Joint Pain Remedy: மூட்டு வலி காணாமல் போக இந்த ஒரு டீ குடிங்க போதும்!

  • SHARE
  • FOLLOW
Joint Pain Remedy: மூட்டு வலி காணாமல் போக இந்த ஒரு டீ குடிங்க போதும்!


Does Turmeric Tea Help Joint Pain: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் மக்கள் ஏராளமான உடல்நல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக முதுமையில் சந்திக்கும் பிரச்சனைகள் பெரும்பாலும் இளம் வயதிலேயே சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அதில் ஒன்றாகவே மூட்டு வலி, உடலில் ஆங்காங்கே வீக்கம் போன்றவை அமைகிறது. மூட்டு வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இந்த மூட்டு வலியைக் குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளைச் செய்வர். எனினும் சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் மூட்டு வலியைக் குறைக்கலாம். அந்த வகையில் மஞ்சள் வீக்கம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கிறது.

இந்திய உணவுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலாக்கள் ஏராளம். அதில் மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சிறந்த மசாலாக்களில் ஒன்று மஞ்சள். இந்த தங்க மஞ்சள் மசாலா, பல நூற்றாண்டுகளாகவே அதன் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. இவை உடலில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வகையில் அமைகிறது. அந்த வகையில் மஞ்சளை தேநீர் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இந்த சூடான, இனிமையான பானம் சுவையானது மட்டுமல்லாமல், வீக்கம் மற்றும் மூட்டு வலியைப் போக்க உதவும் சிறந்த பானமாகக் கருதப்படுகிறது. இதன் சக்தி வாய்ந்த சேர்மங்கள் உடலில் ஏற்படும் மூட்டுவலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Burning: காரமா சாப்பிட்டால் வயிறு கப கபனு எரியுதா? நிவாரணம் பெற இதை குடியுங்க!

மூட்டு வலிக்கு மஞ்சள் எவ்வாறு உதவுகிறது?

மஞ்சளில் உள்ள முதன்மை செயலில் உள்ள முக்கிய மூலப்பொருள் குர்குமின் ஆகும். இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இந்த குர்குமின் ஆனது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் சில நொதிகள் மற்றும் சைட்டோகைன்களைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இது தவிர, குர்குமின் சில அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் தடுக்க உதவுகிறது.

மஞ்சள் தேநீர் தரும் நன்மைகள்

மஞ்சளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர மஞ்சள் தேநீர் அருந்துவது மூட்டு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் மஞ்சள் தேநீர் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

வலியைக் குறைக்க

மஞ்சள் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் போன்ற நிலைகளுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவுகிறது.

உடல் இயக்கத்தை மேம்படுத்த

உடலில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உதவுகிறது. இந்த தேநீர் இயக்கம் மற்றும் கூட்டு செயல்பாடு போன்றவற்றை மேம்படுத்துகிறது. இவ்வாறு உடலில் இயக்கத்தை மேம்படுத்தி, அன்றாட வாழ்வில் தினசரி செயல்பாடுகளை எளிதாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அல்சரால் வாய்துர்நாற்றமா? இந்த இரண்டையும் அடித்து விரட்ட இந்த ஒரு பானம் குடிங்க போதும்!

மஞ்சள் தேநீர் தயாரிப்பது எப்படி?

வீட்டில் மஞ்சள் தேநீர் தயாரிப்பது மிகவும் எளிமையான முறையாகும். இதன் ஆரோக்கியமான நன்மைகள் உடலுக்கு மிகுந்த பங்கு வகிக்கிறது.

தேவையானவை

  • அரைத்த மஞ்சள் அல்லது அரைத்த மஞ்சள் வேர் - 1/2 தேக்கரண்டி
  • கருப்பு மிளகு - ஒரு சிட்டிகை
  • தண்ணீர் - 1 கப்
  • சுவைக்காக தேன் அல்லது எலுமிச்சை

மஞ்சள் தேநீர் தயாரிக்கும் முறை

  • மஞ்சள் டீ தயார் செய்ய, முதலில் ஒரு சிறிய பாத்திரம் ஒன்றில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • இதில் அரைத்த மஞ்சள் அல்லது அரைத்த மஞ்சள் வேரைச் சேர்க்கலாம்.
  • இதை மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு கோப்பை ஒன்றில் வடிகட்டி, அதில் விரும்பினால் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் தேன் அல்லது எலுமிச்சையைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இவ்வாறு சூப்பரான சுவையில் மஞ்சள் தேநீர் தயார் செய்யப்பட்டது.

இந்த பதிவும் உதவலாம்: Uric Acid Reduce Drink: இந்த ஒரு ட்ரிங்க் போதும்! யூரிக் அமிலத்தை டக்குனு குறைச்சிடும்

குறிப்பு

மஞ்சள் தேநீரை மேலும் ஊட்டச்சத்துமிக்கதாக மாற்றுவதற்கு சில குறிப்புகளைப் பின்பற்றலாம்.

உயர் தர மஞ்சள் பயன்பாடு

மஞ்சளில் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவது உயர்தர மஞ்சள் தூள் அல்லது புதிய மஞ்சள் வேர் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இஞ்சியுடன் இணைப்பது

மஞ்சள் தேநீரில் ஒரு துண்டு புதிய இஞ்சியைச் சேர்ப்பது அழற்சி எதிர்ப்பு விளைவுகளை அதிகரிக்கிறது.

தொடர்ச்சியான நுகர்வு

மஞ்சள் தேநீரை அதன் முழு நன்மைகளையும் பெறுவதற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். தினந்தோறும் ஒரு கப் அல்லது இரண்டு கப் அளவு மஞ்சள் டீ அருந்துவது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு மஞ்சள் தேநீரை உட்கொள்வதன் மூலம் மூட்டுவலி மற்றும் வீக்கத்திலிருந்து விடுபடுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cold Home Remedies: சளியுடன் போராட்டமா.? வீட்டு வைத்தியம் இருக்க கவலை எதுக்கு.!

Image Source: Freepik

Read Next

அல்சரால் வாய்துர்நாற்றமா? இந்த இரண்டையும் அடித்து விரட்ட இந்த ஒரு பானம் குடிங்க போதும்!

Disclaimer