Banana for joint pain: அடடே! மூட்டு வலி காணாம போக இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதுமா?

Is banana good for joint pain: மூட்டு வலி இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதிலிருந்து விடுபட பலரும் பல்வேறு இயற்கை வைத்தியங்களைக் கையாள்கின்றனர். மூட்டு வலியிலிருந்து விடுபட வாழைப்பழம் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் மூட்டு வலிக்கு வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
Banana for joint pain: அடடே! மூட்டு வலி காணாம போக இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதுமா?

Are bananas good for joint health: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மூட்டு வலி பிரச்சனையைச் சந்திக்கின்றனர். இதற்கு பலரும் மருத்துவ உதவியை நாடுவர். எனினும், மூட்டு வலியிலிருந்து விடுபட சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். நமக்கு எளிதாக கிடைக்கும் சில பழங்களும் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அவ்வாறு வாழைப்பழம் இனிப்பு சுவை மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளாகக் கொண்டதாகும். குறிப்பாக மாதவிடாய் பிடிப்புகள் அல்லது இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இது மூட்டு வலிக்கு தீர்வாக அமையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக காலை உணவு மற்றும் மதிய சிற்றுண்டிகளில் சேர்க்கும் வாழைப்பழம் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வாழைப்பழம் உட்கொள்வது உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே தான் இது மூட்டு வலிக்கு சரியான தீர்வாக இருக்கும். இதில் ஆரோக்கியமான தேர்வாகவும், எளிய மற்றும் பயனுள்ள வழியாகவும் மூட்டு வலியைக் குணமாக்க வாழைப்பழம் தரும் நன்மைகளையும், எடுத்துக் கொள்ளும் முறை குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Joint pain causes: உஷார்! இந்த உணவுகளை சாப்பிட்டா உங்களுக்கு மூட்டுவலி அதிகரிக்குமாம்

மூட்டு வலி என்றால் என்ன?

இது உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படக்கூடிய அசௌகரியம் அல்லது வலியைக் குறிக்கிறது. மூட்டுகளானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளை இணைக்கும் புள்ளிகள், இயக்கத்தை செயல்படுத்துகிறது. இவை சேதமடையும் போது அல்லது வீக்கமடையும் போது லேசான அசௌகரியம் முதல் கடுமையானது வரையிலான வலியைத் தருகிறது. ஆய்வு ஒன்றில் நோய்த்தொற்றுகள், முடக்கு வாதம் போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் கீல்வாதம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை நிலைகளிலிருந்து மூட்டு வலி ஏற்படலாம். இந்த மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற வாழைப்பழம் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

மூட்டு வலிக்கு வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது?

வாழைப்பழம் உட்கொள்வது மூட்டு வலி நிவாரணத்திற்கு ஒரு சிறந்த மற்றும் இயற்கையான தீர்வாகும். இதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை மூட்டு வலியுடன் தொடர்புடைய அசௌகரியத்தை எளிதாக்குகிறது.

அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

வாழைப்பழம் வைட்டமின் சி, ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல மற்றும் சிறந்த மூலமாகும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. ஆய்வில் ஃப்ரீ ரேடிக்கல்கள் உடல் முழுவதும் செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்துகிறது. இந்த சேதம் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது பல வகையான மூட்டு வலிகளுக்கு காரணியாக அமைகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த வாழைப்பழம் உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் மூட்டுகளில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மக்னீசியம் நிறைந்த

வாழைப்பழத்தில் நல்ல அளவிலான மக்னீசியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தசை மற்றும் நரம்பு செயல்பாடு உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அவசியமானதாகும். ஆய்வில் மக்னீசியம் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உடலில் அழற்சி ஏற்படுவது தொடர்ந்து வீக்கம் மூட்டு வலி உட்பட பல்வேறு உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த அழற்சியைக் கட்டுப்படுத்த மக்னீசியம் உதவுகிறது. மேலும் மக்னீசியம் உட்கொள்ளல் மூட்டுவலி போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய அசௌகரியத்திலிருந்து சிறிது நிவாரணம் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Banana With Milk: வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

பொட்டாசியம் நிறைந்த

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். ஆய்வில் உடலில் அமில-அடிப்படை சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு பொட்டாசியம் உதவுவதாகக் கூறப்படுகிறது. உடலின் அமில அளவு அதிகமாக இருக்கும் போது, அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்க எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றலாம். இந்நிலையில் பொட்டாசியம் அமில அடிப்படை சமநிலையை ஊக்குவித்து எலும்பு ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது. இந்த வலுவான எலும்புகள் ஒட்டுமொத்த இயக்கத்திற்கு உறுதியைத் தருகிறது.

வாழைப்பழத்தை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

அன்றாட உணவில் வாழைப்பழத்தைப் பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இது மூட்டு வலிக்கு எளிய மற்றும் சிறந்த தீர்வாக அமைகிறது.

புதிதாக உட்கொள்வது

புதிய, பழுத்த வாழைப்பழத்தை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதை தயிர், ஓட்மீல் அல்லது தானியங்களில் சேர்த்து சாப்பிடலாம்.

வாழைப்பழ ரொட்டி

வாழைப்பழத்தைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் சுவையான ரொட்டியைத் தயார் செய்து உட்கொள்ளலாம்.

ஸ்மூத்திகள்

வாழைப்பழங்களை மற்ற சில ஆரோக்கியமான பழங்களுடன் சேர்த்து ஸ்மூத்தியாகத் தயார் செய்து அருந்தலாம். இது சத்தான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Banana For Weight Loss: உடல் எடை குறைய வாழைப்பழத்தை இப்படி சாப்பிடவும்..

Image Source: Freepik

Read Next

சிரிப்பை கெடுக்கும் மஞ்சள் பற்கள்.. இனி இதற்கு குட்பை சொல்லுங்க.. சூப்பர் டிப்ஸ் இதோ..

Disclaimer