Foods that cause joint inflammation pain: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக மூட்டு வலியும் அடங்கும். குறிப்பாக, குளிர்ச்சியுடன் கூடிய குளிர்கால மாதங்கள் மற்றும் உறைபனி வெப்பநிலை போன்றவை கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தும் பருவகால வலிகளை ஏற்படுத்தலாம். இந்நிலையில் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளும் மூட்டு வலியை மேலும் உண்டாக்கலாம். மேலும் இது கீல்வாதம் உள்ளவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.
குளிர்காலத்தில் மூட்டு வலியை அதிகரிக்கும் உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
பெரும்பாலானோர் குளிர்காலத்தில் வெள்ளை ரொட்டி மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற பல்வேறு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால், இதில் அதிகளவிலான கிளைசெமிக் குறியீடுகள் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை கூர்மையை ஏற்படுத்துவதுடன், வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Knee Pain Remedy: மூட்டு வலியை போக்கும் அற்புதமான ஆயுர்வேத மூலிகைகள் இங்கே..
மேலும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மூட்டுகளைப் பாதிக்கும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த வகை உணவுகள் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கலாம். எனவே இது போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், ஓட்ஸ், குயினோவா அல்லது பழுப்பு அரிசி போன்ற தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை உட்கொள்வது நீடித்த ஆற்றலை வழங்குகிறது. இதன் மூலம் வீக்கத்தைத் தூண்டுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
வறுத்த உணவுகள்
சிப்ஸ், சமோசா போன்ற மிருதுவான மற்றும் சூடான வறுத்த உணவுகளைக் குளிர்காலத்தில் உட்கொள்வதை பெரும்பாலும் விரும்புவர். ஆனால், இதில் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் அதிகளவு உள்ளது. இது வீக்கத்திற்கு வழிவகுக்கும் உணவுகளாகும். மேலும் இது மூட்டு வலியை அதிகரிப்பதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
எனவே பேக்கிங் அல்லது காற்றில் வறுத்தல் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைத் தேர்ந்தெடுத்து, ஆலிவ் எண்ணெய், நட்ஸ், வெண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு கொழுப்புகளைச் சேர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்
தொத்திறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் சலாமி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் சுவைமிக்கதாகும். ஆனால் இந்த வகை உணவுகளில் மேம்பட்ட கிளைகேஷன் முடிவு தயாரிப்புகள் அல்லது AGEs மற்றும் நைட்ரேட்டுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. சமைக்கும் போது புரதங்கள் அல்லது கொழுப்புகள் சர்க்கரையில் சேர்க்கப்படுவதால் இவை உருவாகிறது. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டுகிறது.
வீக்கம் பெரும்பாலும் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கீல்வாதத்தைக் கொண்டிருப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளலைக் குறைப்பது மிகவும் முக்கியமாகும். இது உடலில் உள்ள அழற்சி குறிப்பான்களைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Joint Pain Remedy: மூட்டு வலி காணாமல் போக இந்த ஒரு டீ குடிங்க போதும்!
பால் பொருள்கள்
குளிர்கால சூழ்நிலையில் பால், பாலாடைக்கட்டி மற்றும் கிரீம் போன்ற பால் பொருள்களை அதிகம் விரும்புவர். ஆனால், மூட்டு உணர்திறன் கொண்டவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பால் பொருள்கள் பலருக்கு உணர்திறனை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனால் இது வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கான அறிகுறிகளை மேலும் மோசமாக்கலாம்.
சர்க்கரை பானங்கள்
பெரும்பாலானோர் குளிர்ந்த காலநிலையில் குடிக்க விரும்பும் சிறந்த பானங்களில் சூடான சாக்லேட்டுகளும் அடங்கும். எனினும், குக்கீகள் மற்றும் கேக்குகள் போன்றவற்றை உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு மட்டுமல்லாமல், வீக்கத்தைத் தூண்டலாம்.
இவ்வாறு சர்க்கரை பானங்களைச் சேர்ப்பது காலப்போக்கில் மூட்டு வலியை மோசமாக்குகிறது. மேலும் இது சோர்வுக்கு பங்களிக்கிறது. இதனால் சுறுசுறுப்பாக இருக்க கடினமாக இருக்கலாம்.
குளிர்காலத்தில் மூட்டுக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை எடுத்துக் கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகும். எனவே ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் கே நிறைந்த ப்ரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ், காலே போன்ற பச்சை இலை காய்கறிகளை உட்கொள்ளலாம். வைட்டமின் சி ஆதாரங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிவி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் டி கொழுப்பு நிறைந்த மீன், முட்டையின் மஞ்சள் கரு, சீஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இது தவிர, குளிர்காலத்தில் மூட்டு நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கவும், விறைப்புத்தன்மையைக் குறைக்கவும் சுறுசுறுப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மூட்டுகளை உயவூட்டுவதற்கு போதுமான தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு எந்தெந்த உணவுகள் மூட்டு வலியை மோசமாக்கக் கூடும் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: மான்சூன் மூட்டுவலியைக் குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்
Image Source: Freepik