Pink Lips Home Remedies: அழகான பிங்க் நிற உதட்டைப் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Pink Lips Home Remedies: அழகான பிங்க் நிற உதட்டைப் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க


கருப்பு நிற உதட்டிற்கான காரணங்கள்

உதட்டின் இயற்கையான நிறம் மறைந்து, கருப்பு நிறமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதடுகள் கருமையாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதன் படி, அதிகமான காஃபின் எடுத்துக் கொள்ளுதல், புகைப்பிடிப்பது, ஒவ்வாமை, புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு போன்றவை கருப்பு நிற உதட்டிற்குக் காரணமாகும்.

இளஞ்சிவப்பு உதட்டைப் பெற உதவும் வீட்டு வைத்தியங்கள்

உதடு வறண்டு போகுதல், வெடிப்பு ஏற்பட்டு காணப்படுதல், கருப்பு நிறம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Sore Throat Remedies: குளிர்காலத்தில் தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா? இத முயற்சி செய்யுங்க

பீட்ரூட்

இயற்கையான முறையில் இளஞ்சிவப்பு உதட்டைப் பெற சிறப்பான வழி பீட்ரூட் பயன்படுத்துதல் ஆகும். இது நிரந்தரமாக உதட்டில் உள்ள கருமையை நீக்க உதவுகிறது. தினமும் பீட்ரூட்டை உதட்டின் மீது தடவி வர உதட்டின் கருமையை நீக்கி இளஞ்சிவப்பு நிற உதட்டைப் பெறலாம். மேலும் தினமும் பீட்ரூட் சாற்றைக் குடிப்பதன் மூலம், உதடு இளஞ்சிவப்பு நிறம் அடைவதுடன், சருமம் அழகாக மாறுவதையும் உணரலாம்.

மாதுளை விதைகள்

மாதுளை விதைகள் உதட்டிற்கு இயற்கை நிறத்தைத் தருவதுடன், மிருதுவான தன்மையையும் அளிக்கிறது. மாதுளை விதைகளைப் பயன்படுத்தி, லிப் ஸ்க்ரப் தயாரித்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உதட்டிற்கு இயற்கை பொலிவை உருவாக்கி விடலாம். 2 டேபிள் ஸ்பூன் மாதுளை பழ விதைகளை பிழித்து சாறு எடுத்து அதில் சிறிது மில்க் கிரீம் சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கலக்கவும். இதைத் தடவி 10 நிமிடங்கள் வைத்துப் பிறகு சுத்தமான துணி கொண்டு துடைக்கவும். உதடு மிகவும் பளபளப்பாக பிங்க் நிறத்தில் மாறிடுவதைக் காணலாம் அல்லது இரவு முழுவதும் கூட உதட்டில் தடவி வைத்திருக்கலாம்.

கற்றாழை ஜெல்

பல்வேறு விதமான சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கற்றாழை உதவுகிறது. அதன் படி, கற்றாழை ஜெல்லை இளஞ்சிவப்பு உதட்டைப் பெற பயன்படுத்தலாம். கற்றாழையின் ஜெல்லை நன்கு மசித்து பேஸ்ட்டாக தயாரித்து அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவவும். இரவு தூங்கும் முன் இதைத் தடவி, காலை எழுந்தவுடன் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வது உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கி விடும். இதனைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், உதட்டில் காணப்படும் வித்தியாசத்தை உணரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Neck Pain Relief Tips: தீராத கழுத்து வலியிலிருந்து விடுபட இதைச் செய்யுங்க

சர்க்கரை

பெரும்பாலானோர்க்கு உதடு வறண்டு, வெடிப்பு போன்றவை ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகும். குறிப்பாக, குளிர்காலத்தில் இந்த பிரச்சனை மிகவும் மோசமாக ஏற்படக்கூடும். வறண்ட காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படும் போது, உதட்டின் மேல் தோலை நீக்க வேண்டியது அவசியம். அதற்கு சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்தி இளஞ்சிவப்பு உதட்டைப் பெறலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை எடுத்து அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை லிப் ஸ்கிரப்பாக உதட்டின் மீது தடவி தேய்க்கலாம். இவ்வாறு செய்வது உதட்டின் மேற்பகுதியில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீங்கி விடும். ஸ்கிரப் செய்த பின், உதட்டைத் தண்ணீர் அல்லது துணி வைத்து சுத்தம் செய்திடலாம்.

தேன்

தேன் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த மற்றும் அதீத சுவை மிக்கதாகும். இதில் உள்ள மருத்துவ குணங்கள், உதட்டில் உள்ள கருமையைப் போக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாறு, பாதாம், ஓட்ஸ் மற்றும் தேன் கலந்த சாற்றை உதட்டில் தடவி 5 நிமிடம் ஊறவைக்க வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வர, உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உதடிற்கு பளபளப்புத் தன்மையைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cracked Mouth Corner Treatment: வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Blood Pressure: வீட்டிலேயே இரத்த அழுத்தம் சரிபார்க்க சரியான நேரம் எது?

Disclaimer