வெட்ட வெட்ட முடி வளர உதவும் வெட்டி வேர் எண்ணெய்! இப்படி தயார் செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
வெட்ட வெட்ட முடி வளர உதவும் வெட்டி வேர் எண்ணெய்! இப்படி தயார் செய்யுங்க


How to make vetiver oil for hair: இன்றைய ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் மோசமான பழக்கங்களால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் பலரும் முடி உதிர்வு, முடி வறட்சி, நுனி முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி உதிர்தல் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இது தவிர, அழுத்தம், மாசுபாடு, மரபியல் மற்றும் மோசமான ஊட்டச்சத்துக்கள் போன்ற பல்வேறு காரணிகளும் முடி உதிர்தலுக்குக் காரணமாகிறது.

மேலும் முடி உதிர்வைக் குறைக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பலர் முடி சார்ந்த தயாரிப்புகளை சந்தையில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை வழக்கமாக ஆடம்பரமானதாக இருப்பினும், தீங்கு விளைவிக்கும் இரசாயனக் கலவைகளைப் பெற்றிருக்கலாம். இவை இறுதியில் முடியை சேதப்படுத்துகிறது. மாற்றாக, முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான இயற்கை வைத்தியங்களைக் கையாளலாம். இதற்கு சிறந்த தீர்வாக வெட்டி வேர் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Rosemary Hair Benefits: முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி தரும் ஆரோக்கிய நன்மைகள்

வெட்டிவேர் என்றால் என்ன?

இது ஒரு பசுமையான புல் வகையைச் சார்ந்ததாகும். இது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டிவேர் ஒரு பூர்வீக தாவரமாகக் கருதப்படுகிறது. வெட்டிவேர் செடியில் நீண்ட வேர்கள், இலைகள் உள்ளது. இதில் வேர் மிகவும் பயன்படுத்தப்படக்கூடிய பகுதியாகும். இந்த வெட்டிவேரின் அத்தியாவசிய எண்ணெய் ஆனது நறுமண வேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது வாசனை திரவியங்கள் மற்றும் முடி பராமரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது நீண்ட காலம் வரை நீடிக்கும்.

முடிக்கு வெட்டிவேர் எண்ணெய்

முடி ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, வெட்டிவேர் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. முடி வளர்ச்சிக்கு இயற்கையான விருப்பமாக வெட்டிவேர் எண்ணெய் அமைகிறது. ஏனெனில், இது சருமம் மற்றும் அழகு நன்மைகளைத் தருவதாகவும் கூறப்படுகிறது. இவை சருமத்தைப் பாதுகாக்கவும், சேதத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, வெட்டி வேர் சுருக்கங்களைக் குறைக்கவும், ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. முடி வளர்ச்சிக்கான வெட்டிவேரின் நன்மைகள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு வெட்டிவேர் தரும் நன்மைகள்

முடி வளர்ச்சியை மேம்படுத்த

வெட்டிவேர் எண்ணெயில் நிறைந்துள்ள மூலிகைகள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. வெட்டிவேர் எண்ணெய் நீராவி வடித்தல் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு, ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் முடி எண்ணெய்கள் உட்பட பல்வேறு முடி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெட்டிவேர் எண்ணெயில் உள்ள செஸ்கிடர்பீன்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • முடி வளர்ச்சிக்கு வெட்டிவேர் எண்ணெய் தயார் செய்ய கேரியர் எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம்.
  • இதற்கு ஒரு சிறிய கொள்கலனில் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற கெரியர் எண்ணெயில் தோராயமாக 2-3 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதில் 4-6 துளிகள் வெட்டிவேர் எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
  • இதில் எண்ணெய்கள் சரியாக கலக்கப்படுவதை உறுதிசெய்ய நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த எண்ணெயை முடி வளர்ச்சியைத் தூண்ட விரும்பும் பகுதிகளில் உச்சந்தலையில் தடவ வேண்டும்.
  • சிறந்த உறிஞ்சுதலுக்காக, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அல்லது ஓரிரவில் அதை விட்டு வைக்கலாம்.

முடி வேர்களை பலப்படுத்துவதற்கு

முடி வேர்களை வலுப்படுத்தவும், முடி உடைவதைத் தவிர்க்கவும் வெட்டிவேர் எண்ணெயைப் பயன்படுத்தலாம். வெட்டிவேர் எண்ணெயில் உள்ள அமினோ அமிலங்கள் முடி தண்டுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. மேலும் இது தலைமுடியை வலிமையாக்கவும், முடி உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது. இது தவிர, இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் முடியை பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள புரோலின், டைரோசின் போன்ற அமினோ அமிலங்கள் முடி தண்டுக்கு வலுவூட்டவும், முடி உடைவதைக் காப்பாற்றவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Garlic Oil for Hair: புல்லட் வேகத்தில் முடி வளர பூண்டு எண்ணெயை இப்படி வீட்டிலேயே தயார் செய்யுங்க!

பயன்படுத்தும் முறை

  • வெட்டிவேர் எண்ணெயை சில துளிகள் கலந்து உச்சந்தலை மற்றும் முடியில் மசாஜ் செய்யலாம்.
  • இதை ஒரு மணி நேரம் வைத்து மிதமான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.

பொடுகை நீக்குவதற்கு

உச்சந்தலையில் அரிப்பு மற்றும் செதில்களை ஏற்படுத்தும் விதமாக பொடுகு அமைகிறது. இது வழக்கமாக உச்சந்தலையில் ஈஸ்ட் அதிகமாக அதிகரிப்பதன் விளைவாகக் கருதப்படுகிறது. வெட்டிவேர் எண்ணெயில் உள்ள இயற்கையான பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் பொடுகைக் குறைக்கவும், உச்சந்தலையில் ஈஸ்ட் வளர்ச்சியைக் குறைக்கவும், உச்சந்தலையை ஆற்றவும் உதவுகிறது. இது அரிப்பு, உரித்தல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. இதற்கு வெட்டிவேர் எண்ணெயில் உள்ள குசிமோல் போன்ற மூலிகை பூஞ்சை காளான் கலவைகள் இருப்பதே ஆகும். இது உச்சந்தலையை அமைதிப்படுத்தவும், அரிப்பு மற்றும் செதில்களை குறைக்கவும் உதவுகிறது.

பயன்படுத்துவது எப்படி?

  • ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் வெட்டிவேர் எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் தேய்க்கலாம்.
  • இதை குறைந்த 1 மணி நேரம் வைத்து பிறகு மிதமான ஷாம்பூ கொண்டு கழுவி விடலாம்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் வெட்டிவேர் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Hemp Seed Oil For Hair: முடி நீளமா, மென்மையா, அடர்த்தியா வளர சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகள்

Image Source: Freepik

Read Next

இனி ஸ்ட்ரெய்ட்னர்லாம் வேணாம்! நேரான, மென்மையான முடிக்கு இத செய்யுங்க

Disclaimer