Natural Drink To Lower Uric Acid: அன்றாட வாழ்வில் மாறிவரும் காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை மேம்பாடு போன்ற காரணங்களால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக யூரிக் அமிலமும் அடங்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும் போது பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அதாவது உடலில் அதிகளவு யூரிக் அமிலம் இருக்கும் போது, அது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. இதில் யூரிக் அமிலம் என்பது சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் உள்ள பியூரின்கள் என்ற வேதிப்பொருட்களை உடைக்கும்போது உடலில் உருவாகக் கூடிய கழிவுப்பொருள் ஆகும்.
இதில் பெரும்பாலான யூரிக் அமிலத்தை உடலில் இரத்தமே கரைத்து விடுகிறது. இது சிறுநீரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிறுநீர் கழிக்கும்போது, வெளியேற்றிவிடுகிறது. ஆனால், உடலில் அதிகளவு யூரிக் அமிலம் இருக்கும் போது, ஹைப்பர்யூரிசிமியா நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அதிகப்படியாக யூரிக் அமிலம் உடலில் ஒன்று சேர்ந்து கற்களாக மாறுகிறது. இது மூட்டுகளில் ஆரித்ரிட்டிஸ் நோயை ஏற்படுத்துகிறது. மேலும், சிறுநீரகத்தில் சிறுநீரக கற்களையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயை சில சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்த முடியும். இந்த நோய் ஏற்பட்டால், அதிகளவு தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hiccups Remedies: தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கலயா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க
ஹைப்பர்யூரிசிமியா ஏற்படுவதற்கான அறிகுறிகள்
- ஒருவருக்கு ஹைப்பர்சிமீயா உள்ளது எனில், வலிகள் ஏற்படுவதுடன், உடல் முழுவதிலு சேதம் உண்டாகலாம்.
- இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு கல்லீரல் அழற்சி நோய், வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
- இதில் மூட்டுகள், எலும்புகள் மற்றும் சவ்வுகளில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம்.
- ஹைப்பர்யூரிசிமியா உள்ளது எனில், பெரும்பாலான அறிகுறிகள் தோன்றுவதில்லை. அதிலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாதவரை இதற்கான அறிகுறிகள் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
- இது தவிர, மூட்டுகளில் கடும் வலி, இறுக்கம், சிவத்தல், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

சிறுநீரகக் கற்கள் தோன்றுவதால் ஏற்படும் அறிகுறிகள்
உடலில் யூரிக் அமிலம் இருப்பதை உறுதி செய்வதாக இந்த சிறுநீரகக் கற்கள் அமைகிறது. சிறுநீரகக் கற்கள் தோன்றும் போது உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் காணலாம்.
- வாந்தி
- காய்ச்சல்
- சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல்
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது
- சிறுநீரில் இரத்தம்
- சிறுநீரில் துர்நாற்றம்
இவை அனைத்தும் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Uric Acid Level Remedies: யூரிக் அமிலத்தால் இத்தனை பிரச்சனையா? தவிர்க்க என்ன செய்வது?
உடலில் அதிக யூரிக் அமிலத்தைத் தரும் உணவுகள்
- சிவப்பிறைச்சி
- கால் உணவுகள்
- ஈரல்
- மது அருந்துதல்
- ஃப்ரூக்டோஸ் கார்ன் சிரப் நிறைந்த உணவுகள்
யூரிக் அமிலத்தைக் குறைக்கும் சிறந்த பானம்
இது போன்ற அறிகுறிகள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து விடுபட, யூரிக் அமிலத்தைக் குறைக்க வேண்டும். யூரிக் அமிலத்தைக் குறைக்க வீட்டிலேயே தயார் செய்யப்படும் பானத்தை அருந்தலாம்.
தேவையானவை
- மாதுளை பழம் - 1
- வெள்ளரி - 1
- எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- உப்பு அல்லது தேன் - சிறிதளவு
- பட்டைப் பொடி - சிறிதளவு

செய்முறை
- இந்த பானம் தயார் செய்வதற்கு, முதலில் மாதுளை மற்றும் வெள்ளரி இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
- பின் இந்தக் கலவையை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து அரைக் கொள்ளலாம்.
- பிறகு, இதை வடிகட்டி மஞ்சள் தூள், பட்டைப்பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு அல்லது தேன் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து அப்படியே பருக வேண்டும்.
- அதன் பிறகு, இந்த கலவையை அருந்துவதன் மூலம் இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பின் அதைக் குறைக்கலாம்.
இவ்வாறு ஆரோக்கியமான முறையில் உடலில் அதிகரித்த யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம். எனினும் நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், புதிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் முன்னதாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.
இந்த பதிவும் உதவலாம்: Uric Acid Reduces Tips: உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க.
Image Source: Freepik