இனி ஸ்ட்ரெய்ட்னர்லாம் வேணாம்! நேரான, மென்மையான முடிக்கு இத செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
இனி ஸ்ட்ரெய்ட்னர்லாம் வேணாம்! நேரான, மென்மையான முடிக்கு இத செய்யுங்க


How to get silky and smooth hair at home: இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் போதிய ஊட்டச்சத்து இல்லாமை, பராமரிப்பு இல்லாதது போன்றவை முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

இது தவிர, முடியை நேராகப் பெறுவதற்கு பலரும் ஸ்ட்ரெய்ட்னரைப் பயன்படுத்துவர். இதில் முடியை நேராக்க வெப்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவது தலைமுடி உலர்ந்ததாகவும், வறண்ட மற்றும் மந்தமாகவும் காணப்படலாம். நேரான, பட்டுபோன்ற கூந்தலைப் பெற நாம் சில இயற்கை வைத்திய முறைகளைக் கையாளலாம். இதில் முடியை நேராக்கவும், பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Mask For Straighten: தலைமுடி நேராக வளர இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

நேரான, நீளமான முடிக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்

இயற்கையான முறையில் முடியை சேதப்படுத்தாமல் நீண்ட, நேரான முடிக்கு சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.

கற்றாழை ஹேர் மாஸ்க்

தலைமுடிக்கு கற்றாழை பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியை மென்மையாக மற்றும் மிருதுவாக வைக்க உதவுகிறது. இது முடியை நன்கு ஊடுருவி, அதை நன்கு ஈரப்பதமாக்குகிறது. இதன் மூலம் ஃபிரிஸ் மற்றும் சுருட்டைகளின் வாய்ப்பைக் குறைக்கலாம். இதற்கு முதலில் அரை கப் அளவிலான வெதுவெதுப்பான எண்ணெய் மற்றும் அரை கப் கற்றாழை எடுத்துக் கொள்ளலாம். இதை இரண்டையும் கலந்து, தலைமுடிக்குத் தடவ வேண்டும். இதை 30 முதல் 40 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவலாம்.

வாழைப்பழ ஹேர் மாஸ்க்

வாழைப்பழம், தயிர், ஆலிவ் எண்ணெய் போன்ற மூன்று பொருள்கள் அனைத்துமே இயற்கை கண்டிஷனர்களால் நிரம்பியதாகும். இதற்கு பழுத்த இரண்டு வாழைப்பழங்களுடன் ஆலிவ் எண்ணெய், தயிர், மற்றும் 2 தேக்கரண்டி தேன் போன்றவற்றை எடுத்து நன்றாக பிசைந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் பூசி, ஷவர் கேப் மூலம் பாதுகாக்க வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை அரை மணி நேரம் வைத்து அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

பால் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

இது சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தைத் தருவதுடன், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். எனினும் பால் ஒரு சிறந்த இயற்கையான தேர்வாக அமைகிறது. பால் ஒரு புரதச்சத்து நிறைந்தது என்பதால், இது தலைமுடியை மென்மையாக்குவதுடன், முடியின் தண்டை பலப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு இரண்டு தேக்கரண்டி தேனுடன் பால் கலக்க வேண்டும். பிறகு, இதில் புதிய, நொறுக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகளை சேர்க்க வேண்டும். இதை தலைமுடியில் தடவி ஒரு டவலைச் சுற்றிக் கொள்ளலாம். இதை 2-3 மணி நேரம் வைத்து பிறகு கழுவிக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Straightening Effects: அடிக்கடி முடி ஸ்ட்ரெய்ட்னிங் செய்பவர்களா நீங்கள்? இத தெரிஞ்சிக்கோங்க

முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்

முட்டை, ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையானது தலைமுடிக்கு ஊட்டமளித்து வலுவூட்டும் நன்மைகளை அளிக்கிறது. இது தலைமுடியை நேராக்க உதவுகிறது. இதற்கு 2 முட்டைகள் மற்றும் 1 பகுதி ஆலிவ் எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் தடவ வேண்டும். பிறகு இதை ஒரு மணி நேரத்தில் கழுவிக் கொள்ளலாம். இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை நேராகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது.

விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்

சரும நோய்த்தொற்றுக்கள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு நன்மைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது. இது தலைமுடியை நேராக்க உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க்கிற்கு முதலில் எண்ணெயை சூடாக்கி, தலைமுடியில் மசாஜ் செய்ய வேண்டும். இதைச் சுற்றி ஒரு சூடான, ஈரமான துண்டை போர்த்தி அரை மணி நேரம் அப்படியே வைக்கலாம். பிறகு மென்மையான ஷாம்பூ உடன் தலைமுடியைக் கழுவிக் கொள்ளலாம்.

இந்த ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் நீண்ட, நேரான, அடர்த்தியான முடி வளர்ச்சியைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Straightening Hair Mask: சுருள் முடியை நேராக்கணுமா? இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

நெய்யுடன் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை முடிக்கு பயன்படுத்தலாமா?

Disclaimer