How To Consume Turmeric During Winter: குளிர்காலம் வந்துவிட்டாலே நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், எளிதாக நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம். எனவே இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். குளிர்ந்த காலநிலையில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்ட பொருள்களை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அந்தவகையில் உடலை சூடாக வைத்திருக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும் உணவுப் பொருள்களில் மஞ்சள் சிறந்த தேர்வாகும். இந்த பருவத்தில் மஞ்சளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. உண்மையில் மஞ்சள் சூடான தன்மை கொண்ட பொருளாகும். இது உடலை சூடாக வைக்க உதவுகிறது. மேலும் இதன் பண்புகள் உடலை பல்வேறு நோய்த்தாக்குதல்களிலிருந்து விலக்கி வைக்கிறது. ஆனால், குளிர்காலத்தில் மஞ்சளை எந்தெந்த வழிகளில் எடுத்துக் கொள்ளலாம் தெரியுமா? அதைப் பற்றி காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Curd Vs Buttermilk: தயிர் Vs மோர் - இதில் எது உடலுக்கு நல்லது?
குளிர்காலத்தில் மஞ்சளை உட்கொள்வதற்கான வழிகள்
மஞ்சள் பால்
குளிர்காலத்தில் பாலுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவது சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தை வழங்குகிறது. செரிமான ஆரோக்கியத்தை வைத்து நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மஞ்சள் சிறந்த வழியாகும். இரவு தூங்கும் முன் அல்லது காலை நேரத்தில் மஞ்சல் பாலை உட்கொள்ளலாம்.
தயாரிப்பு
மஞ்சள் பால் தயாரிக்க 1 கிளாஸ் சூடான பால் எடுத்துக் கொண்டு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் மற்றும் சிறிது வெல்லம் கலந்து குடிக்கலாம்.
மஞ்சள் டீ
இது உடல் எடை இழப்புக்கு பிரபலமான தேநீர் என்றே கூறலாம். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். இதில் உள்ள வைரஸ் எதிர்ப்புப் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதை காலை வெறும் வயிற்றில் அல்லது பகலில் அருந்தலாம்.
தயாரிப்பு
மஞ்சள் டீ தயாரிக்க, ஒரு கப் நீரில் சிறிது இஞ்சி, அரை தேக்கரண்டி மஞ்சள் மற்றும் சிறிது கருப்பு மிளகு போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து அருந்தலாம்.
சூப் அல்லது சாலட்
குளிர்காலத்தில் சூடான சூப்கள் மற்றும் சாலட்கள் பலராலும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றன. இந்த ஆரோக்கியமான சூப்கள் மற்றும் சாலட்கள் தயாரிப்பில் மஞ்சளைப் பயன்படுத்தலாம். இதை உட்கொள்வது உடலை சூடாக வைத்திருப்பதுடன், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Basil Tea Benefits: தினமும் 1 கப் துளசி டீ குடிச்சா இந்த பிரச்சனைகள் எல்லாம் வரவே வராது.
மஞ்சள் கஷாயம்
குளிர்ந்த காலநிலையில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி பொதுவானதாகும். இதிலிருந்து விடுபட மஞ்சள் மற்றும் துளசி கலந்த கஷாயத்தை அருந்தலாம். ஏனெனில் துளசியில் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த இரண்டின் கலவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தொற்றுக்கான அபாயத்தைக் குறைக்கிறது.
தயாரிப்பு
மஞ்சள் கஷாயம் தயாரிப்பதற்கு, ஒரு கப் நீர் எடுத்து, அதில் அரை தேக்கரண்டி மஞ்சள், 6 முதல் 7 துளசி இலைகள் மற்றும் 1 துண்டு இஞ்சி போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் கொதிக்க வைத்து கிடைக்கும் கஷாயத்தை ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வழிகளில் குளிர்காலத்தில் மஞ்சளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். எனினும் மஞ்சளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Raw Turmeric, Jaggery: மஞ்சள், வெல்லத்தை பச்சையாக சாப்பிட்டு பாருங்கள்..
Image Source: Freepik