Neem Powder Benefits: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்கும் வேப்பம்பூ பொடி. எப்படி பயன்படுத்துவது?

  • SHARE
  • FOLLOW
Neem Powder Benefits: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்கும் வேப்பம்பூ பொடி. எப்படி பயன்படுத்துவது?


Neem Powder Benefits And How To Use It: பொதுவாக வேப்ப இலைகள் கசப்பான தன்மை கொண்டிருப்பினும், அவை பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. வேப்ப மரத்தில் உள்ள இலைகள் மட்டுமல்லாமல், பூக்களும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

வேப்பம் பூவில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்த பொடி செய்ய, வேப்ப இலைகளை உலர்த்திப் பொடி செய்யலாம். இந்தப் பொடி, தோல் மற்றும் முடி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை நீக்குகிறது. வேப்பம்பூ பொடி தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pink Lips Home Remedies: அழகான பிங்க் நிற உதட்டைப் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க

வேப்பம்பூ தரும் நன்மைகள்

வேப்பம்பூ உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

முகப்பரு நீங்க

சருமத்தில் உள்ள முகப்பருக்களை நீக்க வேப்பம்பூ உதவுகிறது. இவை இயற்கையாகவே, முகப்பரு பிரச்சனைகளைத் தீர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதற்கு, 1 டீஸ்பூன் வேப்பம்பூ பொடியை 2 டீஸ்பூன் தயிருடன் கலந்து கலவையைத் தயார் செய்யலாம். இதை முகத்தில் 20-25 நிமிடங்கள் வரை தடவவும். அதன் பிறகு, சாதாரண நீரில் முகத்தை கழுவி விடலாம். வேப்பம் பூ பொடியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், முகப்பருவை எளிதில் நீக்க உதவுகிறது.

தோலழற்சியிலிருந்து நிவாரணம்

தோல் சம்பந்தமான பிரச்சனை எக்ஸிமா என அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனை ஏற்படும் போது சருமத்தில் உலர்ந்த புள்ளிகள், சிவத்தல், அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த அரிக்கும் தோலழற்சியில் இருந்து நிவாரணம் பெற வேப்பம்பொடியை பயன்படுத்தலாம். 1 டீஸ்பூன் வேப்பம்பூ பவுடர், ¼ டீஸ்பூன் மஞ்சள் மற்றும் தண்ணீர் கலந்து கலவையைத் தயார் செய்து, இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இவை எக்ஸிமாவில் இருந்து நிவாரணம் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Drink: நெஞ்செரிச்சலுக்கு காலையில் இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்

ஒட்டுண்ணிகளை அகற்ற

வேப்பம்பூ பொடியை பயன்படுத்துவது, தலையில் உள்ள ஒட்டுண்ணிகளன பேனை நீக்க உதவுகிறது. வேப்பம்பூ பொடியை தண்ணீருடன் சேர்த்து கலவை தயாரித்து இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், பேன் முட்டைகளை குஞ்சு பொரிக்காமல் தடுக்கவும், பேன்களைக் கொல்லவும் உதவுகிறது. வேப்பம்பூ பொடி எடுத்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

பற்கள் ஆரோக்கியத்திற்கு

வேப்பம்பொடி பல் பிரச்சனைகளை எளிதில் நீக்க உதவுகிறது. இவை ஈறுகளை வலுவாக்குவதுடன், வாய் துர்நாற்றத்தை எளிதாக நீக்க உதவுகிறது. வேப்பப் பொடியை பற்பசை போன்று பயன்படுத்தலாம்.

பொடுகு பிரச்சனை நீங்க

வேப்பம் பூ பொடி, தலையில் உள்ள பொடுகை எளிதில் நீக்க உதவுகிறது. பொதுவாக, பொடுகு பிரச்சனை வறண்ட ஸ்கால்ப் காரணமாக ஏற்படலாம். பொடுகுத் தொல்லையை நீங்க, வேப்பம்பொடியைப் பயன்படுத்தலாம். வேப்பம் பொடியை தண்ணீரில் கலந்து, கலவையை முடியின் வேர்களில் தடவி, 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் முடியை சாதாரண நீரில் கழுவ, பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Neck Pain Relief Tips: தீராத கழுத்து வலியிலிருந்து விடுபட இதைச் செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Nose Bleeds During Pregnancy: கர்ப்பிணி பெண்களுக்கு மூக்கில் இரத்தம் வருதா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer