தவறான Shaving methods-ஐ உடனே நிறுத்துங்க… இல்லையென்றால் Underarms black ஆகும்!

Shaving செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் அக்குள் கருமை ஏற்படுத்தும். சரியான முறையில் சேவிங் செய்வது எப்படி? எந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்? அக்குள் கருமையை நீக்க உதவும் வழிகள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
தவறான Shaving methods-ஐ உடனே நிறுத்துங்க… இல்லையென்றால் Underarms black ஆகும்!


நவீன வாழ்க்கை முறையில் சேவிங் என்பது ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மேற்கொள்ளும் வழக்கமான பழக்கமாக மாறிவிட்டது. குறிப்பாக அக்குள் முடியை அகற்ற சேவிங் செய்வது எளிதாக இருந்தாலும், தவறான முறையில் செய்யப்படும் சேவிங் சருமத்தில் கருமை ஏற்படுத்துகிறது. சரியான முறையில் சேவிங் செய்வது எப்படி? எந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்? அக்குள் கருமையை நீக்க உதவும் வழிகள் இங்கே.

Shave பண்ணும் போது செய்யும் தவறுகள்

பழைய ரேசர் பயன்படுத்துவது

பழைய பிளேட்கள் கூர்மை இழந்ததால், முடியை சுத்தமாக வெட்டாமல் சருமத்தை உரசுகின்றன. இதன் விளைவாக சருமம் பாதிக்கப்பட்டு கருமையாகும்.

சோப்புடன் சேவிங் செய்வது

பலர் ஷேவிங் ஜெல் அல்லது கிரீம் பயன்படுத்தாமல் சாதாரண சோப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது சருமத்தை உலரச் செய்து, கருமையை அதிகரிக்கிறது.

artical  - 2025-08-20T180830.541

அதிக அழுத்தம் கொடுத்து சேவிங் செய்வது

அதிக அழுத்தம் கொடுத்து ரேசரை ஓட்டுவது சருமத்தில் சிறு கீறல்களை ஏற்படுத்துகிறது. இது மெதுவாக பிக்மென்டேஷன் ஆகி கருமையாக மாறுகிறது.

தினசரி சேவிங் செய்வது

அடிக்கடி சேவிங் செய்வதால் சருமத்தின் மேல்தோல் மெல்ல மெல்ல சேதமடைகிறது. இதுவும் கைமடியில் கருமை உண்டாகும் முக்கிய காரணம்.

சரும பராமரிப்பு இல்லாமல் சேவிங் செய்வது

சேவிங் செய்த பிறகு மாய்ஸ்சுரைசர் அல்லது சூதிங் ஜெல் பயன்படுத்தாதது, உலர்ச்சி மற்றும் கருமை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அந்த பாகம் ரொம்ப கருப்பா இருக்கா.? இந்த பொருள் யூஸ் பண்ணுங்கள்.. நிச்சயம் நிறம் மாறும்.!

முன்னெச்சரிக்கைகள்

* கூர்மையான ரேசர் பயன்படுத்தவும் – ஒவ்வொரு 5-6 பயன்பாட்டுக்கு பின் பிளேடு மாற்றவும்.

* ஷேவிங் ஜெல்/கிரீம் பயன்படுத்தவும் – இது சருமத்தை மென்மையாக்கி, கருமை ஏற்படாமல் காக்கும்.

* சரியான திசையில் சேவிங் செய்யவும் – முடி வளர்ச்சி திசையில் மட்டுமே ரேசரை ஓட்டவும்.

* சேவிங் பின் மாய்ஸ்சுரைசர் அவசியம் – கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது இயற்கை லோஷன் பயன்படுத்தலாம்.

* அடிக்கடி சேவிங் தவிர்க்கவும் – குறைந்தது 2-3 நாட்கள் இடைவெளியுடன் சேவிங் செய்யவும்.

artical  - 2025-08-20T181048.321

இயற்கை வைத்தியங்கள்

* எலுமிச்சை சாறு – இயற்கையான ப்ளீச்சிங் ஆக செயல்படும்.

* கற்றாழை ஜெல் – குளிர்ச்சி தரும், கருமையை குறைக்கும்.

* உருளைக்கிழங்கு சாறு – பிக்மென்டேஷனை நீக்க சிறந்தது.

* பால் & மஞ்சள் பேக் – கைமடியை மென்மையாக்கி பிரகாசமாக்கும்.

மாற்று வழிகள்

சேவிங் காரணமாக கருமை அதிகரிக்கிறவர்களுக்கு, வாக்சிங், லேசர் ஹேர் ரிமூவல் போன்ற மாற்று வழிகளும் கிடைக்கின்றன. இவை சருமத்தை சுத்தமாகவும் நீண்ட நாட்கள் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

இறுதியாக..

சேவிங் தவறுகளை சரி செய்தாலே அக்குள் கருமையை தவிர்க்கலாம். சரியான பராமரிப்பு, சுகாதார பழக்கம், இயற்கை வைத்தியம் ஆகியவற்றை பின்பற்றினால், கைமடிகள் எப்போதும் மென்மையும் பிரகாசமும் கொண்டதாக இருக்கும்.

Read Next

மாசம் தவறாமல் Parlour போய் Skin clean up செய்றீங்களா.? நல்லது கெட்டது தெரிஞ்சு போங்க மேடம்..

Disclaimer

குறிச்சொற்கள்