முகப்பரு முதல் முதுமை எதிர்ப்பு வரை.. சருமத்திற்கு வேப்ப எண்ணெய் தரும் அதிசய நன்மைகள் இதோ

Neem oil for skin disease: சருமத்திற்கு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த தேர்வாகும். இதில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்ததாகும். இவை அழகு, முடி மற்றும் சருமப் பராமரிப்புக்கு நிறைய உதவுகிறது. இதில் சருமத்திற்கு வேப்ப எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
முகப்பரு முதல் முதுமை எதிர்ப்பு வரை.. சருமத்திற்கு வேப்ப எண்ணெய் தரும் அதிசய நன்மைகள் இதோ

Neem oil for skin problems: இன்றைய காலத்தில் பலரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும். ஆம். உண்மையில் பல்வேறு காரணங்களால் சருமத்தில் எரிச்சல், வறட்சி, தடிப்பு, மெல்லிய கோடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு இரசாயனப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சில சமயங்களில் சருமத்தில் இன்னும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இந்நிலையில், சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இது போன்ற வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவது, சருமத்தைப் பல்வேறு பாதிப்புகளிலிருந்து நிவாரணம் தருகிறது. இந்த வரிசையில் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக வேம்பு ஆரம்ப காலம் முதலே சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக காலங்காலமாக இருந்து வருகிறது.

பல நூற்றாண்டுகளாக, இவை முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவுகிறது. வேப்ப மரத்தைப் பொறுத்த வரை அதன் பட்டை, எண்ணெய், இலைகள் மற்றும் பழம் போன்ற அனைத்தும மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

இந்த பதிவும் உதவலாம்: சோப்புலாம் வேணாம்! சருமம் தங்கம் போல ஜொலிக்க குளிக்கும் முன் கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க

சரும ஆரோக்கியத்தில் வேப்ப எண்ணெய்

ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, சமீபத்தில், பலர் வேப்ப எண்ணெய்களின் பண்புகளுக்காக அதை பல்வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தி வருகின்றனர். இவை தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மிகுந்த நன்மை பயக்கும். வேப்ப எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முடி, சருமம் மற்றும் அழகு சார்ந்த பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேப்ப எண்ணெயில் காணப்படும் ஆரோக்கியமிக்க பண்புகள் முகப்பரு கட்டுப்பாடு, தடிப்புத் தோல் அழற்சி, பொடுகு, அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற தோல் மற்றும் உச்சந்தலை நிலைகளுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை வழங்குவதாக அமைகிறது. இந்த வேப்ப எண்ணெயானது வேப்பம் பழம் மற்றும் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடியதாகும். இந்த எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.

நிபுணர்கள் பலரும் இந்த வேம்பு எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான முக்கிய அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளே ஆகும். பொதுவாக பருக்கள், சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்ற பெரும்பாலான தோல் நோய்களுக்கு வீக்கம் தான் முக்கிய காரணமாக அமைகிறது. வேம்புவில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதன் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கூட முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வேம்பில் உள்ள வைட்டமின் E ஊட்டச்சத்துக்கள், முகப்பரு வடுக்களின் தோற்றத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த வைட்டமின் E உடன் ட்ரைகிளிசரைடுகள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன.

சருமத்திற்கு வேப்ப எண்ணெய் தரும் நன்மைகள்

முகப்பரு மற்றும் வடுக்களை குணப்படுத்த

வேப்ப எண்ணெயின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு எதிர்ப்புக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக அமைகிறது. இவை பாக்டீரியா தொற்றை நீக்கி, சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. மேலும் இதன் கொழுப்பு அமில கூறுகள் இயற்கையாகவே வடு மற்றும் பருக்களை குறைக்க உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் உடலில் இந்த அறிகுறிகளைக் கண்டால்.. கொலாஜன் குறைந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..

வறண்ட சருமத்தை ஆற்ற

வறண்ட சருமம் வறட்சி, உரிதல் மற்றும் கரடுமுரடான தன்மையைக் கொண்டதாக அமைகிறது. இதற்கு வேப்ப எண்ணெயில் உள்ள அதிக கொழுப்பு அமிலம், ஆக்ஸிஜனேற்றிகள், சக்திவாய்ந்த மற்றும் சருமத்தை குணப்படுத்தும் பண்புகள் உதவுகின்றன. இவை வறண்ட சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

அரிக்கும் தோலழற்சியைக் குணப்படுத்த

சிவப்பு, எரிச்சல், வறண்ட சருமத்தால் பலரும் அவதியுறுகின்றனர். இதற்கு தோல் அழற்சி நிலை அல்லது மரபியல் காரணங்களாலும் ஏற்படலாம். வேப்ப எண்ணெயின் மூலம் சருமத்தின் சிவத்தல், அரிப்பு, எரிச்சல் மற்றும் வீக்கத்தை நீக்கலாம். இது ஒரு பயனுள்ள கிருமி நாசினி எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை தோல் தொற்றுகளைத் தடுக்கிறது.

வேப்ப எண்ணெய் உச்சந்தலையின் வறட்சி மற்றும் அரிப்பைத் தணிப்பதுடன், தேவையான ஈரப்பதத்தை வழங்குவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது தடிப்புத் தோல் அழற்சிக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக அமைகிறது. வேப்ப எண்ணெயின் மூலம் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கலாம்.

முதுமை எதிர்ப்புப் பண்புகள்

வேப்ப எண்ணெய் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, அதன் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இவை சருமத்தை மென்மையாக்கவும், வயதாவதைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Neem For Swollen Gums: வேப்ப இலைகளை சாப்பிட்டால் ஈறுகளில் வீக்கம் குறையுமா?

Image Source: Freepik

Read Next

காலை எழுந்ததும் முகம் பளிச்சென மின்ன, இரவில் தூங்கச் செல்லும் முன் முகத்திற்கு இந்த ஒன்றைத் தடவுங்க

Disclaimer