சருமம் எந்த சுருக்கமும் இல்லாம பொலிவா, இளமையா இருக்கணுமா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

Wrinkles appear on the face at a young age: இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே வயதானவராகத் தோன்றும் அறிகுறிகள் தோன்றலாம். இதில், கோடுகள், முகப்பருவுக்குப் பிறகு தோன்றும் புள்ளிகள், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவை அடங்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக சில வீட்டு வைத்தியங்களைக் கையாள வேண்டும்.
  • SHARE
  • FOLLOW
சருமம் எந்த சுருக்கமும் இல்லாம பொலிவா, இளமையா இருக்கணுமா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க


Home remedies for the problem of wrinkles on the face: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும். பொதுவாக, வயதாகும் போதே முகத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் அல்லது தொய்வுற்ற தோல் போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம். ஆனால், இன்றைய நவீன காலத்தில் மோசமான காரணிகளால் நாம் இளம் வயதிலேயே பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.

ஆனால், இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் குப்பை உணவுகளை அதிகம் உட்கொள்வது, புற ஊதா கதிர்களை நேரடியாக வெளிப்படுத்துவது, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்றவை சருமத்தை இது போன்ற வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: சருமத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் ஜோஜோபா ஆயில்.. இதை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

சரும சுருக்கம் நீங்க என்ன செய்வது?

இது போன்ற சூழ்நிலையில், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதற்கு மக்கள் பலரும் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த சருமப் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றில் உள்ள இரசாயனப் பொருள்கள் காரணமாக, சருமம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்தாலும், பல பக்க விளைவுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முடிந்தவரை இயற்கையான பொருட்களையே வலியுறுத்துவதன் மூலம் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கலாம்.

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்க இயற்கை வைத்தியம்

மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அதே சமயம், பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இவை சருமத்தை பளபளப்பாக மற்றும் மென்மையாக மாற்றுவதற்கு உதவுகிறது. மஞ்சளுடன் பாலைக் கலந்து ஒரு பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். அதன் பின்னர், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இவை சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

வைட்டமின் ஈ

இவை சரும ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில், இவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களின் எண்ணெயை சருமத்தில் தடவலாம். இது தவிர, வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை மற்ற பிற சரும பராமரிப்புப் பொருள்களுடன் கலந்து சருமத்தில் தடவ வேண்டும்.

ஆரஞ்சு தோல் பவுடர்

ஆரஞ்சு உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், இதன் தோலும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. ஆரஞ்சு தோல் பவுடர் சருமத்தில் உள்ள முகப்பருவைக் குறைக்க உதவுகிறது. இதற்கு ஆரஞ்சு தோலை உலர வைத்து, அதைப் பொடி செய்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதை 15 நிமிடங்கள் வைத்து அதன் பிறகு கழுவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முகப்பரு நீங்க இதுவே போதும்.. பிரியாணி இலை, இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்

கற்றாழை அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளுக்காக நன்கு பெயர் பெற்றதாகும். இவை முக்கியமாக இறந்த சருமத்தை நீக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது. இதற்கு புதிய கற்றாழை இலைகளிலிருந்து ஜெல்லைப் பிரித்தெடுத்து, அதில் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைக் கலந்து சருமத்தில் தடவி, விரல் நுனியில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை முகத்தில் 20 நிமிடங்கள் வைத்து, அதன் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவ வேண்டும்.

குறிப்புகள்

இது போன்ற வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் முகச்சுருக்கத்தை நீக்கி, இளமையான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். இது தவிர, அன்றாட வாழ்க்கை முறையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை சருமத்தில் தோன்றும் சுருக்கங்களின் பிரச்சனையை படிப்படியாகக் குறைக்க வழிவகுக்கிறது.
  • முடிந்தவரை வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், அதிக உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.
  • குளிர்பானங்கள் மற்றும் பேக்கரி இனிப்புகள் போன்ற செயற்கை இனிப்புகள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சருமத்தில் சுருக்கங்களையும், முன்கூட்டியே வயதாவதையும் ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முக சுருக்கங்களை நீக்கி சருமம் மென்மையா, இளமையா இருக்கணுமா? இந்த 5 விஷயங்களை செய்யுங்க 

Image Source: Freepik

Read Next

Ghee on the Face: இரவு படுக்கைக்குச் செல்லும் முகத்திற்கு நெய் தடவினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Disclaimer