சருமத்தைப் பொலிவாக்க மஞ்சள் யூஸ் பண்றீங்களா? அப்ப இந்த ஒரு பொருளையும் சேர்த்துக்கோங்க

How to use turmeric and coconut oil for face: சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். ஆனால், இதற்கு என்ன செய்வது என்பதே இன்றும் குழப்பத்தில் இருக்கக் கூடியதாகும். அதன் படி, இயற்கையான விருப்பமாக சருமத்திற்கு மஞ்சள், தேங்காய் எண்ணெய் கலவையை பயன்படுத்துவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சருமத்தைப் பொலிவாக்க மஞ்சள் யூஸ் பண்றீங்களா? அப்ப இந்த ஒரு பொருளையும் சேர்த்துக்கோங்க

Is coconut oil and turmeric good for skin: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் பலரும் பல விதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். அதாவது சருமத்தில் வெடிப்பு, வறட்சி, முகப்பரு மற்றும் வேறு சில பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சருமம் அதன் இயற்கையான பளபளப்பை இழக்கிறது. சருமத்தை பளபளப்பாக வைப்பதற்கு அதிக நேரம் பார்லர் சென்று செலவிடுகின்றனர். ஆனால், இயற்கையான மற்றும் நீண்ட கால பராமரிப்பு முறைகளில் அடங்காது.

எனவே சருமத்தைப் பொலிவாகவும், விரும்பிய முடிவுகளைப் பெறவும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான முறைகளைக் கையாள்வது அவசியமாகும். அதன் படி, மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு இயற்கையான தேர்வாக அமைகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் ஆனது கரும்புள்ளிகள், சிவத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது. இது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பயனுள்ள தீர்வாகவும் அமைகிறது. இதில் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய், மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric Skin Benefits: பளபளப்பான சருமத்திற்கு மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க.

மஞ்சள், தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்

சரும ஆரோக்கியத்திற்கு மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. மஞ்சளில் குர்குமின் நிறைந்துள்ளது. மேலும், இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட கலவையாகும். இது வீக்கத்தைக் குறைக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது. இது தவிர, மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.

அதே போல, தேங்காய் எண்ணெய் அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது மந்தமான மற்றும் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சரும செல்களை வளர்க்கிறது. ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தைத் தருகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தெளிவான சரும அமைப்பை வழங்குகிறது.

மஞ்சள், தேங்காய் எண்ணெயின் ஃபேஸ் மாஸ்க்கின் நன்மைகள்

வீக்கத்தைக் குறைக்க

மஞ்சளில் குர்குமின் என்ற கலவை நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவத்தலைக் குறைக்கிறது. எனவே, இது எரிச்சலூட்டும் சருமத்தைப் போக்கவும், முகப்பரு வெடிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு

மஞ்சளுடன் தேங்காய் எண்ணெயை சேர்ப்பது சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இது சருமத்திற்கு இயற்கையான மாய்சரைசராக செயல்பட்டு சருமத்திற்கு ஊட்டமளிப்பதாகவும் அமைகிறது. மேலும், இது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், நன்கு நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Glowing Skin Tips: சருமத்தில் இயற்கையான பொலிவை பெற மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க!

சருமத்தைப் பொலிவாக்க

மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையானது மந்தமான சருமத்தை மேம்படுத்தவும், சருமத்தின் நிறத்தை சமன் செய்யவும் உதவுகிறது. இது கரும்புள்ளிகளின் தெரிவு நிலையைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான நிறத்தைப் பெறலாம்.

முகப்பருக்களை எதிர்த்துப் போராட

தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களளும், மஞ்சளில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகளும் நிறைந்துள்ளது. இந்த ஃபேஸ் மாஸ்க் ஆனது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குவதற்கும், வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

குணப்படுத்தும் பண்புகள்

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் கலவையானது சருமத்தின் குறைபாடற்ற நிறத்திற்கும், குணப்படுத்தும் பண்புகளுக்கும் பெயர் பெற்றதாகும். மேலும், இது மறுசீரமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் சருமத்தின் கறைகள், வடுக்கள் மற்றும் பிற சரும குறைபாடுகளைக் குறைக்க உதவுகிறது.

முதுமை அறிகுறிகளை தாமதப்படுத்த

மஞ்சள், தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்கைத் தொடர்ந்து சருமத்திற்குப் பயன்படுத்துவது கொலாஜன் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் போன்ற முதுமை அறிகுறிகளைக் குறைத்து, இளமையான, புத்துணர்ச்சியூட்டும் சருமத்தைத் தருகிறது.

இவ்வாறு ஆரோக்கியமான தேர்வான தேங்காய் எண்ணெய் மஞ்சள் ஃபேஸ் பேக்கை சருமத்திற்குப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Glowing Skin Tips: சருமத்தில் இயற்கையான பொலிவை பெற மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க!

Image Source: Freepik

Read Next

Detox Drink: சருமம் பளபளக்கனுமா.? அதுக்கு குடலை சுத்தப்படுத்தனும்.. அது எப்படி.? தெரிஞ்சிக்கலாம் வாங்க..

Disclaimer