Thu Oct 29, 2026 | 02:39 PM IST

Underarm Smell: அக்குள் துர்நாற்றத்துடன் போராட்டமா? இத பண்ணுங்க போதும்..

Underarm Smell: அக்குள் துர்நாற்றத்துடன் போராட்டமா? இத பண்ணுங்க போதும்..Underarm Smell: அக்குள் துர்நாற்றத்துடன் போராட்டமா? இத பண்ணுங்க போதும்..

How To Get Rid Of Underarm Smell: பலர் குளித்த பிறகும் அக்குள்களில் வியர்வை மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலை தீர்க்க என்ன குறிப்புகள் பின்பற்ற வேண்டும்? நிபுணர் கருத்து என்ன? என்பதை இங்கே காண்போம். 

வியர்வையின் நாற்றத்தால் பலர் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இறுக்கமான உடைகளை அணியும் பெண்கள் அக்குள் துர்நாற்றம் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இதனால் வெளியே செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வியர்வை பொதுவாக வானிலை மாற்றங்களால் ஏற்படுகிறது. 

அதிகமாக வியர்த்துக் கொண்டிருந்தால் அதை  பிரச்சனையாகவே அங்கீகரிக்க வேண்டும். அந்தப் பிரச்சனைக்கு 'ஹைப்பர்ஹைட்ரோசிஸ்' என்று பெயர்.

இது பலரிடம் காணப்படுகிறது. பாக்டீரியா தொற்று, மன அழுத்தம், மரபணு காரணிகள், போதைப்பொருள் விளைவுகள் போன்றவை இதற்குக் காரணம். இந்த பிரச்சனையால் பலர் தன்னம் பிக்கையை இழந்து விடுகின்றனர். 

உண்மையில் வியர்வை உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அது உடல் உழைப்புடன் வர வேண்டும். இந்த வியர்வை துர்நாற்றம் வீசாது. ஆனால், 'ஹைப்பர்ஹைட்ரோசிஸ்' காரணமாக வரும் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. இந்த சிக்கலை தீர்க்க வல்லுநர்கள் சில குறிப்புகளை பரிந்துரைக்கின்றனர். அவை உங்களுக்காக..

இதையும் படிங்க: Underarm Acne Tips: அக்குளில் வரும் பருவுக்கு குட்பை சொல்லுங்க! இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க

அக்குள் துர்நாற்றத்தை தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் (Tips To Get Rid Of Underarm Smell)

* அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் போது, அது எந்த நேரமாக இருந்தாலும், தினமும் மாலையில் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். மீண்டும் காலையில் குளிக்கவும். இவ்வாறு உடலை சுத்தமாக வைத்திருப்பது பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கிறது.

* எந்த வேலையாக வெளியே சென்றாலும், உடற்பயிற்சி செய்துவிட்டு, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவது மட்டுமின்றி, மனதையும் எளிதாக்குகிறது.

* கடுமையான வியர்வை மற்றும் துர்நாற்றம் உள்ளவர்கள் சிவப்பு இறைச்சி (பன்றி இறைச்சி, ஆட்டுக்குட்டி, மாட்டிறைச்சி) சாப்பிடக்கூடாது. இது பிரச்சனையை மோசமாக்குகிறது. சிவப்பு இறைச்சிக்கு பதிலாக மீன் அல்லது கோழி சாப்பிடுவது நல்லது.

* வியர்வை உடலில் இருந்து உப்புகளை நீக்குகிறது. எனவே, ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் துர்நாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளில் பூண்டு, வெங்காயம், மசாலா போன்றவை அடங்கும். எனவே இவற்றை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

* சுத்தமான டவலால் அக்குள்களை உலர வைக்கவும்.

* தேயிலை மர எண்ணெய், பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட இயற்கை டியோடரண்டுகளைப் பயன்படுத்தவும்.

* அக்குள் முடி பாக்டீரியாவை வளர்த்து துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே அவற்றை ஷேவ் செய்யுங்கள்.

முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள். அவை வியர்வையை உறிஞ்சி துர்நாற்றம் மற்றும் எரிச்சலைத் தடுக்கின்றன.

* காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் நுகர்வு குறைக்கவும். அப்படி செய்வதை முற்றிலுமாக நிறுத்தினால், ஊட்டச்சத்து மதிப்பை இழக்க நேரிடும்.

* மது அருந்த வேண்டாம்.

இந்தக் கட்டுரை வாசகர்களின் புரிதலுக்காக மட்டுமே. இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினாலும், கடுமையான வியர்வை மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனை தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.

Image Source: Freepik

Read Next

→ Constipation Solution: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற எளிய வழிகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.