முக சுருக்கங்களை நீக்கி சருமம் மென்மையா, இளமையா இருக்கணுமா? இந்த 5 விஷயங்களை செய்யுங்க

How to get rid of facial wrinkles: சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே தான் சருமம், இளமையாகவும், மென்மையாகவும் இருக்க பலரும் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். இதில் சருமத்தை இளமையாக மற்றும் மென்மையாக வைத்திருக்க உதவும் இயற்கையான சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
முக சுருக்கங்களை நீக்கி சருமம் மென்மையா, இளமையா இருக்கணுமா? இந்த 5 விஷயங்களை செய்யுங்க

How to remove facial wrinkles: பொதுவாக வயது அதிகரிக்கும் போது சருமத்தில் சுருக்கங்கள் தோன்றலாம். ஆனால், இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களின் காரணமாக இளம் வயதிலேயே சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஏனெனில், சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனப்படும் புரதங்களின் அளவு தொடர்ந்து குறைவதால் சருமத்தில் சுருக்கங்களும், நேர்த்தியான கோடுகளும் தோன்ற ஆரம்பிக்கும். குறிப்பாக, இதன் விளைவு நம் சருமத்தில் தெரியும். இந்த சூழ்நிலையில், சருமத்தின் ஈரப்பதம், பளபளப்பு மற்றும் அழகு குறையத் தொடங்கலாம்.

இந்த சூழ்நிலையில், சருமத்தில் தோன்றும் சுருக்கங்களை மறைப்பதற்காக ஒப்பனை அல்லது சரும பராமரிப்பு சிகிச்சை முறையைக் கையாள்கின்றனர். ஆனால் இது ஒரு விலையுயர்ந்த செயல்முறையாக இருக்கலாம். மேலும் சில ஒப்பனை பொருள்களில் சில இரசாயனப் பொருள்கள் கலந்திருக்கலாம். இது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே இந்த காலகட்டத்தில், சில எளிய நடவடிக்கைகளின் உதவியுடன் சுருக்கங்களை நீக்கலாம். எனினும், வயது அதிகமாகிவிட்டால், சுருக்கங்களை முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் சுருக்கங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியும். சருமத்தை கவனித்துக் கொள்வதுடன், உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் சரும சுருக்கங்களைக் குறைக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ice Cube For Face: முகத்திற்கு ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்வது நல்லதா?

சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுமுறை

முகத்தில் தோன்றக்கூடிய சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை நீக்குவதற்கு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். முகச்சுருக்கங்களை நீக்குவதற்கு கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பது முக்கியம். எனவே சருமத்தில் கொலாஜனை அதிகரிக்க, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தவிர, வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த கிரீம் அல்லது சீரம் தடவலாம். இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது சுருக்கங்களிலிருந்தும் நிவாரணம் பெற வழிவகுக்கிறது.

போதுமான தண்ணீர் குடிப்பது

பல்வேறு வகையான ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதால் மட்டும் சுருக்கங்களை மறைத்து விட முடியாது. இதற்கு நன்றாக சாப்பிடுவதும் குடிப்பதும் மிகவும் முக்கியமாகும். எனவே, முகச் சுருக்கங்களைப் போக்க விரும்பினால், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது. மேலும் தண்ணீர் குடிப்பதன் மூலம் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைத் தடுக்கலாம். தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும்.

எண்ணெய் மசாஜ் செய்வது

முடி வேகமாக வளர்வதற்கு மசாஜ் செய்வது அவசியம். அதே போல, முகத்தில் எண்ணெய் மசாஜ் செய்வது, சருமத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவுகிறது. கூடுதலாக, இது கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்வது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை நீக்குகிறது. இதற்கு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆர்கன் எண்ணெயைப் பயன்படுத்தலாம். விரும்பினால், அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம். ஆனால் நிச்சயமாக அதில் தேங்காய் எண்ணெயைச் சேர்க்க வேண்டும். இல்லையெனில் அரிப்பு, எரியும் உணர்வை சந்திக்க நேரிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Aloevera for dry skin: வறண்ட சருமத்தை மென்மையா, பளபளப்பா மாத்தணுமா? கற்றாழை ஒன்னு போதும்

கற்றாழையை சருமத்திற்கு தடவுவது

முகத்தில் சுருக்கங்கள் இருப்பின், கற்றாழையைப் பயன்படுத்தலாம். கற்றாழையைப் பயன்படுத்துவது சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், கற்றாழை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் உள்ள வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது தவிர, கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்கவும், மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதற்கு, கற்றாழை ஜெல்லை எடுத்து முகம் முழுவதும் தடவலாம். 20-25 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். சுருக்கங்களை நீக்குவதற்கு கற்றாழையை ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துவது

வாழைப்பழம் முகத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்றவை சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முகத்தில் சுருக்கங்கள் இருப்பின், வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து, அதை சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவலாம். வாழைப்பழத்தில் உள்ள பண்புகள், சருமம் தொடர்பான பல பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைப்பதுடன், சுருக்கங்களை நீக்குகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: சரும சுருக்கத்தை நீக்க பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க..

Image Source: Freepik

Read Next

பெண்கள் குளிக்கும்போது இந்த 5 தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது?

Disclaimer