How to Whiten Underarms Permanently : முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் தவிர, நம்மில் பலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். அக்குள் கருமையாக இருந்தால், நம்மால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் சிரமம் இருக்கும்.
அக்குள் கருமையை போக்க எந்த சிகிச்சையும், விலை உயர்ந்த கிரீம்களை தேவையில்லை. சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஒரே வாரத்தில் அக்குள் கருமையை நீக்கிவிடலாம்.
முக்கிய கட்டுரைகள்
அக்குள் கருமைக்கான காரணங்கள்

- உடலில் மெலனின் அதிகரிக்கத் தொடங்கும் போது, உடலின் சில பகுதிகள் கருமையாகத் தொடங்கும். இதில் கழுத்து, தொடை இடுக்கு மற்றும் அக்குள்களும் அடங்கும்.
- முடியை அகற்றும் கிரீம் அதிகமாகப் பயன்படுத்துவதால், அக்குள்களின் நிறமும் கருப்பாக மாறத் தொடங்குகிறது. எனவேதான், இந்த பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
- முடி அகற்றுவதற்கு ரேசர் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், அக்குள் கருமையாகும்.
அக்குள் கருமையை நீக்கும் கடலை மாவு :

தோலைச் செம்மைப்படுத்த கடலை மாவு மிகவும் நல்லது. அதனால் தான் நாம் சரும பராமரிப்பு வழக்கத்தில் கடலை மாவை உபயோகப்படுத்துகிறோம். ஹேர் ரிமூவல் க்ரீமை அதிகமாக பயன்படுத்துவதால் அக்குள் கருமையாக மாறும். அத்தகைய சூழ்நிலையில், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் தயக்கம் உண்டாகும். அக்குள் கருமையை நீக்க கடலை மாவு மிகவும் பயனுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : பர்ஃபியூம் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா? அப்போ இந்த இடங்களில் அடிக்கவும்…
கடலை மாவை எப்படி பயன்படுத்துவது?
- 2 ஸ்பூன் கடலை மாவில் சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது, பச்சரிசி மாவு சிறிது கலக்கவும்.
- பின்னர், இந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
- இப்போது, 15 முதல் 20 நிமிடங்கள் வரை அதை நன்றாக உலர வைக்கவும்.
- பின்னர் நீரின் உதவியுடன் அக்குள் பகுதியை சுத்தம் செய்யவும்.
- இவ்வாறு தினமும் செய்து வர ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
அக்குள் கருமையை நீக்கும் உருளைக்கிழங்கு :

அக்குள் முடியை அகற்ற நீங்கள் ரேஸரைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் அக்குள் கருமை அதிகரிக்கும். அக்குள் கருமையைக் குறைக்க விலையுயர்ந்த க்ரீம் எதுவும் தேவையில்லை, ஆனால் சமையலறையில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தலாம். அந்தவகையில், உருளைக்கிழங்கை சருமத்தின் நிறத்தை சமன் செய்ய பயன்படுத்தலாம். இதற்கு உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை மட்டும் சேகரிக்கவும்.
இப்போது உருளைக்கிழங்கு சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். இப்போது, ஒரு பருத்தி உருண்டை அல்லது காட்டனில் உதவியுடன் அக்குள்களில் தடவவும். பின்னர், 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். இதை அடிக்கடி செய்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்.
இந்த பதிவும் உதவலாம் : திருமணத்தில் ஜொலிக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க…
கருமையான அக்குளை சரி செய்யும் ஆரஞ்சு தோல்

- முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் பாலில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் தூள் சேர்க்கவும்.
- இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலக்கவும். இதையடுத்து, இந்த பேஸ்ட்டை உங்கள் அக்குளில் தேய்க்கவும். அதை அப்படியே 15 நிமிடங்களுக்கு விடவும்.
- பின்னர் குளிர்ந்த நீரில் அக்குள்களை சுத்தம் செய்யவும்.
- ஆரஞ்சு தோல் பொடியை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் அக்குள் கருமையை குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hand Wrinkles: கைகளின் சுருக்கத்தை நீக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!
டீ ட்ரீ ஆயில் :
தேயிலை மர எண்ணெய் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெய் தோல் தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. அக்குள் கருமையால் அவதிப்பட்டு வந்தால், தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இதற்கு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 கப் தண்ணீரில் 5 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்க்கவும். தினமும் குளித்த பிறகு, டீ ட்ரீ ஆயிலை அக்குள்களில் தெளித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கலாம்.
Image Credit: freepik