Best hair oil for strong and shiny hair: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக, பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆனால், இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் வேறு சில காரணங்களால் முடி உதிர்வு, முடி வறட்சி மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் இயற்கையான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற விரும்புபவர்கள் இயற்கையான முடி எண்ணெய்கள் சிறந்த தேர்வாகும்.
முடிக்கு பளபளப்பு மற்றும் வலுவூட்டுதலை ஏற்படுத்த வழக்கமான முடி எண்ணெய்களைச் சேர்ப்பது வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதன் படி, தலைமுடிக்கு ஆர்கன் எண்ணெய் , தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற அனைத்துமே அதன் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இந்த எண்ணெய்களில் நிறைந்துள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றது. இது முடியை ஊடுருவி முடி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. முடியை வலுவாக்க மற்றும் மென்மையாக மாற்ற உதவும் எண்ணெய் வகைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Castor Oil For Hair: கரு கரு முடிக்கு விளக்கெண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!
மென்மையான, வலுவான தலைமுடிக்கு உதவும் எண்ணெய்
இந்த எண்ணெய்களைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுவதன் மூலம் தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் பளபளப்பை மீட்டெடுக்கலாம். இதில் தலைமுடிக்கு எந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
தேங்காய் எண்ணெய்
இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகும். இதை முடிக்கு பயன்படுத்தும் போது, தலைமுடியில் நன்கு ஆழமாக ஊடுருவுகிறது. மேலும், இதில் அதிக லாரிக் அமிலம் இருப்பதால், சேதமடைந்த கூந்தலில் புரத இழப்பைத் தடுப்பதன் மூலம் முடியை அப்படியே வைத்திருக்க உதவுகிறது. இதற்கு சூடான தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் சுமார் 30 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். இது தலைமுடியின் அழகை மீட்டெடுக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய்
வறண்ட அல்லது கரடுமுரடான கடினமான முடியை சீரமைக்க விரும்புபவர்கள், அவை மேலும் சேதமடைவதைத் தடுக்க இந்த ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஷாம்புக்கு முந்தைய சிகிச்சையாக, இதை சிறிய அளவு எடுத்து, சூடாக்கி, முடியைப் பிரித்து, 15 முதல் 30 நிமிடங்கள் வைத்து, பிறகு சுத்தப்படுத்தலாம்.
ஆர்கன் எண்ணெய்
'திரவ தங்கம்' என்றழைக்கப்படும் ஆர்கான் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை முடிக்கு நீரேற்றத்தை வழங்கவும், பளபளப்பைச் சேர்க்கவும் உதவுகிறது. இந்த எண்ணெய் மிகவும் இலகுரக எண்ணெய் ஆகும். மேலும், இது லீவ்-இன் தெரபியாகப் பயன்படுத்தப்படலாம். இதற்கு ஆலிவ் எண்ணெயின் ஒரு சில துளிகள் எடுத்து, ஈரமான முடியில் தடவுவது முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தவும், முடி மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வெட்ட வெட்ட முடி வளர உதவும் வெட்டி வேர் எண்ணெய்! இப்படி தயார் செய்யுங்க
ஜோஜோபா எண்ணெய்
உலர்ந்த முடிகளை ஈரப்பதமாக்க விரும்புபவர்களுக்கு இந்த ஜோஜோபா எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. கூடுதலாக, இந்த ஜோஜோபா எண்ணெய் இலகுவானதாக மட்டுமல்லாமல், சருமத்தில் உறிஞ்சப்படுகிறது. எனவே இது ஒரு பளபளப்பான மேம்பாட்டாளராக தினமும் பயன்படுத்தப்படக் கூடியதாகும். மேலும், இந்த எண்ணெயை சிறிது எடுத்து உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்த்து, வறண்ட கூந்தலின் நடு மற்றும் கீழ் பகுதிகளில் தடவலாம்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் நிறைந்திருக்கும் மக்னீசியம் சத்துக்களின் காரணமாகவே, இது தலைமுடிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவை முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை சிறிது சூடாக்கி, உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்த்து, தலைமுடியின் உச்சந்தலை மற்றும் முனைகளில் பயன்படுத்தலாம். இது முடியை மென்மையாக வைக்க உதவுகிறது.
தலைமுடிக்கு இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவது முடியை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வேர் வேரா முடி கொட்டுதா? வீட்டிலேயே தயார் செய்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik