகச்சுருக்கங்கள், புள்ளிகளை நீக்குகிறது. முகத்தில் காணப்படும் சுருக்கங்களை நீக்க இந்த கலவை சிறந்த வீட்டு வைத்திய தேர்வாக அமையும்.
இந்த பதிவும் உதவலாம்: Remove Acne Scars: முகப்பருக்களை நீக்க பின்பற்ற வேண்டிய இயற்கையான முறைகள்
Image Source: Freepik