Curd Vs Buttermilk: தயிர் Vs மோர் - இதில் எது உடலுக்கு நல்லது?

  • SHARE
  • FOLLOW
Curd Vs Buttermilk: தயிர் Vs மோர் - இதில் எது உடலுக்கு நல்லது?

தயிர்

நல்ல பயனுள்ள பாக்டீரியாவின் உதவியுடன், பாலை புளிக்க வைத்து தயாரிக்கப்படும் திரவமே தயிர் ஆகும். இந்த நொதித்தல் செயல்முறை ஆனது இந்த பாக்டீரியாக்களால் லாக்டோஸை லாக்டின் அமிலமாக மாற்றுவதை உள்ளடக்கியது ஆகும். இதனால், தயிர் அதன் சிறப்பியல்பு அமைப்பைக் கொண்டு விளங்குகிறது.

தயிரின் நன்மைகள்

அதிக புரதம்

நல்ல உயர்தர புரதத்தின் மூலமாக தயிர் உள்ளது. இது தசை பழுது, தசை பராமரிப்பு மற்றும் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் அவசியமானதாகும்.

புரோபயாடிக்குகள் நிறைந்த

தயிர் புரோபயாடிக்குகள் நிறைந்த அல்லது நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களின் சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவித்து, சிறந்த செரிமானத்திற்கும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: மூட்டு வலி முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் மீன் எண்ணெய் தரும் அற்புத நன்மைகள் இதோ.!

கால்சியம் நிறைந்த

இதில் கால்சியம் சத்துக்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளது. இது வலுவான எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்தை வழங்குகிறது.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த

தயிரைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி, சீராக செயல்பட வைக்க முடியும்.

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோயெதிர்ப்பு அமைப்பை ஆதரித்து பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

லாக்டோஸ் செரிமானம்

நொதித்தல் செயல்முறை தயிரில் உள்ள லாக்டோஸ் உள்ளடக்கத்தைக் குறைக்கிறது. இது ஜீரணத்தை எளிதாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Basil Tea Benefits: தினமும் 1 கப் துளசி டீ குடிச்சா இந்த பிரச்சனைகள் எல்லாம் வரவே வராது.

மோர்

தயிரைப் போன்று இதுவும் பால் தயாரிப்பாகும். தயிரில் இருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கும் போது மோர் தயாரிக்கப்படுகிறது. தயிரைப் போலவே மோர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

மோரின் ஆரோக்கிய நன்மைகள்

குறைந்த கொழுப்பு

முழு பாலுடன் ஒப்பிடுகையில் மோரில் கொழுப்பு அளவு குறைவாக இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சாத்தியமான ஒன்றாகும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

மோரில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

புரோபயாடிக்குகள்

தயிரில் உள்ளவாறே மோரிலும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இவை சீரான குடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பதுடன், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்புமண்டலத்தை ஊக்குவிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Peanuts Benefits: நீரிழிவு முதல் மூளை செயல்பாடு வரை.. வேர்க்கடலை தரும் அற்புத நன்மைகள்!

செரிமானத்திற்கு

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், இது வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைப் போக்க பரிந்துரைக்கப்படுகிறது.

எடை மேலாண்மைக்கு

இதில் குறைந்த கொழுப்பு உள்ளதால் எடையை நிர்வகிக்க விரும்புபவர்கள் மோர் அருந்தலாம். இது அவர்களுக்கு குறைந்த கலோரி விருப்பமாகவும் அமையும்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

மோரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாக வைப்பதுடன், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.

குளிரூட்டும் தன்மை

வெப்பமான காலநிலையில் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைக்க உதவும் பானங்களில் மோர் சிறந்த தேர்வாகும்.

தயிர் அல்லது மோர் - எது பெஸ்ட்?

  • ஆயுர்வேதத்தில் தயிர் சிறந்த மற்றும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் வெப்பத்தை எதிர்கொள்ளும் போது அதிக நொதித்தலைத் தூண்டுகிறது. உடல் சூடு அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
  • ஆனால் மோர் உட்கொள்வது உடலுக்கு நீரேற்றத்தைத் தருகிறது. மேலும், அஜீரணத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மோர் மிகவும் நன்மை பயக்கும். எனவே தயிரைக் காட்டிலும் மோர் மிகுந்த பயனுள்ள மற்றும் சிறந்த தேர்வாகும்.
  • மோரில் சீரகப்பொடி, கொத்தமல்லி, உப்பு போன்றவற்றைச் சேர்த்து அருந்துவது அதன் சுவையை மேம்படுத்துவதுடன் ஆரோக்கியமான நன்மைகளைத் தருகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Karpooravalli Benefits: இருமல் முதல் இதய நோய்வரை பல பிரச்சினைகளை நீக்கும் ஓமவல்லி இலை!

Image Source: Freepik

Read Next

Leftover Rice: உயிருக்கு உலை வைக்கும் பழைய சாதம்.. கண்டிப்பா இதை தெரிந்து கொள்ளுங்க!

Disclaimer