$
Ways To Use Coconut Oil For Face: முகம் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். இதற்கு கிரீம் தவிர, சில எண்ணெய்களும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தலைக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். உண்மையெனில், சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன், மென்மையாக வைக்க உதவுகிறது.
சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை
தேங்காய் எண்ணெயைச் சருமத்திற்குப் பயன்படுத்துவது பல்வேறு வழிகளைக் காணலாம்.
கற்றாழை ஜெல்லுடன்
கற்றாழையில் நிறைந்துள்ள மாலிக் அமிலம் சருமத்தை குறைபாடற்றதாக மாற்றுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் சரும சுருக்கங்கள் மற்றும் தொய்வுகளைத் தடுக்க உதவுகிறது.
தேவையானவை
- கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
- இரண்டு ஸ்பூன் அளவிலான கற்றாழை ஜெல்லுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
- இவை இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி, பின் உலர்த்தி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cinnamon Face Pack: முகத்தில் பருக்கள் சீக்கிரம் மறைய இலவங்கப்பட்டையுடன் இந்த ஒரு பொருள் போதும்
ஆர்கன் எண்ணெயுடன்
ஆர்கன் எண்ணெயில் நிறைந்துள்ள பண்புகள் சருமத்தின் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் பிற வயதான அறிகுறிகள் உருவாவதைத் தவிர்க்க உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் புற ஊதா ஒளியில் இருந்து ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
தேவையானவை
- தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
- ஆர்கன் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
- தேங்காய் எண்ணெயில் சிறிது ஆர்கன் எண்ணெயைச் சேர்க்கவும்.
- இந்த கலவையை முகத்தில் தடவி, பின் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்திக் கழுவலாம்.
- கூடுதல் எண்ணெய் தேவைப்படுமாயின், அதை 1:1 என்ற விகிதத்தில் அதிகரிக்கவும்.
தேங்காய் எண்ணெய் டோனர்
தேங்காய் எண்ணெயுடன், கற்றாழை ஜெல்லைச் சேர்த்து பயன்படுத்துவது சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தவும், துளைகளைக் குறைக்கவும் உதவுகிறது. இது ஆரோக்கியமான பளபளப்பைத் தக்கவைக்கவும் உதவுகிறது. இவை சருமத்திற்கு இயற்கையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
தேவையானவை
- கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
- தேங்காய் எண்ணெயில் சிறிது கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும்.
- இந்த கலவையை சிறிதளவு எடுத்து பருத்தி திண்டு அல்லது விரல் நுனியில் தடவலாம்.
- பின் இதை காற்றில் உலர வைத்து, வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea Turmeric Face Mask: முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கா? மஞ்சளுடன் இந்த ஒரு பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க
சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் நன்மைகள்
தேங்காய் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சரைசராக இருப்பதால், இது சருமத்திற்கு சிறந்த நன்மைகளைத் தருகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்துள்ளதால் இவை பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு நன்மை தருகிறது.
ஈரப்பதத்தை வழங்க
காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதை முகம், கைகள் மற்றும் கால்களில் தடவி வர சருமம் வறட்சியடைவதைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது.
நோய்த்தொற்றைக் குறைக்க
சரும பிரச்சனைகளான அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோலழற்சி போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. இது சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக இருப்பதால், தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தலாம். இவை நீண்ட காலம் நிவாரணம் அளிக்கும் சிறந்த எண்ணெயாகும்.
இயற்கையான ஸ்க்ரப்
தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவது இயற்கையான சுத்தப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெயை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தேய்க்கலாம். இவ்வாறு செய்வது இறந்த செல்களை நீக்கி இயற்கையான மற்றும் அழகான சருமத்தை பெற உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தைப் பொலிவாக்கலாம். இதன் மூலம் மேலே கூறப்பட்ட சரும பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க
Image Source: Freepik