Dark Underarms: அக்குள் கருமையை போக்க சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்.!

  • SHARE
  • FOLLOW
Dark Underarms: அக்குள் கருமையை போக்க சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்.!


How To Get Rid Of Dark Underarms: பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று அக்குள் கருமை. ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய விரும்புபவர்கள் இந்தப் பிரச்னையால் அணிய முடியாமல் தவிக்கின்றனர். 

அக்குளில் கருமை நிறம் வருவதற்கான காரணங்கள் என்ன? இந்தப் பிரச்னையைக் குறைக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம். 

அக்குள் கருமையை போக்க டிப்ஸ் (Tips For Dark Underarms)

* அக்குள் கருமையாக இருப்பதற்கு உடல் பருமன் முக்கிய காரணங்களில் ஒன்று. நீங்கள் அதிக எடையுடன் இருந்தாலும், அக்குள் கருப்பு நிறத்தில் இருக்கும். அதிக எடை கொண்டவர்கள் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* சிலருக்கு ஷேவிங் செய்த பின் அரிப்பு ஏற்படும். எனவே, அக்குள் முடியை அகற்ற, மெழுகு அல்லது பிற முடி அகற்றும் முறைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

* அக்குள் துர்நாற்றத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிபெர்ஸ்பிரண்ட் மற்றும் டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால், அங்குள்ள தோல் கருப்பாக மாறுகிறது. இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். இரசாயனங்கள் இல்லாத டியோடரண்டுகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Dark Underarms Remedies : எவ்வளவு முயற்சி செய்தும் அக்குள் கருமை நீங்களையா? இதோ உங்களுக்கான ஹோம் ரெமிடி

* தினமும் குளித்த பின், ஈரமில்லாமல் உலர்ந்த துணியால் அக்குள்களை சுத்தம் செய்வது நல்ல பலனைத் தரும்.

* காபி மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதால் அக்குளில் அதிக வியர்வை ஏற்படும். இதனால் அப்பகுதி முழுவதும் கருப்பு நிறமாக மாறும். எனவே, இந்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

* இறுக்கமான ஆடைகளை அணிவது சருமத்தை எரிச்சலடையச் செய்யும். இதனால் அப்பகுதி கருப்பு நிறமாக மாறுகிறது. எனவே தளர்வான ஆடைகளை அணியுங்கள்.

* வைட்டமின் சி மற்றும் நியாசினமைடு போன்ற பொருட்கள் கொண்ட கிரீம்கள் மற்றும் சீரம்களைப் பயன்படுத்துவது அக்குள் கருமையை குறைக்க உதவும்.

* குளிக்கும் போது பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சைடர் வினிகர் கொண்டு அக்குள்களை சுத்தம் செய்வது கரும்புள்ளிகளை அகற்ற உதவும்.

* உருளைக்கிழங்கு துண்டுகளை தண்ணீரில் வெட்டி ஓரிரு நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்போது இந்த துண்டுகளை அக்குளுக்கு அடியில் உள்ள கருமையான இடத்தில் தேய்க்கவும்.

இப்படி அடிக்கடி செய்வதால், உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் கருப்பு நிறத்தை நீக்கும். 

Image Source: Freepik

Read Next

Straightening Vs Smoothening: ஹேர் ஸ்ட்ரெய்டனிங் Vs ஹேர் ஸ்மூத்திங் - எது சிறந்தது?

Disclaimer

குறிச்சொற்கள்