Ways To Use Turmeric For Skin: பழங்கால மருத்துவ பயன்பாட்டு முறைகள் முதலே மஞ்சள் சிறந்த தேர்வாக பயன்படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், அழகு பராமரிப்பிலும், பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கும் மஞ்சள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சருமத்திற்கு மஞ்சள் தரும் நன்மைகள் குறித்தும், எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பயிற்சி பெற்ற ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கீதா கிரேவால் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
மஞ்சள் ஊட்டச்சத்துகள்
மஞ்சளில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இது ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் நல்ல மூலமாகும். மஞ்சளில் புற்றுநோய் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது முகப்பரு வெடிப்புகளிலிருந்து விடுபட வைப்பதுடன், பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!
சருமத்திற்கு மஞ்சள் தரும் நன்மைகள்
சரும பராமரிப்பில் மஞ்சள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது தோல் நிறத்தை சீராக வைக்க உதவுகிறது. சூரியக் கதிர்களால் ஏற்படும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள பல்வேறு பண்புகள் பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.
சில சமயங்களில் மஞ்சளை நேரடியாகப் பயன்படுத்துவது ஒவ்வாமை எதிர்வினை பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே முகத்தில் நேரடியாக பயன்படுத்தும் முன், பேட்ச் டெஸ்ட் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சூரிய ஒளியை நீக்குவதற்கும், கரும்புள்ளிகளை மறைப்பதற்கும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிட்டிகை மஞ்சளைச் சேர்த்து 10-15 நிமிடம் வைத்து, குளிர்ந்த நீரில் வட்ட இயக்கத்தில் கழுவ வேண்டும்.
ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக
மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முதுமை எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு டீஸ்பூன் நொறுக்கப்பட்ட முட்டை ஓடு பொடியுடன் (பயன்படுத்திய முட்டை ஓடுகளை மிக்சி கிரைண்டரில் நன்றாகப் பொடி செய்தல்), ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், சில துளிகள் ரோஸ்ஷிப் எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து, பேஸ்ட் போல தடவி பின் 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!
இது தோலை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. புளிப்புத் தயிருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து, சில துளிகள் எலுமிச்சை எண்ணெயைச் சேர்த்து பேஸ்ட் செய்து 10-15 நிமிடம் விட்டு, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மேலும் மஞ்சளில் உள்ள குர்குமின் சருமத்தின் வயதைக் குறைக்கவும், சருமத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
முகப்பருவை நீக்க
முகப்பரு உள்ள சருமத்திற்கு ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து ரோஸ் வாட்டர் சில துளிகள் மற்றும் டீ ட்ரீ ஆயில் சேர்த்து ஃபேஸ் பேக்காகத் தடவ வேண்டும். இதைக் குளிர்ந்த நீரில் கழுவி, உலர வைக்க வேண்டும்.
மஞ்சளில் உள்ள கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் போன்றவை பருக்கள் மற்றும் முகப்பருவைத் தடுக்க உதவுகிறது. அழகான சருமத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சளை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?
Image Source: Freepik