Hair Mask For Straighten: தலைமுடி நேராக வளர இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Hair Mask For Straighten: தலைமுடி நேராக வளர இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

இதனைத் தவிர்த்து, தலைமுடியை நேராக மாற்ற சில ஹேர் மாஸ்க்குகளை வீட்டிலேயே பயன்படுத்தலாம். இது இயற்கையானது மட்டுமல்லாமல் முடிக்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது. மேலும் இந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது முடிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவை முடிக்கு பிரகாசத்துடன், பளபளப்பையும் அதிகரிக்கிறது. முடி நீண்ட நேரம் நேராகவும், எந்த பக்கவிளைவுகளும் இல்லாதவாறு இருக்க பயன்படுத்தும் ஹேர் மாஸ்க்குகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

முடி நேராக மற்றும் மென்மையாக இருக்க ஹேர் மாஸ்க்குகள்

சில இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயார் செய்யப்படும் ஹேர் மாஸ்க்குகள் முடிக்கு ஊட்டமளிப்பதுடன், நேராக வைக்க உதவுகிறது.

தயிர் மற்றும் வாழைப்பழம் ஹேர் மாஸ்க்

தேவையானவை

  • பழுத்த வாழைப்பழம் - 1
  • தயிர் - 1 ஸ்பூன்
  • தேன் - 1 தேக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை

  • வாழைப்பழம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க் செய்வதற்கு, முதலில் மேலே கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் கலந்து பேஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
  • பின் இந்த கலவையை தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.
  • அதன் பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசி விடலாம்.
  • இந்த ஹேர் மாஸ்க் கூந்தலுக்கு இயற்கையான பிரகாசத்தை அளிப்பதுடன், முடியை நேராக்குகிறது.

பப்பாளி மற்றும் வாழைப்பழம் ஹேர் மாஸ்க்

தேவையானவை

  • பழுத்த வாழைப்பழம் - 1
  • பப்பாளி (மசித்தது) - 3 ஸ்பூன்

செய்முறை

  • வாழைப்பழம் மற்றும் பப்பாளி ஹேர் மாஸ்க் செய்வதற்கு, பழுத்த வாழைப்பழத்தில் மசித்த பப்பாளியைச் சேர்க்கவும்.
  • இதை பேஸ்ட்டாக முடியில் தடவி 30 நிமிடங்கள் வரை வைக்கவும்.
  • அதன் பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி விடலாம். இந்த ஹேர் மாஸ்க் முடியை நீரேற்றமாக வைப்பதுடன், நேராகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Loss Prevention: முடி உதிர்வை இயற்கையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்யுங்க!

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க்

தேவையானவை

  • முட்டை - 1
  • ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

  • இந்த ஹேர் மாஸ்க் செய்ய, முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து பேஸ்ட்டாக தயார் செய்யவும்.
  • பின் இந்த கலவையை முடியில் 30 நிமிடங்கள் தடவி, பின் தலைமுடியை தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • புரதங்கள் மற்றும் வைட்டமின் நிறைந்த இந்த ஹேர் மாஸ்க், முடியை ஈரப்பதமாக வைப்பதுடன், முடியை இயற்கையாக நேராக்குகிறது.

முடியை நேராக்கவும், மென்மையாகவும் மாற்ற மேலே கூறப்பட்ட ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். எனினும் முடி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, இதைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Straightening Effects: அடிக்கடி முடி ஸ்ட்ரெய்ட்னிங் செய்பவர்களா நீங்கள்? இத தெரிஞ்சிக்கோங்க

Image Source: Freepik

Read Next

Colored Hair Care: ஹேர் கலரிங் செஞ்சியிருக்கீங்களா?… இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Disclaimer