இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக அக்குள் கருமை காணப்படுகிறது. பொதுவாக இது அதிக வியர்வை, ரசாயன டியோடரண்டுகளைப் பயன்படுத்துவது, இறுக்கமான ஆடைகளை அணிவது மற்றும் ஷேவிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதன் காரணமாக சருமத்தின் நிறம் கருமையாகவும் சீரற்றதாகவும் மாறுவதுடன், எந்தவொரு நபரின் தன்னம்பிக்கையையும் பாதிக்கக்கூடியதாக அமைகிறது. குறிப்பாக கவர்ச்சியாகத் தோற்றமளிக்க ஸ்டைலான ஆடைகளை அணியும் பெண்களுக்கு இது சில நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்தலாம்.
இந்நிலையில் பலர் தங்கள் அக்குள்களின் கருமையை நீக்க விலையுயர்ந்த தோல் பராமரிப்பு பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இது மிகவும் பயனுள்ளதாகவோ அல்லது பாதுகாப்பாகவோ கருதப்படுவதில்லை இந்நிலையில்,பாதுகாப்பான முறையில் அக்குள் கருமையை நீக்க வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இதில் சிறந்த தேர்வாக கடலை மாவை பயன்படுத்தலாம். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.
இதில் ஜெய்ப்பூரில் உள்ள பாபு நகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் இயற்கை மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணரான மூத்த மருத்துவரும், மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் கிரண் குப்தா அக்குள்களின் கருமையை நீக்க கடலை மாவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Dark Underarms: அக்குள் கருமையை போக்க சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்.!
அக்குள் கருமையை நீக்க கடலை மாவை எப்படி பயன்படுத்துவது?
கடலை மாவு, பால் மற்றும் தேன் பேக்
அக்குள்களின் கருமையை நீக்க, கடலை மாவு, பால் மற்றும் தேன் போன்றவற்றை கலந்து ஒரு பேக் தயார் செய்யலாம். இந்த கலவையானது அக்குள்களின் கருமையை நீக்க பெரிதும் உதவுகிறது. மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. அதே சமயத்தில், தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசராகவும், பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகிறது. இவை சருமத்தின் மேல் அடுக்கை சுத்தம் செய்து நிறத்தை மேம்படுத்துகிறது.
இந்த பேக் தயார் செய்வதற்கு 2 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் பச்சை பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலக்க வேண்டும். இப்போது இதை அக்குள்களில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடலாம். இது காய்ந்ததும், அக்குள்களை மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும்.
கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர் விழுது
அக்குள்களின் கருமையை நீக்க, கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர் போன்றவற்றைக் கலந்த ஒரு பேஸ்ட் தயார் செய்யலாம். இதில் கடலை மாவு சருமத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. மேலும், இது மஞ்சள் கிருமி நாசினிகள் மற்றும் சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளைக் கொண்டதாகும். அதே சமயம், எலுமிச்சை சருமத்தை வெண்மையாக்கி கருமையை நீக்குகிறது. கூடுதலாக, தயிர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாகவும் ஊட்டமாகவும் வைத்திருக்கிறது.
இந்த பேஸ்ட்டை தயாரிக்க, 2 டீஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். இப்போது இதை சுத்தமான அக்குள்களில் தடவி 15 நிமிடங்கள் உலர விடலாம். அதன் பிறகு, லேசான கைகளால் அக்குள்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Underarms Home Remedies: அக்குள் கருமையைப் போக்க இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க
கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஸ்க்ரப்
அக்குள்களின் கருமையை நீக்க, கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டரைக் கொண்டு பேக் தயார் செய்யலாம். இந்த ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தை குளிர்விக்கும், வீக்கம் மற்றும் எரிச்சலை நீக்கவும் உதவுகிறது. இந்த பேஸ்ட் சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி, அக்குள்களை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.
இதற்கு இரண்டு டீஸ்பூன் கடலை மாவுடன் போதுமான அளவு ரோஸ் வாட்டரைச் சேர்த்து ஒரு மெல்லிய பேஸ்ட்டை தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு, இந்த பேஸ்ட்டை அக்குள்களில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
முடிவு
அக்குள் கருமையைப் போக்க மிகவும் மலிவான மற்றும் பயனுள்ள தீர்வாக கடலை மாவு அமைகிறது. கடலை மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பேக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவது அக்குள் தோலின் நிறத்தை மேம்படுத்துகிறது. மேலும் கரும்புள்ளிகளையும் நீக்குகிறது. ஆனால், இந்த வைத்தியங்களை தோலில் முதல் முறையாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: விடாபிடியான அக்குள் கருமையை நீக்க சூப்பர் டிப்ஸ் இங்கே..
Image Source: Freepik