Coconut Oil For Feet: தேங்காய் எண்ணெயின் சில பண்புகள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதன் மருத்துவ குணங்கள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை தோல் தொற்றுக்கள், அரிப்பு மற்றும் வலியை அகற்ற உதவுகிறது. மேலும் இந்த பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த மற்றும் அழுக்கு செல்களை நீக்கி பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
இவை சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன், குதிகால் வெடிப்பு, வறண்ட சருமம் உள்ளிட்ட பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதில் தேங்காய் எண்ணெயைக் கொண்டு தீர்க்கக் கூடிய பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sesame Oil: தீராத மூட்டு வலியால் அவதியா? நல்லெண்ணெயை இப்படி பயன்படுத்துங்க!
தேங்காய் எண்ணெயால் குணமாகும் பாத பிரச்சனைகள்
- நடக்கும் போது, கால்கள் சோர்வடைந்து வலியை ஏற்படுத்தலாம். இந்த கால் வலி மற்றும் வீக்கத்தைப் போக்க தேங்காய் எண்ணெயில் மசாஜ் செய்யலாம். இவ்வாறு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
- குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். தேங்காயில் உள்ள பண்புகள், சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
- உடலின் மற்ற பாகங்களை விட கால்கள் அதிகம் வேலை செய்கின்றன. மேலும் இவையே அடிக்கடி தொற்றுக்கு ஆளாகின்றன. பாதங்களில் அழுக்கு படிவதால் அரிப்பு ஏற்படுகிறது. இந்த அரிப்புகளைப் போக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும்.
- காலணியுடன் நடக்கும் போது, பாதங்களில் கொப்புளங்கள் தோன்றி சருமம் வறண்டு போகலாம். இதிலிருந்து நிவாரணம் பெற தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.
- தேங்காய் எண்ணெயின் பல்வேறு பண்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் தொற்றுநோயைக் குணப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Knee Pain Oil: மூட்டு வலி டக்குனு குறைய இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறைகள்
- கால்களுக்குத் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தும் முன்பாக, கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு, தேங்காய் எண்ணெயை சூடாக்கி பயன்படுத்துவதன் மூலம் வலி மற்றும் வீக்கத்தைப் போக்கலாம்.
- தோல் நோய்த்தொற்றுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவர்கள் நேரடியாக எண்ணெயை சருமத்தில் தடவலாம்.
- கைகளில் தேங்காய் எண்ணெயை எடுத்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு தூங்கும் முன்பாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவுவதன் மூலம் எண்ணெய் சருமத்தில் நன்கு உறிஞ்சப்படுகிறது.
- மேலும் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க தேங்காய் எண்ணெயுடன் 2 முதல் 3 சொட்டு தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Castor Oil For Eyes: கண்பார்வை நல்லா தெரிய மட்டுமல்ல. இந்த பிரச்சனைக்கும் விளக்கெண்ணெய் ஒன்னு போதும்
Image Source: Freepik