மூட்டு வலி முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் மீன் எண்ணெய் தரும் அற்புத நன்மைகள் இதோ.!

  • SHARE
  • FOLLOW
மூட்டு வலி முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் மீன் எண்ணெய் தரும் அற்புத நன்மைகள் இதோ.!

மேலும், குளிர்ச்சியான காலகட்டத்தில் மக்கள் உணவு முறையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தரும். அந்த வகையில் குளிர்காலத்தில் மீன் எண்ணெயை எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி எழும். மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸில் இரண்டு வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. அவை EPA மற்றும் DHA. இந்த மீன் எண்ணெயைக் குளிர்காலத்தில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

குளிர்காலத்தில் மீன் எண்ணெய் தரும் நன்மைகள்

இந்த குளிர்ச்சியான காலநிலையில் மீன் எண்ணெயை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகளைக் காணலாம்.

வீக்கத்தைக் குறைக்க

பொதுவாக, குளிர்காலத்திலேயே மக்கள் அதிகளவு மூட்டு வலி பிரச்சனையைச் சந்திப்பர், இதில் அவர்களுக்கு வீக்கம் ஏற்படும். குறிப்பாக குளிர்ந்த காலநிலையில் சளி, காய்ச்சல் இருமல் போன்ற பல்வேறு நோய்த்தொற்றுக்களை சந்திக்கின்றனர். இந்த வீக்கத்தைக் குறைக்க குளிர்காலத்தில் இயற்கையான வழியாக பலர் மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸை எடுத்துக் கொள்கின்றனர். ஆரோக்கியமான உணவுகளுடன், சரியான சப்ளிமென்ட்ஸை எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். இவை உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை இயற்கையாகவே உறிஞ்சுவதற்கு மீன் எண்ணெய் உதவுகிறது.

வைட்டமின் டி நிறைந்த

உடலில் போதுமான அளவு வைட்டமின் டி சக்தியைப் பெறுவதற்கு சூரியஒளி உதவுகிறது. ஆனால், இந்த குளிர்ச்சியான காலகட்டத்தில் குறைவான சூரிய ஒளியால் பலரும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாமல் போகிறது. இந்த சூழ்நிலையில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, வைட்டமின் டி நிறைந்த இயற்கையான ஆதாரங்களில் மீன் எண்ணெயும் அடங்கும்.

இவை கொழுப்பில் கரையக்கூடியது என்பதால் உடலில் இயங்கும் பல்வேறு செயல்முறைகளுக்கு உதவுகிறது. மேலும், குளிர்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படும். இதற்குத் தீர்வாகவும் வைட்டமின் டி நிறைந்த மீன் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

முடி ஆரோக்கியத்திற்கு

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகுதல் போன்ற சரும பிரச்சனைகளைப் போல, தலைமுடிக்கும் பிரச்சனை உண்டாகலாம். அதாவது முடி உடைதல், முடி பிளவு, முடி வறட்சியடைதல் போன்ற பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகம் வரலாம். இதற்கு, இயற்கையான தீர்வாக மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸை எடுத்துக் கொள்ளலாம். இது முடி உடைவதைக் குறைத்து, பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும், இவை முடியில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க

குளிர்காலத்தில் மக்கள் அதிக மன அழுத்தத்தை உணர்வர். மோசமான உணவு முறை ம்ற்றும் அன்றாட சில பழக்க வழக்கங்களால் மன அழுத்தம் அதிகமாகலாம். எனவே, இந்த சூழ்நிலையில் நல்ல தரமான மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸை எடுத்துக் கொள்வது மன அழுத்தத்தைக் குறைப்பதாக அமைகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

எந்த காலத்திலும் இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும். குளிர்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருள்களால், உடலில் வீக்கம் ஏற்படுவதுடன், நோய்வாய்ப்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். இதைத் தவிர்க்க மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் மீன் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கான பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

Image Source: Freepik

Read Next

Tea: டீயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் தெரியுமா?

Disclaimer