Pumpkin Seed Oil Benefits For Face: பூசணி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இவை சருமத்தை உள்ளிருந்து ஆழமாக பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. இந்த விதைகள் சருமத்தை ஈரப்பதமாக வைப்பதுடன், சருமத்தை சீரமைக்கவும் உதவுகிறது.
இது தவிர பூசணி விதையில் வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை புதிய செல்களை உருவாக்கும் செயல்முறையை வேகமாக்குகிறது. இவை சருமத்தை உள்ளிருந்து மேம்படுத்த உதவுகிறது. இதில் சருமத்திற்கு பூசணி விதைகளைப் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Green Tea Turmeric Face Mask: முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கா? மஞ்சளுடன் இந்த ஒரு பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க
சருமத்திற்கு பூசணி விதைகளின் நன்மைகள்
முகப்பருவை குணப்படுத்த
பூசணி விதைகள் சருமத்தை பிரகாசமாக்குவது மட்டுமல்லாமல், பருக்களை அகற்றவும் உதவுகிறது. இதில் துத்தநாகம் ஏராளமாக நிறைந்துள்ளது. இவை சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இவை முகப்பருவை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தை பளபளப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கொலாஜன் பண்புகள் சருமத்தை மேம்படுத்துகிறது.
எப்படி பயன்படுத்துவது?
பூசணி விதை மற்றும் ரோஸ்வாட்டர் கலந்த கலவையை முகத்தில் தடவலாம். இதை பருக்கள் மீது தடவி 10 நிமிடம் வரை வைத்து கழுவினால் பருக்கள் மறைந்து அருமம் தெளிவாக மாறும்.
தழும்புகளைக் குறைக்க
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகத்தின் அழகைக் கெடுக்கலாம். இதற்கு பல்வேறு வகையான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படுத்தலாம். முகப்பரு புள்ளிகளை இயற்கையாகக் குறைக்க பூசணி விதைகளைப் பயன்படுத்தலாம்.
எப்படி உபயோகிப்பது?
கரும்புள்ளிகளைக் குணப்படுத்த, ஒரு ஸ்பூன் பூசணி விதைகள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றைச் சேர்த்து கலவையைத் தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் வரை வைத்து உலர்ந்த பிறகு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க
சருமத்தின் நிறத்தை மேம்படுத்த
பூசணி விதைகளில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் சேதமடைந்த சருமத்தை அகற்ற உதவுகிறது. மேலும் சருமத்தின் அமைப்பை சரிசெய்ய உதவுகிறது. சருமத்தை அழகாக வைக்க உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
பூசணி விதைகளை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். இதற்கு பூசணி விதைகளை அரைத்து இலவங்கப்பட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கலவையைத் தயார் செய்ய வேண்டும். பின் இந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நன்மையைத் தருகிறது.
சுருக்கங்களைக் குறைக்க
பல்வேறு காரணங்களால் சருமத்தில் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்றவை தோன்ற ஆரம்பிக்கலாம். இதில் சருமத்தை இறுக்கமாக்க வைக்க பூசணி விதைகளைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் என்சைம்கள் போன்றவை சருமத்தின் தளர்வை நீக்க உதவுகிறது. இதன் மூலம் சருமத்தை மிகவும் அழகாக மற்றும் பளபளப்பாக வைக்கலாம். இதனுடன் சருமத்தின் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்க உதவுகிறது.
எப்படி உபயோகிப்பது?
முகச்சுருக்கங்களைப் போக்க, பூசணி விதைகளை ஃபேஸ்பேக்காக தயார் செய்யலாம். இதற்கு ஒரு ஸ்பூன் பூசணி விதைகள், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்த கலவையை தயார் செய்ய வேண்டும். பின் முகம் மற்றும் கழுத்தில் இந்த கலவையை நன்கு தடவி 15 நிமிடம் கழித்து கழுவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Skin: முகம் கண்ணாடி போல ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க
Image Source: Freepik