Coconut oil and vitamin e capsule for face overnight: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. இதனால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, காற்று மாசுபாடு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், முகத்தையும் பாதிக்கிறது. பல நேரங்களில் சருமம் மிகவும் வறண்டு போகும் நிலை ஏற்படலாம்.
மேலும் சருமத்தில் மிகவும் அசிங்கமான புள்ளிகள் தோன்றலாம். இது போன்ற நிலையில், பல பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று கரும்புள்ளிகளை நீக்குவதற்கு சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால், இது அவ்வளவு எளிதானதாக இருக்காது. இந்நிலையில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். அவ்வாறு சருமத்தில் உள்ள புள்ளிகளை நீக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தர தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்கணுமா? வைட்டமின் ஈ-யை இப்படி யூஸ் பண்ணி பாருங்க
முகத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவுவது
முகம் பளபளப்பாக இருக்க விரும்புபவர்கள், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக தேங்காய் எண்ணெயைத் தடவுவது நன்மை பயக்கும். ஏனெனில், தேங்காய் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
இவை சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், நீரேற்றத்தை வழங்கவும் உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களைக் கலந்து முகத்தில் தடவுவது, முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தில் ஒரு தடையை உருவாக்கி, ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக, இது வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, முகப்பரு போன்ற அழற்சி நிலைகளுக்கு சிகிச்சையளிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள்
சருமத்திற்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைப் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் ஆகும். அதனாலேயே சரும பராமரிப்பு நிபுணர்களும் வைட்டமின் ஈயை சருமத்திற்குப் பயன்படுத்துவதை பரிந்துரைக்கின்றனர். ஆனால், இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்துத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.
சருமத்திற்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை அப்ளை செய்து மசாஜ் செய்து வருவது சருமத்தை பொலிவாகவும், நன்கு ஊட்டச்சத்துக்களைப் பெற்று பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இவை சருமத்திலுள்ள செல்களுக்கு ஊட்டத்தைக் கொடுத்து சருமத்துக்கு இயற்கையான ஒரு பளபளப்பைத் தருகிறது.
வைட்டமின் ஈ-ஐப் பயன்படுத்துவது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, நன்கு நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது சருமம் இளமையாகவும் வைத்திருக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: காலை எழுந்ததும் முகம் பளிச்சினு இருக்க நைட் தூங்கும் முன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலில் இதை சேர்த்து யூஸ் பண்ணுங்க
சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் பயன்பாடு
சரும ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை இரண்டையும் தனித்தனியாகப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். ஆனாலிவை இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துவது சருமத்திற்குக் கூடுதல் நன்மைகளைத் தருகிறது.
தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைச் சேர்த்து பயன்படுத்துவது சருமத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளை நீக்குகிறது. குறிப்பாக, சருமத்திற்கு இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக இவை இரண்டையும் தடவ வேண்டும். இதை சிறிது நேரம் மசாஜ் செய்து, எண்ணெய் சருமத்தில் நன்றாக உறிஞ்சப்பட்ட பிறகு அப்படியே வைக்கலாம். பின்னர், இரவு முழுவதும் முகத்தில் விட்டுவிட்டு, காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவை சருமத்திற்கு வித்தியாசமான பளபளப்பைத் தருகிறது.
தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைக் கலந்து பயன்படுத்துவது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்க உதவுகிறது. இவை இரண்டின் கலவையானது வெளிப்புற மாசுபாட்டால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இது சருமத்தை மென்மையாக்குகிறது.
தயிருடன் கலந்து தடவுவது
தேங்காய் எண்ணெயுடன் தயிர் கலந்தும் சருமத்திற்கு பயன்படுத்துவது பளபளப்பை ஊக்குவிக்கிறது. அதன் படி, ஒரு தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைக் கலந்து இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக முகம் மற்றும் கழுத்தில் தடவலாம். இதை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் முகத்தை சாதாரண நீரில் கழுவ வேண்டும். தேங்காய் மற்றும் தயிர் கலவை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் அழுக்குகளை அகற்றுவதற்கும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெயை இது போன்ற பல்வேறு வழிகளில் சருமத்திற்குப் பயன்படுத்துவது பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், கூடுதல் நன்மைகளைத் தரவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சருமம் எந்த சுருக்கமும் இல்லாம பொலிவா, இளமையா இருக்கணுமா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க
Image Source: Freepik