Green Tea Turmeric Face Mask: முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கா? மஞ்சளுடன் இந்த ஒரு பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Green Tea Turmeric Face Mask: முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கா? மஞ்சளுடன் இந்த ஒரு பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க

இவை சில சமயங்களில் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். இதனைத் தவிர்க்க இயற்கை முறைகளைக் கையாள்வது அவசியமாகும். சருமத்தில் தோன்றும் புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைய வைக்க வீட்டிலேயே எளிதான முறையில் ஃபேஸ் பேக் தயார் செய்யலாம். இதில் கிரீன் டீ மற்றும் மஞ்சளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் செய்முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cucumber On Face: சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வெள்ளரியை இப்படி யூஸ் பண்ணுங்க!

சருமத்தைப் பொலிவாக்கும் கிரீன் டீ மஞ்சள் ஃபேஸ்பேக்

தேவையானவை

  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • பச்சை தேயிலை - 2 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் - 1 தேக்கரண்டி

கிரீன் டீ மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் தயார் செய்யும் முறை

  • இந்த ஃபேஸ்பேக் தயார் செய்ய, முதலில் பெரிய கிண்ணம் ஒன்றில் பச்சைத் தேயிலையை எடுத்துக் கொள்ளவும். இதில் கிரீன் டீ பேக்கையும் பயன்படுத்தலாம்.
  • பின் இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த கலவை தயாரான பிறகு அதை முகத்தில் அப்ளை செய்யும் முன் முகத்தை ஃபேஸ் வாஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
  • விரும்பினால் டோனர் மூலம் முகத்தை சுத்தம் செய்யலாம். முகத்தை சுத்தம் செய்த பிறகு ஃபேஸ் பேக்கைத் தடவி 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக் காய்ந்தது, அதை ஸ்க்ரப் போல சுத்தம் செய்து பின் லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
  • கிரீன் டீ மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தும் போது, சோப்பு பயன்படுத்தக் கூடாது. இவை முகத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Instant Face Glow Remedies: இன்ஸ்டன்டா முகப்பொலிவைப் பெற வீட்டிலேயே இந்த பொருள்களை யூஸ் பண்ணுங்க

கிரீன் டீ மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் நன்மைகள்

  • கிரீன் டீ, மஞ்சள் இரண்டிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை முகப்பரு பிரச்சனையை அகற்ற உதவுகிறது
  • இதில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
  • குறிப்பாக மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவதால் ஏற்படும் கருமையை நீக்க இந்த ஃபேஸ் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பு

சருமம் உணர்திறன் மிக்கதென்பதால், ஒவ்வாமை, அரிப்பு அல்லது எரியும் உணர்வு போன்றவற்றைத் தவிர்க்க மஞ்சள் மற்றும் கிரீன் டீ ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க

Image Source: Freepik

Read Next

Best Face Oil: சரும வறட்சியை போக்க உதவும் சிறந்த 4 ஆயில்; எப்படி பயன்படுத்துவது?

Disclaimer