$
Knee Pain Remedies: முழங்கால் வலி என்பது நமது மொத்த செயல்பாட்டையும் குறைக்கும். நீண்ட நேரம் நின்றும் வேலை செய்ய முடியாது, நீண்ட நேரம் அமர்ந்தும் வேலை செய்ய முடியாது, சரி கொஞ்ச நேரம் நடந்துக் கொடுக்கலாம் என்றாலும் அதுவும் நீண்ட நேரம் செய்ய முடியாது. எலும்பு தேய்மானம், வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழங்கால் வலி ஏற்படுகிறது. வயதுக்கு ஏற்ப மூட்டு வலி தன்மை மாறுபடுகிறது.
மூட்டு வலி காணாமல் போக வீட்டு வைத்தியம்
முன்பெல்லாம் மூட்டு வலி என்றால் அது 50 வயதுக்கு மேலான காலக்கட்டத்தில் தான் வரும் என்ற நிலை இருந்தது ஆனால் இப்போது 30 வயதை தொட்டாலே மூட்டு வலி வரத் தொடங்குகிறது. முழங்கால் வலியில் இருந்து விடுபட உடற்பயிற்சி சிறந்த மாற்றாகும். முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் முழங்கால் அறுவை சிகிச்சை போன்ற தீவிரத்தை தடுக்கலாம்.
இதையும் படிங்க: முத்து போன்ற வெண்மையான பற்களுக்காக இயற்கையான பல் பொடி
மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்சனை
உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. குருத்தெலும்பு தேய்மானத்தால் கீல்வாதம் ஏற்படுகிறது. வயதான காலத்தில் குருத்தெலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. அதிக எடையாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஆரம்பத்தில் படிக்கட்டுகளில் ஏறும்போதும், நடக்கும்போதும் முழங்கால் வலியை அனுபவிப்பார்கள்.

இதைத் தொடர்ந்து மூட்டுகளில் வீக்கம், முழங்கால் சிவத்தல், பலவீனம், பின்னர் முழங்கால் முழுவதும் பரவும் பயங்கரமான வலி என அடுத்தடுத்த தாக்கங்கள் ஏற்படும்.
பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை
முழங்கால் வலியின் தொடக்கத்தில், நோயாளிகள் ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனையின்படி சில உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். மற்றவர்கள் வலி நிவாரணத்திற்காக வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகிறார்கள். நிவாரணிகள் பயன்படுத்துவது தற்காலிக தீர்வு என்றாலும் இது நிரந்தரமான முடிவு கிடையாது.
முழங்காலை வலுப்படுத்துவது எப்படி?
பொதுவாக முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த முழங்கால் நீட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்த உபகரணமும் இல்லாமல் வெறும் நாற்காலியைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இந்தப் பயிற்சியை வாரம் இருமுறை செய்து வந்தால் முழங்காலின் வலிமை அதிகரித்து வலி குறையும் என கூறப்படுகிறது.
வலி உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்
முழங்கால் பிரச்சனை உள்ளவர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதையும் சரிவுகளில் நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மூட்டு வலி பிரச்சனை தீவிரம் அடையும் எந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். எந்த ஒரு பிரச்சனையும் இருக்கும் போது அதை படிப்படியாக சரி செய்து அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முடியும் என்று நம்பி முயற்சிப்பது பாராட்டத்தக்கது ஆனால் அதேநேரத்தில் பாதிப்பை தீவிரப்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வீட்டு வைத்தியம்
அரை டீஸ்பூன் மிளகு, டீஸ்பூன் சீரகம், டீஸ்பூன் வெந்தயம் உள்ளிட்டவையை எடுத்துக் கொள்ளவும். பின்,வெந்தயத்தை மிக்ஸியில் அரைக்கவும். இந்த வெந்தயப் பொடியை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே மிக்ஸியில் கருப்பட்டியைச் சேர்த்துக் கலக்கவும். மிருதுவான மாவை உருவாக்க சல்லடை செய்யவும். இப்போது மீண்டும் அதே பாத்திரத்தில் சீரகத்தை எடுத்து கலக்கவும். அதை வடிகட்டி அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். இந்த கலவையை காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்கவும். இப்போது ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு கலவையை சேர்த்து கலக்கவும். இது சற்று கசப்பாக இருக்கும் எனவே சுவைக்காக வெல்லம் சேர்த்து அருந்தலாம்.

இந்த சாற்றை குடித்து வந்தால் முழங்கால் வலி குறையும், மேலும் உடலை வலுப்படுத்தும். இந்த சாற்றை தினசரி என்ற வீதம் 20 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை எடுத்துக் கொள்வது மிக நல்லது.
சஷங்காசனம் செய்யும் முறை
தண்டாசனத்தில் அமர்ந்து வஜ்ராசத்திற்கு வர வேண்டும். மூச்சை வெளிவிட்டு இரு கையையும் தலைக்கு மேலாக நீட்டவும். முன்னோக்கி குனிந்து தரையில் கைகளை முன்னோக்கி நீட்ட வேண்டும். நெற்றியை தரையில் வைத்து 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இதே நிலையில் இருக்க வேண்டும். இந்த யோகாசனம் செய்யும் போது உங்கள் முழங்கால் உட்பட உடல் முழுவதிற்கும் நல்லது.
இதையும் படிங்க: control blood pressure levels: உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த இதை குடியுங்கள்!
இந்த நடைமுறைகள் முழங்கால் வலியை குறைக்க உதவும் என்றாலும் வலியின் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகவது சிறந்த முடிவாகும்.
image source: freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version