லைஃப் லாங் மூட்டு வலி வராம இருக்க உங்க டயட்ல கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் இதோ

What foods to prevent arthritis: கீல்வாதத்தைத் தடுக்கவும், மூட்டு வலியைத் தவிர்க்கவும் சில ஆரோக்கியமான உணவுகளை அன்றாட உணவில் சேர்க்கலாம். இதில் மூட்டு வலி மற்றும் கீல்வாதத்தைத் தடுக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
லைஃப் லாங் மூட்டு வலி வராம இருக்க உங்க டயட்ல கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் இதோ


What foods to eat to reduce arthritis pain: மூட்டுவலி என்பது இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயதாகும்போது மிகவும் அசௌகரியம் மற்றும் வலியைத் தரக்கூடியதாக இருக்கும். ஆனால், இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் இளம் வயதிலேயே ஆர்த்ரிடிஸ் மற்றும் மூட்டுவலியைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, மூட்டு வலியைத் தடுப்பதில் சில குறிப்பிட்ட உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த உணவுகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், வீக்கம் மற்றும் மூட்டு வலி போன்றவற்றைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், மூட்டு வலிக்கு மற்றொரு முக்கிய காரணமாக அதிகப்படியான உடல் எடை அமைகிறது. எனவே சரியான வகையான உணவைப் பராமரிப்பது அதிகப்படியான எடையைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மூட்டு வலியைச் சரி செய்யலாம். இதில் மூட்டுவலியைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

கீல்வாதம் என்றால் என்ன?

ஹெல்த்சைட் தளத்தில் குறிப்பிட்ட படி, மூட்டு வலியானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுக்களின் வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் மிகவும் பொதுவான வகைகளில் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்றவை அடங்கும். கீல்வாதம் பொதுவாக மூட்டுகளில் தேய்மானம் மற்றும் குருத்தெலும்பு முறிவுக்கு வழிவகுக்கக்கூடிய ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் ஆகும். அதே சமயம், முடக்கு வாதம் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதில் நோயெதிர்ப்பு அமைப்பு தவறாக மூட்டுப் புறணியைத் தாக்கி, வீக்கம் மற்றும் மூட்டு சேதத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மூட்டு வலியைக் காணாமல் போகச் செய்யும் 3 ஆயுர்வேதிக் ரெமிடிஸ் இங்கே.. நிபுணர் சொன்னது

மூட்டு வலி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆளிவிதைகள்

இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இவை உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஆளி விதைகள் சாப்பிடுவது ஆரோக்கியமான மூட்டுகளை ஊக்குவிக்க உதவுகிறது. எனவே இது உடல் எடையிழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது கீல்வாதத்தைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சியா விதைகள்

சியா விதைகளில் அதிகளவிலான ஒமேகா-3, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை உள்ளது. எனவே இது வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன. இது தவிர, இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் சியா விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

முழு தானியங்கள்

ஓட்ஸ், பழுப்பு அரிசி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே அன்றாட உணவில் அமராந்த், பார்லி, பழுப்பு அரிசி, பக்வீட், கம்பு மற்றும் தினை போன்ற முழு தானியங்களைச் சேர்ப்பது மூட்டு வலியைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது

தினை

இதில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. எனவே இது ஆரோக்கியமான குருத்தெலும்பு மற்றும் எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதன் நார்ச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

மீன்

சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: ஹை யூரிக் அமிலத்தின் காரணமாக உங்க உடலில் இந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்படும்

பருப்பு வகைகள்

பீன்ஸ், பயறு மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகளில் அதிகளவிலான புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இது தசை மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு நல்ல தாவர அடிப்படையிலான புரத மூலமாகும். அதே சமயம், பருப்பு வகைகளை உட்கொள்வது எடை இழப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடல் பருமனைத் தடுக்க உதவுவதுடன், கீல்வாதத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

வால்நட்ஸ்

இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலிக்கு பங்களிக்கக்கூடிய வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இது மூட்டு திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றிகளையும் வழங்குகிறது. ஆய்வு ஒன்றில், இரண்டு ஆண்டுகளுக்கு வால்நட்ஸை தினமும் உட்கொள்வது ஆரோக்கியமான வயதுவந்த பங்கேற்பாளர்களில் பல அழற்சி உயிரியக்கக் குறிகாட்டிகளைக் குறைத்ததாகக் கண்டறியப்பட்டது.

பச்சை காய்கறிகள்

கீரை, கேல் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

பழங்கள்

பெர்ரி மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிகளவிலான வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும் மூட்டு திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தாங்காத முட்டுவலியில் இருந்தும் தப்பிக்க வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!

Image Source: Freepik

Read Next

நச்சாக மாறிய காய்கறிகள்... ஆரோக்கியமான உணவாக மாற்ற வழிமுறை இதோ...!

Disclaimer