Hand Wrinkles: கைகளின் சுருக்கத்தை நீக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!

  • SHARE
  • FOLLOW
Hand Wrinkles: கைகளின் சுருக்கத்தை நீக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!

கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்குவதற்கான வழிமுறைகள்

வீட்டில் உள்ள சில எளிய மற்றும் இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி கைகளில் உள்ள சுருக்கங்களை எளிதாக நீக்கலாம்.

வெள்ளரி

கையில் உள்ள சுருக்கங்களை நீக்குவதில் வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. வெள்ளரிக்காய் பெரும்பாலும் சரும பராமரிப்பிற்கும் உதவுகிறது. வெள்ளரிக்காயை துண்டாக வெட்டி, அதனை தேனில் குழைத்துக் கொள்ளவும். இந்த துண்டை கைகளில் சுருக்கம் உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இவ்வாறு குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்து பின் தண்ணீரில் கழுவ வேண்டும். இதன் மூலம், கையில் உள்ள சுருக்கங்களை நீக்க முடியும்.

வாழைப்பழ கூழ்

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை சுருக்கங்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சுருக்கங்களை நீக்க வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம். வாழைப்பழத்தை நன்றாக நசுக்கி, கூழாக்கி அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும். இதனை காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் சுருக்கங்களை நீக்க முடியும்.

கற்றாழை

மென்மையான சருமத்திற்கு கற்றாழை முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு கற்றாழையில் உள்ள மாலிக் அமிலமே காரணம் ஆகும். சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் கற்றாழையை ஜெல்லாக மாற்றி அதனை கையில் சுருக்கம் உள்ள இடத்தில் தடவி வருவதன் மூலம் சுருக்கங்களை நீக்க முடியும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெயைக் கொண்டு சுருக்கங்களை நீக்க முடியும். தினந்தோறும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன், கையில் சுருக்கங்கள் உள்ள இடத்தில் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு எண்ணெயை மசாஜ் செய்யும் போது பருத்தி கையுறைகளை அணிந்து கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது கைகள் மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

கேரட் மாஸ்க்

உணவுப் பொருளான கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்து விரைவில் சிகிச்சையளிக்கிறது. இதற்கு கேரட்டை தோல் நீக்கி அதனுடன் தேன் சேர்த்து சுருக்கம் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தேய்த்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடலாம். பிறகு கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சுருக்கங்கள் குறைவதைக் காணலாம்.

பால் மாய்ஸ்சுரைசர்

பாலில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது. எனவே இது தோல் சீரமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரப்பதம் மிகுந்த பாலை, மென்மையாக கைகளில் ஸ்கிரபிங் செய்யும் போது சுருக்கங்களை நீக்க முடியும்.

Image Source: Freepik

Read Next

Best Nail Care Tips: நகம் அழகாக மற்றும் பாதுகாப்பாக இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோப் பண்ணுங்க..

Disclaimer

குறிச்சொற்கள்