இப்போதெல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் பெருமளவில் டிரெண்டாகி வருகின்றன. பெண்கள் தங்களது அழகையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்த, நவீன ஆடைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், சிலர் இந்த ஆடைகளை அணிவதில் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் – அக்குள் கருமை. இது பெரிய விஷயமாக இல்லையென நினைப்பது தவறு. உண்மையில், இது ஒருவரின் தன்னம்பிக்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒன்று.
பலர் இந்த கருமையை நீக்க, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த கிரீம்கள், ஜெல்ல்கள் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள். சிலர் லேசர் சிகிச்சை, பிளீச்சிங், வேக்ஸிங் போன்ற பார்லர் முறைகளையும் முயற்சிக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் தற்காலிக தீர்வுகள் மட்டுமே. மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், செலவு அதிகரிக்கும். முக்கியமாக, சில தயாரிப்புகள் தோலை பாதித்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால், செலவில்லாமல், பாதுகாப்பான மற்றும் இயற்கையான வழிகள் அக்குள் கருமையை நீக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம், தீர்வு உங்கள் அடுப்பங்கரையில் உள்ளது. எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல், உங்கள் தன்னம்பிக்கையை மீட்டெடுக்க விரும்புகிறீர்கள் என்றால், வீட்டு வைத்தியத்தை கையில் எடுங்க. செலவில்லாமல் எளிய முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் அக்குள் கருமையை நீக்கும் இயற்கை வழியை இங்கே தெரிந்துக் கொள்வோம்.
முதலில் அக்குளில் கருமை ஏற்படும் காரணத்தை அறிவோம்..
* தொடர்ந்து ஷேவிங் செய்தல்
* சரியான எக்ஸ்ஃபொலியேஷன் இல்லாமை
* கெமிக்கல் டியோடரண்ட்களின் பயன்பாடு
* ஹார்மோன் மாற்றங்கள்
அக்குள் கருமையை நீக்கும் வீட்டு வைத்தியம்
பேக்கிங் சோடா + எலுமிச்சை ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்
* 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
* 1/2 எலுமிச்சை பழத்தின் சாறு
செய்முறை
* பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
* இந்த பேஸ்ட்டை அக்குளில் தடவுங்கள்
* மெதுவாக 2-3 நிமிடங்கள் தேய்க்கவும்.
* 5 நிமிடங்கள் அப்படியே விடவும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி, மென்மையான துணியால் துடைக்கவும்.
கற்றாழை + மஞ்சள் பேக்
தேவையான பொருட்கள்
* 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
* ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
செய்முறை
* இரண்டையும் நன்கு கலந்து ஒரு சீரான பேஸ்ட் ஆக செய்யவும்.
* அக்குளில் தடவவும்.
* 10-15 நிமிடங்கள் கழித்து சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும்.
இப்படியும் செய்யலாம்..
* வாரத்திற்கு 2 முறை எக்ஸ்ஃபொலியேட் செய்யவும்
* இயற்கையான டியோடரண்ட்கள் பயன்படுத்தவும்
* வெள்ளை, மென்மையான உடைகள் அணியவும்
* தினசரி மாய்ச்சரைஸர் பயன்படுத்தவும்
* வாக்சிங் மூலம் ஹேர் ரிமூவல் செய்யலாம்
* அதிகமாக தண்ணீர் குடித்து டாக்ஸின்களை வெளியேற்றவும்
குறிப்பு
* ஷேவ் செய்த உடனே போடக்கூடாது.
* சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் Patch Test செய்யவேண்டும்.