Expert

Honey For Face Wrinkles: முகச்சுருக்கத்தால் பிரச்சனையா? தேனுடன் இந்த பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Honey For Face Wrinkles: முகச்சுருக்கத்தால் பிரச்சனையா? தேனுடன் இந்த பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க

மாற்றாக, இயற்கை முறைகளைக் கையாள்வது நல்லது. முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளைக் குறைக்க வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கை வழியைக் கையாளலாம். அந்த வகையில் முகத்திற்கு தேன் பயன்படுத்துவதன் மூலம் முகச்சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளைக் குறைக்கலாம். இதில் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்க தேன் பயன்படுத்தும் முறைகள் குறித்து நொய்டாவில் உள்ள ஸ்டுடியோ 25 பியூட்டி பார்லரின் அழகு நிபுணர் பூஜா அவர்கள். சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Home Remedies for Toothache: பாடாய் படுத்தும் பல் வலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

சுருக்கங்கள் மற்றும் புள்ளிகள் நீங்க தேன்

முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க தேனுடன் சில பொருள்களைச் சேர்த்து பயன்படுத்தலாம்.

தேனுடன் பச்சைப்பால்

முகத்தில் தழும்புகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க 1 டீஸ்பூன் தேனுடன், 1 டீஸ்பூன் பச்சைப்பாலுடன் கலந்து கலவையைத் தயார் செய்யலாம். இதை முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து காய்ந்த பிறகு சுத்தமான நீரில் கழுவலாம். பச்சைப்பாலில் தேன் கலந்து தடவுவது முகச்சுருக்கத்தைக் குறையலாம். மேலும், முகம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.

தேன் மற்றும் பச்சைப்பால் நன்மைகள்

  • பச்சைப்பால் மற்றும் தேனை சருமத்திற்குப் பயன்படுத்துவது சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
  • பால் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இது சருமத்தை சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த 3 பொருட்கள் போதும்.!

முல்தானி மிட்டியுடன் தேன்

2 டீஸ்பூன் அளவு முல்தானி மிட்டியை 1 டீஸ்பூன் தேன் கலந்து கலவையைத் தயார் செய்து, பின் முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். தினந்தோறும் இரவில் இதை செய்யலாம். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து, புதிய தண்ணீரில் கழுவி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு இரவில் தேனுடன் முல்தானி மிட்டியைப் பயன்படுத்தினால், முகத்தில் வித்தியாசத்தைக் காணலாம். தூங்கும் போது சருமம் உள்ளிருந்து குணமாவதால், இரவில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

தேன் மற்றும் முல்தானி மிட்டி நன்மைகள்

  • தேனில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தை பளபளப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • இவை இரண்டையும் கலந்து தடவுவதன் மூலம், சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சி பிரச்சனை குறைகிறது.
  • தேன் மற்றும் முல்தானி மிட்டியை தடவுவதன் மூலம் பருக்கள் மற்றும் புள்ளிகள் பிரச்சனையைக் குறைக்கலாம்.

இந்த இரண்டு பொருள்களையும் தேனுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்கலாம். எனினும் சருமம் உணர்திறன் மிக்கதென்பதால், வேறு தோல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இந்த முறையைக் கையாளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Neem Powder Benefits: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்கும் வேப்பம்பூ பொடி. எப்படி பயன்படுத்துவது?

Image Source: Freepik

Read Next

Anal Itching Remedies: ஆசனவாய் அரிப்பை போக்கும் சூப்பர் வீட்டு வைத்தியம்!

Disclaimer