Doctor Verified

Uric Acid Reduces Tips: உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க.

  • SHARE
  • FOLLOW
Uric Acid Reduces Tips: உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க.


Ways To Eat Fenugreek Seeds To Reduce Uric Acid: இன்றைய கால கட்டத்தில், தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்கள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதில் அதிக யூரிக் அமிலம் பிரச்சனையும் அடங்கும். பியூரின் என்ற வேதிப்பொருள் உடைக்கும் போது யூரிக் அமிலம் உருவாகிறது. இந்த பியூரின்கள் பல வகையான உணவுகளில் காணப்படுகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும் போது, பல வகையான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உடல் ஆரோக்கியத்திற்கு யூரிக் அமிலம் சமநிலையில் இருப்பது அவசியமாகும்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், மூட்டு வீக்கம், வலி, எழுந்து உட்காருவதில் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். மேலும் யூரிக் அமிலம் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். அது மட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு யூரிக் அமிலம் அதிகரிக்கும் அபாயம் உண்டாகலாம். இதனைத் தடுக்க வீட்டு வைத்தியமாக வெந்தயம் உதவுகிறது. வெந்தயத்தைத் தொடர்ந்து உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். உடலில் யூரிக் அமிலத்தைக் குறைக்க வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும் வழிகள் குறித்து, ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷின்யன் டாக்டர் சுகீதா முத்ரேஜா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

யூரிக் அமிலத்தைக் குறைக்க வெந்தயத்தை உட்கொள்வது எப்படி

உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தைக் குறைக்க வெந்தயத்தை எந்தெந்த வழிகளில் எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Ulcer Prevention: அல்சரால் அவதிப்படுகிறீர்களா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்க

வெந்தய விதைகளை மெல்லுதல்

உடலில் யூரிக் அமிலம் அதிகமானால், வெந்தய விதைகளை மென்று சாப்பிடலாம். இது யூரிக் அமிலத்தைக் குறைக்கும்.

இதற்கு சில வெந்தய விதைகளை எடுத்து, அதை ஒரே இரவில் ஊற வைக்க வேண்டும். பின் காலையில் இந்த விதைகளை மென்று சாப்பிட வேண்டும். தினமும் காலையில் வெந்தய விதைகளை எடுத்துக் கொள்வது உடலில் பல பிரச்சனைகளை நீக்கும்.

வெந்தய பொடி

வெந்தய விதைகளில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு, மற்றும் துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. வெந்தயத்தைப் பொடியாக எடுத்துக் கொள்வது யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

இதற்கு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் வெந்தய பொடியைச் சேர்த்துக் குடிக்கலாம். இந்த வெந்தயப் பொடியை தினமும் இரவில் உட்கொள்ளலாம். அதிக யூரிக் அமிலம் கொண்டிருப்பவர்களுக்கு வெந்தய விதை தூள் மிகவும் நன்மை தரும்.

வெந்தய தண்ணீர்

உடலில் யூரிக் அமிலத்தைக் குறைக்க வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை அருந்தலாம்.

இதற்கு சிறிதளவு வெந்தயத்தை ஓரிரவு முழுவதில் தண்ணீர் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் எழுந்தவுடன், இந்த நீரைக் குடிப்பதுடன், ஊறவைத்த வெந்தய விதைகளை மென்று சாப்பிடலாம். தினமும் காலையில் வெந்தய நீரை இப்படி குடித்து வருவது, உடலில் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதுடன், மூட்டு வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dark Neck Remedies: கழுத்துப் பகுதி கருப்பா இருக்கா? தேனை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.

வெந்தய தேநீர்

இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், வெந்தய டீ அருந்தலாம். இது உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வெந்தய தேநீர் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம், கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது வெந்தயத்தை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பின் இதை வடிகட்டி குடிக்கலாம். தினமும் காலையில் இவ்வாறு அருந்தி வர, யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.

உடலில் அதிக யூரிக் அமிலம் இருப்பின், அதைக் குறைக்க வெந்தயத்தை இது போன்ற வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். எனினும், யூரிக் அமிலம் பெரும்பாலும் சமநிலையற்றதாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Pink Lips Home Remedies: அழகான பிங்க் நிற உதட்டைப் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Underarm Smell: அக்குள் துர்நாற்றத்துடன் போராட்டமா? இத பண்ணுங்க போதும்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version