Aloevera for dry skin: வறண்ட சருமத்தை மென்மையா, பளபளப்பா மாத்தணுமா? கற்றாழை ஒன்னு போதும்

Is aloe vera good for dry skin on your face: வறண்ட சருமம் இன்று பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகும். இதிலிருந்து விடுபட உதவும் சிறந்த மற்றும் எளிய தீர்வாக கற்றாழை அமைகிறது. இதில் சருமத்திற்கு கற்றாழை தரும் நன்மைகள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Aloevera for dry skin: வறண்ட சருமத்தை மென்மையா, பளபளப்பா மாத்தணுமா? கற்றாழை ஒன்னு போதும்

Benefits of aloe vera for dry skin: சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக வறண்ட சருமம், கரும்புள்ளிகள் தோன்றுதல், மெல்லிய கோடுகள் உள்ளிட்ட பல்வேறு சரும பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், அழகு சார்ந்த நன்மைகளைப் பெறவும் தாவர அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி இயற்கையான அழகைப் பெறலாம்.

அவ்வாறு சரும பராமரிப்பு வழக்கத்தில் கற்றாழையைச் சேர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும். சிலர் இயற்கையாகவே வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பர். இன்னும் சிலருக்கு குளிர் காலநிலை, சூரிய ஒளி, சூடான குளியல் அல்லது கடுமையான சோப்புகள் உள்ளிட்ட காரணிகளால் சருமம் வறண்டு காணப்படும். இந்த வறண்ட சருமத்திற்கு ஏற்ற சிறந்த தாவர மூலங்களில் ஒன்றாக கற்றாழை அமைகிறது. இது பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அவ்வாறு, வறண்ட சருமத்திற்கு கற்றாழை பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அலோவேரா ஜெல்லை இப்படி யூஸ் பண்ணா முடி உதிர்வு டக்குனு குறைஞ்சிடும்!

வறண்ட சருமத்திற்கு கற்றாழை தரும் நன்மைகள்

பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் மிகவும் பிரபலமான இயற்கை தீர்வுகளில் ஒன்றாகும். இதில் சருமத்திற்கு கற்றாழையைப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் காண்போம்.

முகப்பருவை எதிர்த்துப் போராட

வறண்ட சருமத்திற்கு கற்றாழையைப் பயன்படுத்துவது முகப்பரு அல்லது கறைகளைப் போக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளே காரணமாகும். இது எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தவும், பருக்களின் அளவு மற்றும் சிவப்பைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், சருமத்தை நீரேற்றமாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதன் மூலம் முகப்பரு வெடிப்பைத் தடுக்கலாம். இந்த ஜெல்லை ஒரு நாளைக்கு பல முறை முகப்பரு புள்ளிகளில் நேரடியாகப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

1 டீஸ்பூன் வேப்பம்பூ தூள் அல்லது ஒரு கைப்பிடி இலைகள், சில துளிகள் தேயிலை மர எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலக்க வேண்டும். முகத்தை சுத்தம் செய்த பிறகு இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம். பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் மெதுவாகக் கழுவி ஈரப்பதமாக்க வேண்டும். இதைப் பயன்படுத்துவது பாக்டீரியாக்களைக் கொன்று முகப்பருவை ஏற்படுத்தும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

சருமத்தை ஈரப்பதமாக்க

கற்றாழை ஜெல் இயற்கையாகவே ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராகச் செயல்படுகிறது. அது அதிகளவு தண்ணீர் கொண்ட தாவரமாகும். எனவே இது வறண்ட சருமத்தை நிரப்பவும் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. இதை சருமத்தில் தடவும்போது, அது ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது. பல்வேறு கிரீம்கள் அல்லது லோஷன்களைப் போலல்லாமல், வறண்ட சருமத்திற்கு கற்றாழை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும் இது நாள் முழுவதும் நீண்ட கால நீரேற்றத்தை வழங்குகிறது. இது முகப்பரு பாதிப்பு மற்றும் எண்ணெய் பசை சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாகும்.

பயன்படுத்தும் முறை

முகம் அல்லது உடலை கழுவிய பிறகு, கற்றாழை ஜெல்லின் மெல்லிய அடுக்கை நேரடியாக சருமத்தில் தடவலாம். இவ்வாறு 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் விரைவான நீரேற்றத்தைப் பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Aloe vera for face: கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து தடவுங்க.. முகம் சும்மா தக்க தகன்னு மின்னும்!

வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்கு

வெயிலில் அதிக நேரம் இருப்பதால், சருமம் வறண்டு, கரடுமுரடாக, சிவந்து காணப்படலாம். இதனைப் போக்க கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இதன் குளிர்ச்சியான விளைவுடன், வறண்ட சருமத்திற்கு ஏற்றதாக அமைகிறது. மேலும், இது இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வெயிலில் எரிந்த சருமத்தை ஆற்றும் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை வெள்ளரிக்காயுடன் கலந்து மென்மையான பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். இந்த கலவையை வெயிலால் எரிந்த சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இவை இரண்டில் உள்ள குளிர்ச்சியான விளைவு சருமத்தை ஆற்றும் மற்றும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

முதுமை அறிகுறிகளைக் குறைக்க

வயதாகும் போது சருமம் கொலாஜன் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தை குறைவாக உற்பத்தி செய்வதால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைப்பு குறைகிறது. இதன் காரணமாக வறண்ட, மந்தமான சருமம் ஏற்படுகிறது. மேலும், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் தொய்வு போன்ற வயதான அறிகுறிகளும் தோன்றலாம். இந்நிலையில் கற்றாழை ஜெல் ஒரு சிறந்த தேர்வாக அமையும். இந்த ஜெல்லில் வயதான எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இதில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை வைட்டமின் ஈ எண்ணெயுடன் இரவு தூங்கும் முன் முகத்தில் மெதுவாக தடவ வேண்டும். இதை இரவு முழுவதும் ஈரப்பதமூட்டும் ஃபேஸ்மாஸ்க்கைப் போல பயன்படுத்தலாம். இது சருமத்தைப் புத்துணர்ச்சியடையச் செய்து, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Skin care remedies: சருமம் ஹெல்த்தியா, பளபளப்பா இருக்கணுமா? இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Natural Blush: ரோஸி லுக் கொண்டு வர வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்.!

Disclaimer