Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!

  • SHARE
  • FOLLOW
Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!

பல வீட்டு வைத்தியங்கள் தொண்டை வலியிலிருந்து விடுபட உதவும். மஞ்சள் முதல் தேன் வரை, தொண்டை புண்ணை ஆற்றக்கூடிய பல பொருட்கள் நம் சமையலறையில் உள்ளன. தொண்டை வழியை நீக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Detox Liver: இதை குடித்தால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கும்!

தொண்டை வலிக்கு மஞ்சள் பால்

இயல்பாக நமது வீடுகளில் சளி அல்லது காய்ச்சல் இருந்தால் மஞ்சள் கலந்த பால் குடிக்க கொடுப்பார்கள். இது, கிருமிகளை அளிக்கும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். அது உண்மைதான். பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் கலந்து குடித்தால் தொண்டை வலி நீங்கும். மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த கிருமி நாசினி. இது தொண்டையில் உள்ள புண்களை நீக்கி உங்களுக்கு வழியில் இருந்து நிவாரணம் தரும்.

அதிமதுரம்

அதிமதுரம் தொண்டை வலியைப் போக்க சிறந்த மூலிகை. தொண்டை புண், வலி ​​மற்றும் இருமல் போன்றவற்றுக்கு அதிமதுரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் ஒரு சிறு துண்டை வாயில் வைத்து சிறிது நேரம் எச்சிலுடன் விழுங்கவும். சிறிது நேரத்திலேயே வழியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : control blood pressure levels: உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த இதை குடியுங்கள்!

இஞ்சி டீ

இஞ்சி டீயும் தொண்டை வலியை போக்க உதவும். அதில், சில துளசி இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி டீ தொண்டை வீக்கத்தை குறைக்கிறது. துளசி இலைகளின் கஷாயமும் தொண்டை புண் மற்றும் சளியை நீக்கும். நீங்கள் டீ குடிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தேன் சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.

தொண்டை புண் நீக்க தேன்

தொண்டை வலியை நீக்குவதில் தேன் அருமருந்து. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பருகலாம் அல்லது கருப்பு மிளகு மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இல்லையெனில், 1 டீஸ்பூன் தேனை நக்கி, பின்னர் வெதுவெதுப்பான நீரை குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Image Credit:Freepik

Read Next

Honey for kids cough : குழந்தையின் இருமல் ஒரே இரவில் குணமாக தேனை இப்படி கொடுங்க!

Disclaimer