Cracked Mouth Corner Treatment: வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Cracked Mouth Corner Treatment: வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க


வாயில் ஏற்படும் வெடிப்பைக் குணப்படுத்துவதற்கான வீட்டு வைத்தியம்

சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் வாயில் ஏற்படும் வெடிப்பைக் குணப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Honey for kids cough : குழந்தையின் இருமல் ஒரே இரவில் குணமாக தேனை இப்படி கொடுங்க!

கற்றாழை ஜெல்

இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை ஜெல் பல வித நன்மைகளைத் தருகிறது. இந்த ஜெல் ஆனது குளிரூட்டும் பண்புகளைக் கொண்டு வாயின் வெடிப்பினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. புதிய கற்றாழையில் இருந்து ஜெல்லைத் தனியாகப் பிரித்தெடுத்து, அதனை வாயின் வெடிப்புப் பகுதியில் தடவி 15 நிமிடம் வரை வைக்கவும். பின் வெது வெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

தேன்

தேன் ஒரு இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது. இதில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் வாயின் வெடிப்புப் பகுதியை குணப்படுத்தும் தன்மைகளைக் கொண்டுள்ளது. இது வாயில் விரிசல் உண்டாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், சாத்தியமான தொற்றுகளையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட இடத்தில் தேனைத் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு விட வாயின் விரிசல் விரைவில் குணமாவதைக் காணலாம்.

தேங்காய் எண்ணெய்

இயற்கையான ஈரப்பதத்தையும், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டதாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இதை வாயின் வெடிப்பு பகுதியில் தடவுவதன் மூலம், பாதிக்கப்பட்ட இடத்தை நீரேற்றம் செய்ய உதவுகிறது. மேலும், இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் விரைவில் நிவாரணம் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Knee Pain Remedies: மூட்டு வலி காணாமல் போக சிம்பிள் டிப்ஸ்!

வைட்டமின் ஈ ஆயில்

இவை காப்ஸ்யூல் வடிவில் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி தோலை சரி செய்யலாம். மேலும், இவை புத்துணர்ச்சியைத் தரக்கூடியதாகும். வெடிப்பு ஏற்பட்ட வாய் பகுதிகளில் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைத் திறந்து அதில் உள்ள எண்ணெயை வைக்கவும். இவை தோல் வெடிப்புகளைச் சரி செய்ய உதவுகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட காய்கறி வகையாகும். இவை உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், வாயின் மூலைகளில் ஏற்படும் விரிசல் அல்லது வெடிப்புகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை ஈரப்பதத்துடன் வைத்து வீக்கத்தைக் குறைக்கலாம். வாயின் ஓரங்களில் ஏற்படும் விரிசல்களை குணமாக்க வெள்ளரி துண்டுகளை சுமார் 15 நிமிடங்கள் மெதுவாக வைக்கவும்.

வெதுவெதுப்பான உப்பு நீர்

வெதுவெதுப்பான உப்புநீர், கிருமி நாசினிகளின் தீர்வாக அமைகிறது. எனவே, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து மெதுவாக வாயை கொப்பளிக்கலாம். மேலும், விரிசல் ஏற்பட்ட இடத்தைச் சுத்தம் செய்யலாம். இது தொற்று நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்ல ஆனது வாயின் மென்மையான தோல் பகுதியில் ஏற்படும் எரிச்சலை நீக்கி ஈரப்பதம் அடையச் செய்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட வாயின் மூலைகளில் ஜெல்லியின் மெல்லிய அடுக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மோசமான விளைவை ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்கலாம்.

ஊட்டச்சத்து சமநிலை

சில ஊட்டச்சத்துகள் குறைபாட்டின் மூலமும் வாயில் ஏற்படும் விரிசலைக் குணமாக்கலாம். அதன் படி, வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம் மற்றும் சில தாதுக்களின் குறைபாடுகளால் வாய் மூலைகளில் விரிசல் உண்டாகலாம். இதனைத் தடுக்க ஊட்டச்சத்து மிக்க சீரான உணவைச் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.

நீரேற்றமாக வைத்திருத்தல்

வாயைச் சுற்றி இருக்கும் மென்மையான தோல் உட்பட ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்திற்கும் நீரேற்றத்தை உறுதி செய்வது அவசியம் ஆகும். மேலும் உதடு வறண்டு போகாமல் ஈரப்பதத்தை பராமரிக்க அடிக்கடி நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம் ஆகும்.

தவிர்க்க வேண்டிய காரணிகள்

வாயில் புண்கள் அல்லது விரிசல் அல்லது வெடிப்புகள் ஏற்பட்டிருப்பின், நிலைமையை மோசமாக்கும் வகையில் அமையும் அமில அல்லது கார உணவுகள் போன்ற எரிச்சலூட்டும் பொருள்கள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த வீட்டு வைத்தியங்களைக் கொண்டு, வாயின் மூலைகளில் அல்லது உதடுகளில் ஏற்படும் விரிசல்களுக்கு நிவாரணம் அளிக்கலாம். அதே சமயம், இவை நீடித்தால் அல்லது மோசமடைந்தால் சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சில சமயங்களில் நிபுணரின் அறிவுரைக்கேற்ப தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Jaundice Treatment: பிறந்த குழந்தைகளின் மஞ்சள் காமாலைக்கான இயற்கை சிகிச்சை முறைகள்

Image Source: Freepik

Read Next

Blood Pressure Remedies: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அருமையான வீட்டு வைத்தியம்!

Disclaimer