Benefits of jojoba oil for skin lightening: சருமத்தைப் பளபளப்பாக பல்வேறு சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். இதில் லோஷன், மாய்ஸ்சரைசர் அல்லது முக எண்ணெய் போன்றவை அடங்கும். இந்த வரிசையில் சருமத்திற்குப் பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களில் ஜோஜோபா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. சிம்மண்ட்சியா சினென்சிஸ் தாவரத்தின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய திரவ மெழுகு எஸ்டர் பொதுவாக எண்ணெய் என அழைக்கப்படுகிறது. எனினும், இதன் வேதியியல் அமைப்பு சருமத்தால் உற்பத்தி செய்யப்படக்கூடிய இயற்கை எண்ணெயான செபம் போன்றதாகும்.
இவை சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இவை வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. மேலும் சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு மற்ற நன்மைகளில் முகப்பருவை குறைப்பது அடங்கும். இது தவிர, சரும சுருக்கங்களைச் சமாளிக்கவும் உதவுகிறது. இதில் ஜோஜோபா எண்ணெயை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Walnut Oil Skin Care: ஒரு எண்ணெய் ஒரே எண்ணெய் போதும்., சருமம் பளபளக்கும், ஜொலிஜொலிக்கும்!
சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள்
ஹெல்த்சைட் தளத்தில் குறிப்பிட்ட படி, சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
சரும அமைப்பை மேம்படுத்த
சரும அமைப்பை மேம்படுத்த விரும்புபவர்கள், சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் வழக்கமான பயன்பாடு இந்த வகை சரும பராமரிப்பு தயாரிப்பு சீரான சரும நிறத்தை பராமரிக்கவும், கரடுமுரடான திட்டுகளை மென்மையாக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்த
சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயைப் பயன்படுத்துவது இயற்கையான சருமத்தைப் பிரதிபலிக்க உதவுகிறது. இது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க சருமத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
சருமத்தை குணப்படுத்துவதற்கு
சருமத்தை குணப்படுத்த ஜோஜோபா எண்ணெய் சிறந்த தேர்வாகும். குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மேலும் இது வடுக்கள் மற்றும் சிறிய காயங்களைக் குணமடைய உதவுகிறது. இது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கவும், காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
வீக்கத்தைத் தணிக்க
அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்த ஜோஜோபா எண்ணெய் தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற எரிச்சலூட்டும் சரும நிலைகளை அமைதிப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. எனினும், சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியம். குறிப்பாக, அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்படும் ஒரு நிலை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Oil for Shiny Hair: இந்த எண்ணெயை யூஸ் பண்ணா, முடி ஸ்ட்ராங்கா மட்டுமல்ல சைனிங்காவும் வளரும்!
முகப்பருவை எதிர்த்துப் போராட
ஜோஜோபா எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இது காமெடோஜெனிக் அல்லாததாக இருப்பதால், இது வெடிப்புகளை ஏற்படுத்தாமல் துளைகளை சுத்தப்படுத்த உதவுகிறது. ஆய்வு ஒன்றில், ஜோஜோபா எண்ணெய் கொண்ட ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது லேசான முகப்பரு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது.
நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க
சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், ஆய்வு ஒன்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட தாவர பொருட்கள் சரும நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
ஆழமாக ஈரப்பதமாக்க
இதை சருமத்திற்கு பயன்படுத்துவது, எண்ணெய் ஆழமாக ஊடுருவி, துளைகளை அடைக்காமல் சருமத்தை ஈரப்பதமாக்க அனுமதிக்கிறது. இது இது வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சரும வகைகளைக் கொண்டவர்களுக்கு ஏற்றதாகும். இவை அதிக சரும ஈரப்பதமூட்டும் திறனைக் கொண்டுள்ளது.
சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
எண்ணெய் பசை சருமத்திற்கு
இரவில் டோனரைப் பயன்படுத்திய பிறகு 2 முதல் 3 சொட்டுகள் ஜோஜோபா எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை சமநிலைப்படுத்தவும், துளைகள் அடைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. எனினும், எண்ணெய் பசையாக இருப்பதைத் தவிர்க்க குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.
முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு
இதை கற்றாழை ஜெல்லுடன் ஒரு துளி அல்லது இரண்டு துளிகள் சேர்த்து பயன்படுத்தலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை மோசமாக்காமல் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது.
வறண்ட சருமத்திற்கு
ஜோஜோபா எண்ணெயை சில துளிகள் நேரடியாக வறண்ட மற்றும் சுத்தமான சருமத்தில் மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம் அல்லது வழக்கமான க்ரீமுடன் கலந்து பயன்படுத்தலாம். சருமத்தை நீரேற்றமாக வைக்க காலை மற்றும் இரவில் தடவலாம்.
சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெயை இப்படி பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். எனினும், சருமத்திற்கு புதிய பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Jojoba Oil For Nails: நகங்கள் வேகமாக வளரணுமா.? இந்த ஒரு எண்ணெய் போதும்.
Image Source: Freepik