Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க


இதற்கு தீர்வாக கருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. இவை அனைத்து வகையான முடி பிரச்சனைகளையும் நீக்குகிறது. மேலும் முடியை வலுப்படுத்தவும், வேகமாக வளரச் செய்யவும் உதவுகிறது. எனினும், கருஞ்சீரகத்தை முடிக்கு பயன்படுத்துவது எப்படி என்று பலருக்கும் தெரியாது. முடி வளர்ச்சியை அதிகரிக்க கருஞ்சீரகத்தை எந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Apple Cider Vinegar for Hair: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த்துபவரா நீங்க? இதன் தீமைகள் இங்கே!

முடி வளர்ச்சிக்கு கருஞ்சீரகம் பயன்படுத்துவதற்கான வழிகள்

முடி வளர்ச்சிக்கு கருஞ்சீரகத்தை சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

எலுமிச்சைச் சாறு மற்றும் கருஞ்சீரகம்

அரை கப் அளவிலான கருஞ்சீரக எண்ணெய் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து தலைமுடியில் தடவலாம். அதன் பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலையைக் கழுவ வேண்டும். இது முடி உதிர்தல் பிரச்சனையைத் தவிர்ப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்துகள் கொலாஜன் புரதத்தை ஊக்குவிக்கிறது. மேலும், pH அளவை சமன் செய்ய உதவுகிறது.

தேன் மற்றும் கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்துடன் தேன் கலந்து பயன்படுத்துவது முடியில் இயற்கை எண்ணெயைப் பராமரிக்க உதவுகிறது. இவை முடி உதிர்வதை நிறுத்தவும், புதிய முடி வளரவும் பயனுள்ளதாக அமைகிறது. பாத்திரம் ஒன்றில் அரை கப் தேங்காய் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தீயில் சிறிது சூடாக்க வேண்டும். பின் இந்த கலவையை தலையில் ஒரு மணி நேரம் தடவி, பின் தலையை கழுவலாம். இது தவிர, வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக விதைகள் மற்றும் தேன் கலந்து உட்கொள்ளலாம். இவை கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Aloe vera For Dandruff: தீராத பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட கற்றாழையுடன் இந்த பொருள் சேர்த்துக்கோங்க

வெந்தய விதைகளுடன் கருஞ்சீரகம்

தேங்காய் எண்ணெய், கருஞ்சீரகம் மற்றும் வெந்தய விதைகளைச் சேர்த்து தலைமுடியில் பயன்படுத்துவது கிட்டத்தட்ட பல்வேறு முடி பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இவை முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதற்கு பாத்திரம் ஒன்றில் 1 ஸ்பூன் ஊறவைத்த வெந்தய விதை விழுது, 1 ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் மற்றும் 1 முதல் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி, 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு தலையைக் கழுவி விடலாம்.

கருஞ்சீரக விதைகளை கூந்தலுக்கு இந்த வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும், தலைமுடி ஆரோக்கியத்திற்கு கருஞ்சீரக விதைகளை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Masks: வெறும் பத்து ரூபாய் இருந்தால் போதும் வீட்டிலேயே முடி உதிர்வை தடுக்கும் ஹேர் மாஸ்க் செய்யலாம்!

Image Source: Freepik

Read Next

சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும் பூசணி விதை எண்ணெய். எப்படி பயன்படுத்துவது?

Disclaimer